ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டது…

வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 தேதி வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூட தடை விதிக்க பட்டுள்ளது.

 

 

இந்த பண்டிகையின் சிறப்பே ஒருவர் மீது ஒருவர் வர்ணங்களை பூசி கொண்டாடப்படுவது தான். இதற்காக மக்கள் எல்லோரும் ஒரு பொது இடங்களில் கூடி இந்த பண்டிகையை கொண்டாடுவர்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதால். மும்பையில் இந்த பண்டிகையை கொண்டாட மாநகராட்சி தடை விதித்துள்ளனர். மேலும், தனியார் மற்றும் பொது இடங்களிலும் ஹோலி பண்டிகையின் கொண்டாட்டங்களை நடத்த கூடாது என்று உத்தரவு விதித்துள்ளனர். மும்பை போன்ற புனேவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

scroll to top