சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் ஒரே விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் ஸ்ரீ ரெட்டியை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர். அதே சமயம் அங்கு இருந்த கீர்த்தி சுரேஷை யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறது.
இதை வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி. அந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
அதாவது இவரும் நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் விமான நிலையத்தில் இருந்தபோது ஸ்ரீரெட்டியை அடையாளம் கண்ட ரசிகர்கள் அங்கு இருந்த கீர்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. முதலில் இவருக்கும் தெரியவில்லையாம், பிறகு தான் தெரிந்ததாம்.
கீர்த்தி சுரேஷை பார்த்தால் நோயாளி போல் உள்ளதாகவும் அதனால் தான் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறி கீர்த்தி நடித்த “மகாநதி” படம் இயக்குனரால் தான் வெற்றி பெற்றது அவரின் நடிப்பால் அல்ல என்றும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து சாய் பல்லவியை பாராட்டியுள்ளார். இதை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் கடுப்பாகி செம்ம கோபத்தில் உள்ளார்களாம்.