சேலம் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியாமல் குடிபோதையில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கண்டித்த காவலர், ஒரு கட்டத்தில் மூக்கை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஹரிஷ். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்த தலைமைக் காவலர் ஒருவர் முகக்கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைமைக் காவலரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் ஓட்டுநரின் மூக்கை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓட்டுநர் ஹரிஷ் காவலர் என்னை தாக்கியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து செவ்வாய்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஹரிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






