கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், இதன்மூலம் நீர்க்கட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இலவங்கப்பட்டை :
இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு காலையில் தேனீர் அல்லது மஞ்சள் டீயில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம்.
நீர்க்கட்டிக்கு தீர்வாக வெந்தயம் :
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தில்ல் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் போது நீர்க்கட்டி வளர ஏதுவாகிறது. வெந்தயமும் , வெந்தயக் கீரையும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். ஊறவைத்த நீரையும் பருக வேண்டும்.
துளசி இலைகள் :

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆண்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதால் இதனை கட்டுப்படுத்த துளசி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். இது ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து :
நெல்லிக்காய் இரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு அல்லாமல் உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுப்படும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






