டெல்லி: பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும், ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் அதை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார்.







