சமையல் – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Sat, 30 Jun 2018 18:28:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 சமையல் – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு சட்னி! https://tamilnewslive.com/cooking-tips/kongu-special-kollu-chutney/ https://tamilnewslive.com/cooking-tips/kongu-special-kollu-chutney/#respond Sat, 30 Jun 2018 18:28:09 +0000 https://tamilnewslive.com/?p=2591 கொங்கு நாடு எனப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி வரை உள்ள பகுதிகளில், சமையலுக்கு பயறு வகைகள், சிறுதானியங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். சமையல் செய்முறைகளில் தேங்காய் குறைவாக தான் இருக்கும். எளிதாக செய்ய கூடிய ரெசிபிகள் நிறைய உண்டு. “கொளுத்தவனுக்கு கொள்ளு”, என்பது போல, ஞாயிறன்று அசைவம் என்றால், திங்கள் கிழமை கண்டிப்பாக கொள்ளு ஏதோ ஒரு வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அதாவது முதல் நாள் அசைவம் உண்டு, கொழுப்பு உடலில் சேமித்து இருந்தால் […]

The post கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு சட்னி! appeared first on Tamil News Live.

]]>
கொங்கு நாடு எனப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி வரை உள்ள பகுதிகளில், சமையலுக்கு பயறு வகைகள், சிறுதானியங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். சமையல் செய்முறைகளில் தேங்காய் குறைவாக தான் இருக்கும். எளிதாக செய்ய கூடிய ரெசிபிகள் நிறைய உண்டு.

“கொளுத்தவனுக்கு கொள்ளு”, என்பது போல, ஞாயிறன்று அசைவம் என்றால், திங்கள் கிழமை கண்டிப்பாக கொள்ளு ஏதோ ஒரு வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அதாவது முதல் நாள் அசைவம் உண்டு, கொழுப்பு உடலில் சேமித்து இருந்தால் மறுநாள் கொள்ளு உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. உடலில் உள்ள கொழுப்பு கரையும் என்ற நம்பிக்கை உண்டு. வாரம் ஒரு முறையாவது கொள்ளு சேர்த்துக் கொள்வார்கள். எலும்புகளுக்கு உறுதியும் நரம்புகளுக்கு வலுவும் தருவதால் கொள்ளு வகைகளை உணவுகளை நிறைய சேர்த்து கொள்ளவும்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையும் மணமும் நிரம்பிய கொள்ளு சட்னி, அற்புதமான காம்பினேஷன்.

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
வரமிளகாய் – ருசிக்கேற்ப
புளி – சிறிது
கறிவேப்பிலை
கடுகு
உப்பு

செய்முறை :

* கொள்ளை வாசனை வரும் வரை மெல்லிய தீயில் கருக விடாமல் வறுத்து எடுக்கவும்.

* தேங்காய் துருவல், வரமிளகாய், உப்பு, புளி உடன் வறுத்த கொள்ளு சேர்த்து சட்னி பதத்திற்கு மிக்ஸியில் அரைக்கவும்.

வழக்கமாக சட்னியை தாளிப்பது போல கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சூடான இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். கொள்ளுப்பருப்பு கடைந்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த முறையில் நன்கு சாப்பிடுவார்கள்.


Horse Gram called as Kollu Paruppu is a popular South Indian Pulse. People belong to Kongu Nadu use high amount of Pulses and Millets. It covers district of Coimbatore, Erode, upto Pollachi. Horse Gram is rich in nutrients. It contains calcium, phosphorous, iron and protein. It is low in calories and has high protein and fiber content. Follow the steps given to prepare tasty Horse Gram Chutney.


The post கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு சட்னி! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/kongu-special-kollu-chutney/feed/ 0 2591
மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு https://tamilnewslive.com/health-tips/pirandai-kuzhambu-medicinal-benefits/ https://tamilnewslive.com/health-tips/pirandai-kuzhambu-medicinal-benefits/#respond Sat, 30 Jun 2018 16:33:11 +0000 https://tamilnewslive.com/?p=2578 பிரண்டையில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அஜீரணத்தை போக்கி, செரிமானத்தை தூண்டும். எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றுக்கு உணவே மருந்தாக பிரண்டை பயன்படுகிறது. தேவையானவை : பிரண்டை – 1 கப் சின்ன வெங்காயம் – 10 பல் பூண்டு – 10 பல் புளி நல்லெண்ணெய் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் மல்லித்தூள் […]

The post மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு appeared first on Tamil News Live.

