ஐதராபாத் HDFC ஏடிஎம்-ல் துப்பாக்கி சூடு நடத்தி ரூ.5 லட்சம் கொள்ளை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள HDFC ஏடிஎம்-ல் ஊழியர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருக்கும் போது பட்டப்பகலில் காவலாளி மற்றும் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.


ஐதராபாத் குகட் பகுதியில் உள்ள HDFC ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியர்களும், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் சென்றுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரை முதலில் துப்பாக்கியால் சுட்டு நிலைகுலைய வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பணம் நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர்களையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மொத்தம் 12 லட்சம்  நிரப்ப சென்ற நிலையில், 5 லட்சம்  பணத்தை பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top