மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 25,800-ஐ கடந்துள்ளதால், சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மட்டுமின்றி சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களிலும் தொற்று பரவல் வேகமடுத்துள்ளதால், நாடு முழுவதும் இரண்டாம் கட்ட அலை பரவத் தொடங்கியதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,441 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,05,160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,68,457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 5,08,41,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
