ஆந்திர மாநிலம் சிகாகுளம் மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுத்ததால், நண்பர் உதவியுடன் இருசக்கர வாகனத்திலேயே அந்த உடலை எடுத்துச் சென்றுள்ளார் அவரது மகன். கில்லே கிராமத்தை சேர்ந்த பெண்மணி செஞ்சுலாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது மகன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அதனால் தாயின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அழைத்துள்ளார். கொரோனா அச்சத்தின் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் தன் நண்பன் உதவியுடன் இருசக்கர வாகனத்திலேயே தாயின் சடலத்தை வைத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காவல்துறையினர் இதை கண்டும், கண்டுகொள்ளாமலும் அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






