உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. உத்தரகாண்ட் ஹல்த்வானி என்னும் இடத்தில் சுசிலா திவாரி மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையை திருமண ஊர்வலம் ஒன்று கடந்து சென்றது இதனை கண்ட மருத்துவமனையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் முழு கவச உடை அணிந்து உற்சாக நடனம் ஆடினார்.

கொரோனா பரவலுக்கு இடையே மன உளைச்சலுடன் உயிரிழப்புகளை கண்டு மன வருத்தத்தில் இருந்த அந்த ஓட்டுனர் இசையைக் கேட்டதும் தன்னை மறந்து நடனமாடியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






