
உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் 8 இடங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயின் 2ஆம் கட்ட அலையால் தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றின் தாக்கம் அதிகமாக பரவுவதால் இரவு நேர ஊரடங்கு வரும் சனிக்கிழமை முதல் அமல்படுத்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பெங்களூர், மைசூர், மங்களூர்,குல்பர்கா, பிடார், தும்கூர், உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்த உள்ளனர்.இது இரவு நேர ஊரடங்கு இல்லை என்றும் கொரோனா ஊரடங்கு என்று குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






