ஆண்கள் காதல் என்ற பெயரில் இரண்டு பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். ஆண்கள் தற்போது காதல் என்ற பெயரில் இரண்டு பெண்களை காதலித்து ஒருவரை ஏமாற்றி அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். முதல் பார்த்த பெண்ணை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள்.

பிறகு அதைவிட சிறந்ததாக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டுவிடுவார்கள். பல பெண்களை அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பார்க்கும்போது இன்னொரு சிறந்த பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்ணையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார். ஆண்களின் வாழ்க்கையில் மாட்டிக்கொள்ளாமல், பெண் விட்டு பெண் பாயும் ஆண்களிடம் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்களே முதலில் உங்கள் மனதை உருப்படியான ஒரு பெண்ணை தேர்வுசெய்து மனைவியாக்குங்கள்.

அவர் மேலும்,சிறந்ததாக ஆக வேண்டும் என்று நினைத்தால், அன்போடு அக்கறையோடும் இருந்து அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள் அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் சிறந்த குணங்களை பாராட்டி மகிழ்வித்து , அவரோடு மகிழ்ச்சியாக வாழுங்கள்.
எல்லா குணங்களையும் சிறப்புகளையும் கொண்ட பெண் இவ்வுலகில் யாரும் இல்லை. உங்களுக்கு இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல நினைக்கிறேன். உங்களுக்கு சிறந்த பெண்களை தேடுவதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை,சிறந்த ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

இப்போது நீங்கள் சிறந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாளையே உங்களைவிட சிறந்த ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்துவிட்டால் உங்கள் நிலை என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







