மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காய்கறி கடைகள், பால் பூத் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சில பகுதிகளில் கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
