இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விரைவில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கப்படும். விண்ணப்பம் வாங்க தொடங்கிய உடன், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு முகமை தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
