மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ கண்முன்னே தொண்டர் தீக்குளிப்பு

மதுரையில் ம.தி.மு.க தொண்டர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம் துவங்க இருந்த இடத்தில் ம.தி.மு.க தொண்டர் ரவி என்பவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த தொண்டர்கள் அவர் மீதான தீயை அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்குளித்த ரவி தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Self Immolation by MDMK candidate

தீக்குளித்த ரவி விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி இணை அமைப்பாளராக உள்ளார்.

இயற்க்கை அன்னை எப்படியாவது தீக்குளித்த தொண்டரை காப்பாற்ற வேண்டும் என்று வைகோ கண்ணீர் மல்க பேசினார். தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடகூடாது என்று ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறிய வைகோ, தீக்குளித்த தொண்டரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்ய கட்சி பிரமுகர்களை கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, கண்ணீர் மல்க மேடையில் பேசினார் வைகோ. ரவி, ஆண்டுதோறும் சொந்த செலவில் காலண்டர் அச்சிட்டு கொடுப்பவர்.

scroll to top