ராம்சரணின் அடுத்த படத்தின் ஹீரோயின் எஸ்பிரிஷன் குயின் ??

தெலுங்கு மெகா ஸ்டார் ராம்சரண் நடிக்க விருக்கும் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கயுள்ளனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கயுள்ளார். இந்த படத்துடன் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்.


இந்நிலையில், ராம்சரண் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் இரண்டு வேடத்தில் நடிக்க உள்ளாராம். முதலில் இந்த படத்தின் ஹீரோயின் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.


தற்போது ராம்சரணின் மற்றொரு வேடத்திற்கு ஹீரோயினை தேடி வந்தநிலையில் ராஷ்மிகாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டங்களில் செய்தி வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course