கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை எரிக்க இடம் இல்லாத காரணத்தால் பூங்காக்கள் எல்லாம் சுடுகாடுகளாக மாறும் கொடுமை நேர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் டெல்லியில் அதிகரிப்பால் ஒரு பக்கம் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் இன்றி அவதி அடைகிறார்கள்.
மற்றொரு பக்கம் இறந்த சடலங்களை எரிக்க இடம் இல்லை. இதனால் சடலங்களை எரிக்க டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உறவினர்கள் சடலங்களுடன் இரவு பகலாக காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பெரும்பாலான சுடுகாடுகளில் இடம் இல்லாததால் வாகனம் நிறுத்தும் இடங்களில் சடலங்கள் எரியூட்டப்படுகிறது. பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள், காலி மைதானங்கள் சுடுகாடுகளாக மாறி வரும் மோசமன ஏற்பட்டுள்ளது.

அதே போல், காசிப்பூர் இடுகாட்டிலும் வாகன நிறுத்துமிடங்களில் கூடுதலாக 20 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சாராய் காலே கான் எனும் இடுகாட்டில் 50 நடைமேடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






