பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார். அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் பிரபாஸ் அடுத்து நடித்த எல்லா படங்களும் ஐந்து மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு வெளியான சாஹோ படம் பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த படி படம் வெற்றி பெறவில்லை.

தற்போது சாஹோக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் எல்லா படங்களும் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்கப்படுகிறது. அதன் பிறகு தற்போது பிரபாஸ் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அத்தகையில் இப்போது அதிபுருஷ், ராதே ஷியாம், சலார் ஆகிய படங்களும் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
பிரபாஸ் நடிக்கும் எல்லா படங்களும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படிப்பட்ட நிலையில் தற்போது அதிபுருஷ் என்ற படமும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. சாஹோ படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்ததை போன்று தற்போது அதிபுருஷ் படத்திலும் பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் தேர்வாகியுள்ளார்.
“அதிபுருஷ்” படம் ராமாயண கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வருவதால் பிரபாஸின் கேரியர் ஹாலிவுட் லெவலுக்கு உயர்ந்துவிடும் என்று பெரிதும் நம்பி கொண்டிருக்கிறாராம்.
