பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு விக்ரமன் இயக்கத்தில் மாதவன்க்கு தோழியாக பிரியமான தோழி படம் ஸ்ரீ தேவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

மேலும், ஸ்ரீ தேவி நடித்த அடுத்தடுத்த படங்களான தேவதையை கண்டேன், தித்திக்குதே போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,2009 ஆண்டில் தொழிலதிபர் ராகுலை திருமணம் செய்துகொண்டு பக்க இல்லத்தரசியாக மாறிவிட்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கணவர் மற்றும் குழந்தை என பிசியாகி விட்டார். இவர்களுக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீ தேவி அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் கமெண்ட்களில் இன்னும் அப்படியே இருக்கீங்களே என்று கூறிவருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