]]>
Pirandai பிரண்டையில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அஜீரணத்தை போக்கி, செரிமானத்தை தூண்டும். எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றுக்கு உணவே மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

தேவையானவை :

பிரண்டை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10 பல்
பூண்டு – 10 பல்
புளி
நல்லெண்ணெய்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க :

கறிவேப்பிலை
கடுகு
வெந்தயம்
வெல்லம்

Pirandai Curryசெய்முறை :

* இளம் பிரண்டையை கிள்ளிக் கொள்ளவும்.

* இளம்பிரண்டை ஒரு கப். ஒரு இஞ்ச் நீளத்துக்கு கட் பண்ணி கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு நல்லா பத்து நிமிடம் நிறம்மாறி வதங்கும் வரை வதக்கவும். சரியாக வதக்க வில்லை என்றால் உண்ணும் போது வாய் நமைச்சல் எடுக்கும்.

* சின்னவெங்காயம், பூண்டு பத்து பல் எடுத்து உரித்துக் கொள்ளவும்.

* வெங்காயம் சிறியது என்றால் அப்படியே முழுசா போட்டுக்கவும் .

* வாணலியில் நல்லெண்ணெய் (நிறைய விட்டால்தான் நன்றாக இருக்கும்) விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும்.

* கறிவேப்பிலை ஒரு வரமிளகாய். வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* குழம்பு மிளகாய் பொடி, மல்லிதாதூள் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறவும்.

* கரைத்த புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* வதக்கிய பிரண்டையை சேர்த்து வேகவிடவும்.

* ருசி பார்த்து தேவையெனில் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.

* எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு, இறக்கும்போது கொஞ்சமா வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடலாம்.

மண் சட்டியில் செய்யும் போது சுவை கூடும். மாதம் ஒரு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.


Pirandai has vast medicinal benefits. This medicinal plant is used in Ayurvedic as well as modern drug development. It treats diabetes, obesity, stomach disorders, menstrual pains, osteoporosis, bone fractures, malaria, asthma, peptic ulcer, cancer, metabolic syndrome and heart related risks. It also serves as a blood purifier It is largely found in India and Sri Lanka. It can prepared as Pirandai Kuzhambu recipe to gain its benefits.


The post மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health-tips/pirandai-kuzhambu-medicinal-benefits/feed/ 0 2578
நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான பீர்க்கங்காய் சட்னி https://tamilnewslive.com/cooking-tips/peerkangai-chutney-diabetic-patients/ https://tamilnewslive.com/cooking-tips/peerkangai-chutney-diabetic-patients/#respond Fri, 29 Jun 2018 19:12:56 +0000 https://tamilnewslive.com/?p=2541 விலை மலிவான நாட்டுக்காய்களில் ஒன்றான பீர்க்கங்காய் பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது. 100 கிராம் பீர்க்கங்காய் வெறும் 18 கலோரி தான். நீரிழிவு நோயாளிகள், எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம். பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோபிளேவின், துத்தநாகம், இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு ஊட்டம் […]

The post நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான பீர்க்கங்காய் சட்னி appeared first on Tamil News Live.

]]>
Peerkangaiவிலை மலிவான நாட்டுக்காய்களில் ஒன்றான பீர்க்கங்காய் பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது. 100 கிராம் பீர்க்கங்காய் வெறும் 18 கலோரி தான். நீரிழிவு நோயாளிகள், எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோபிளேவின், துத்தநாகம், இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.

இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு ஊட்டம் தரும். இத்தன்னை நன்மைதரும் பீர்க்கங்காயில் ஒரு சட்னி செய்வோமே!

