கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் எனறு சந்தேகப்பட்டு பெண்ணின் உடலை எரிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உடலை அவரது கணவர் சைக்கிளில் வைத்து தள்ளி சென்ற கொடுமை உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. ஜான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரின் மனைவியான ராஜ்குமாரி தேவி உயிரிழந்தார்.

ஆனால் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக ஜான்பூர் மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் உள்ளூர் மயானத்தில் அந்த பெண்ணின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற அந்த முதியவர், மனைவியின் உடலை ஒரு சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டார். சற்று தூரம் சென்ற அவர் சோர்வடைந்து ஒரு இடத்தில் தனது மனைவியின் உடலை சாலையில் கிடத்தி விட்டு அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இந்த சம்பவம் பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







