‘யாஸ்’ புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசாவில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வந்தது. இந்த புயல் மேலும் வலுவடைந்து, அதிதீவிர புயலாக மாறி ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் இன்று கரையை கடந்தது.

இது தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், புயல் நேரத்தில் திகா நகரில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த புயலால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க அமைக்கப்பட்ட 134 சுவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த ‘யாஸ்’ புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 கோடி அளவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட உள்ளேன். கள ஆய்வுக்கு பின்னர், சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று இவ்வாறுஅம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