பீர்க்கங்காய் சட்னி

Ridge Gourd Chutneyபீர்க்கங்காய் கொண்டு சட்னி இதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் – 1 தோல் சீவி நறுக்கியது
சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு
தக்காளி – 1
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 3
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1மேசைக்கரண்டி

தாளிப்பதற்கு :

கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை – 2 இணுக்கு
எண்ணெய்

செய்முறை :

1. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, நன்கு வதக்கவும்.

2. வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

3. பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

4. ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகர பதத்தில் அரைக்கவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றவும்.

இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!

குறிப்பு :

1. இளம் பீர்க்கங்காய் தான் சுவையாக இருக்கும்.
2. நறுக்கும் போது சிறு துண்டை சுவைத்து பார்ககவும்.கசந்தால் பயன்படுத்த வேண்டாம்.
3. தோலை மிகவும் அழுத்தமாக சீவி எடுக்க வேண்டாம். இளம் காய் என்றால் தோலுடன் சாப்பிடுவது நலம்.


Ridge Gourd “Peerkangai in Tamil” has the capacity to purify blood. It contains Vitamin C, B, Zinc, Iron, Fibre, Manganese, Magnesium, Calcium and Phosphorus, Beta-Carotene. It helps keep away colds, gives good mood and vitality, strengthens our immune system, helps to treat anemia, helps to maintain strength of bones. We have a recipe called “Peerkangai Chutney” that helps diabetic patients to maintain sugar level in blood and urine. The recipe also helps weight loss.


The post நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான பீர்க்கங்காய் சட்னி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/peerkangai-chutney-diabetic-patients/feed/ 0 2541
வீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி? https://tamilnewslive.com/cooking-tips/prepare-desiccated-coconut-home/ https://tamilnewslive.com/cooking-tips/prepare-desiccated-coconut-home/#respond Fri, 29 Jun 2018 19:06:58 +0000 https://tamilnewslive.com/?p=2554 உலர்ந்த வெள்ளை வெளேரென்று இருக்கும் டிரை தேங்காய் பொடி இனிப்பு வகைகளில் நாம் தேங்காய் மணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்போம். தேங்காய் கிடைக்காத இடங்களில் இந்த உலர் தேங்காய் பொடி வரப்பிரசாதம் ஆனால் இதன் விலையோ அதிகம். தேங்காய் அதிகம் விளையும் நம் தமிழகத்தில் இனிப்புகள் செய்வதற்கு மட்டுமே டிரை தேங்காய் துருவல் பயன்படுகிறது. குறைந்த செலவில் நம் வீட்டிலே செய்து பார்க்கலாமா? உலர் தேங்காய் துருவல் நன்கு விளைந்த முற்றிய தேங்காயை துருவி அதன் ஈரப்பதத்தை […]

The post வீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
உலர்ந்த வெள்ளை வெளேரென்று இருக்கும் டிரை தேங்காய் பொடி இனிப்பு வகைகளில் நாம் தேங்காய் மணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்போம். தேங்காய் கிடைக்காத இடங்களில் இந்த உலர் தேங்காய் பொடி வரப்பிரசாதம் ஆனால் இதன் விலையோ அதிகம். தேங்காய் அதிகம் விளையும் நம் தமிழகத்தில் இனிப்புகள் செய்வதற்கு மட்டுமே டிரை தேங்காய் துருவல் பயன்படுகிறது. குறைந்த செலவில் நம் வீட்டிலே செய்து பார்க்கலாமா?

உலர் தேங்காய் துருவல்

நன்கு விளைந்த முற்றிய தேங்காயை துருவி அதன் ஈரப்பதத்தை தேவையான அளவுக்கு குறைத்து, இயந்திரங்களின் உதவியால் உலர வைக்கிறார்கள். அதன் மணமும், சுவையும் மாறாமல் அதேசமயம் நீண்ட நாள் பயன்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

குறைந்த செலவில், குறைந்த அளவில் நமக்கு தேவையான அளவு உலர் தேங்காய் துருவல்களை வீட்டில் செய்வது சிக்கன நடவடிக்கையில் வரும்.

