வாசனையும் சுவையும் மிகுந்த ரோஜா குல்கந்து மருத்துவப் பலன்கள் நிறைந்தது.இதன் மருத்துவ பலன்களை ஆயுர்வேதம் சிலாகித்து கூறுகிறது. ரோஜா குல்கந்து என்றாலே பொதுவாக பீடாவில் வைத்து தரும் இனிப்பு என்று தான் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பர்.முதலில் ரோஜா குல்கந்து பற்றி தெரிந்து கொள்வோம்.

ரோஜா குல்கந்து எப்படி செய்கிறார்கள்?
பன்னீர் ரோஜா எனும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் கொண்டு தான் ரோஜா குல்கந்து, ரோஸ் வாட்டர், ரோஸ் எஸன்ஸ் , ரோஸ் ஜாம் என அனைத்தும் செய்கிறார்கள். துருக்கியை தாயகமாகக் கொண்ட ரெசிபிக்கள் இவை.
ரோஜா குல்கந்து செய்முறை :
ரோஜா இதழ்களை தேன் மற்றும் கற்கண்டில் ஊறவைத்து தயாரிக்கிறார்கள்.
ரோஜா ஜாம் செய்முறை :

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து , நீரில் கழுவி , நீர் உலர்ந்ததும் இதழ்களின் அளவுக்கு பாதியளவு சர்க்கரையும் எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து ஃப்ரிட்ஜில் இரண்டு நாட்கள் வைத்து பிறகு எடுத்து கொள்ளவும். இதனை தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த இதழ்களை போட்டு பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் இதழ்களை எடுத்து தனியே வைக்கவும். ரோஜா இதழ் நீரில் சர்க்கரை சேர்த்து கிளறவும். முக்கால் பாகம் ஜாம் போல வரும் போது எடுத்த வைத்து இருந்த இதழ்களை சேர்த்து கொள்ளவும். இப்போது ஜாம் தயார்.
ரோஜா குல்கந்து பலன்கள் :
* அல்சர் , வாய்ப்புண் உட்பட செரிமான பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
* உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.
* சிலருக்கு வியர்வை நாற்றம் மிகுதியாக இருக்கும் அவர்கள் தொடர்ந்து ரோஜா குல்கந்து உண்ணும் போது உடல் நாற்றம் நீங்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிகளை குறைக்கிறது.
* உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்பதால் உடல் புத்துணர்வு பெறும்.
* செரிமானத்தை தூண்டுகிறது.
* கோடைக்காலத்தில் வரும் சன் ஸ்ட்ரோக் வராமல் இருக்க ரோஜா குல்கந்து உண்ணுவதால் சாத்தியம்.
* நரம்புகளுக்கு வலுவூட்டும் மேலும் மன அழுத்தத்தை குறைக்கும்.
* இரத்த சோகையை விரட்டும் என்பதால் சருமம் பொலிவு பெறும்.
* பல் ஈறுகளை வலுவாக்கும்.
* இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






