புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர் .
வில்லியனூர் பகுதியை அடுத்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்திருந்தார்.

அப்போது பொறையூர்பேட் , பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. அங்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ என்பதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த ப்ரதீஷ், அவரது 15 வயது சகோதரனையும் போலீசார் பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் ப்ரதீஷ் -ஐ ராஜ்ஸ்ரீ காதலித்து வந்ததாக தெரிந்தது. அவ்வப்போது ,தன் நண்பனுடன் ராஜ்ஸ்ரீ பேசியதை ப்ரதீஷ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது . இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜஸ்ரீ-ஐ தன் சகோதரனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ப்ரதீஷையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