Desiccated Coconutநன்கு முற்றிய தேங்காயை உடைத்து கொள்ளவும். கொப்பரைத் தேங்காயாக இருந்தால் மிகவும் நல்லது. அதன் வெளிப்புறம் உள்ள ப்ரௌன் நிற தோலை கத்தியின் உதவியால் சீவி எடுத்தால், வெறும் வெள்ளை நிறபகுதி கிடைக்கும். அதனை மிக்ஸியில் அரைத்தால் வெள்ளை வெளேரென்று தேங்காய் துருவல் கிடைக்கும். இதனை அடிக்கனமான வாணலியில் மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும். ஈரம் போகும் வரை வறுக்கவும். மணமான உலர் தேங்காய் துருவல் தயார். ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் ஆறுமாதம் வரை கெடாமல் இருக்கும்.

உடலுக்கு நன்மை பயக்கும் தேங்காய்

தேங்காயில் உள்ள கொழுப்பானது அதாவது லாரிக் அமிலத்தில் (lauric acid) உடலுக்கு தேவையான HDL, கொலஸ்டிரால் உள்ளது. இந்த நல்ல கொலஸ்டிரால் இதய நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

தேங்காயில் உள்ள மாங்கனீசு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கு படுத்துகிறது. இரத்தம் உறைதலுக்கு மாங்கனீசு அவசியம். கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ள மாங்கனீசு அவசியம்.


Desiccated coconut are the dried, finely shredded flesh of the coconut that is unsweetened. Presence of Lauric acid in coconut reduces risk of heart disease which raise the good HDL cholesterol in blood. It is easy to digest and fights abdominal weight gain. Desiccated Coconut powder preparation at home is highly economical.


The post வீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/prepare-desiccated-coconut-home/feed/ 0 2554
புதுவித சுவையில் வாழைக்காய் ரசம் https://tamilnewslive.com/cooking-tips/vazhakkai-rasam-recipe/ https://tamilnewslive.com/cooking-tips/vazhakkai-rasam-recipe/#respond Thu, 28 Jun 2018 16:17:31 +0000 https://tamilnewslive.com/?p=2509 விலை மலிவும், எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் காய்களில் வாழைக்காயும் ஒன்று. பெரும்பாலும் வாழைக்காயை வறுவல், புட்டு, பொரியல் செய்தும், கூட்டு, அவியல், சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள். மொந்தன், நேந்திரன் நாட்டு ரக வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்றபடி கிடைக்கும் ரகங்களை சமைப்பவர்கள் உண்டு. வாழைக்காய் சாப்பிடுவதால், வாயுத் தொல்லை ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்கள் இருப்பதுடன், […]

The post புதுவித சுவையில் வாழைக்காய் ரசம் appeared first on Tamil News Live.

]]>
விலை மலிவும், எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் காய்களில் வாழைக்காயும் ஒன்று. பெரும்பாலும் வாழைக்காயை வறுவல், புட்டு, பொரியல் செய்தும், கூட்டு, அவியல், சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள்.

மொந்தன், நேந்திரன் நாட்டு ரக வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்றபடி கிடைக்கும் ரகங்களை சமைப்பவர்கள் உண்டு.

வாழைக்காய் சாப்பிடுவதால், வாயுத் தொல்லை ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்கள் இருப்பதுடன், நார்ச்சத்தும் உள்ளது. ஃபோலிக் அமிலம் இயற்கையாக folate ஆக வாழைக்காயில் உள்ளது.

Accompanimentவழக்கமான வாழைக்காய் செயல்முறைகளில் இருந்து வித்தியாசமான சுவையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யும் வாழைக்காய் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

Preparation time – 15 minutes
Cooking time – 20 minutes
Category – soup/ veg

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 1
சின்ன வெங்காயம் – 5-6
பூண்டு – 3-4 பல்
சீரகம்
வெந்தயம்
கடுகு
பெருங்காயம்
தக்காளி – 1
புளி
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – கையளவு
கொத்தமல்லி
உப்பு

செய்முறை :

Unripe Banana Slices* வாழைக்காயை தோல் சீவி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயம் , பூண்டு இரண்டையும் நசுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெட்டிய வாழைக்காய், தக்காளி, நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* வாழைக்காய் அரைவேக்காடு வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

தாளிக்க

வாணலியில் நெய்/ எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, காரம் தேவையெனில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இதனை வெந்த வாழைக்காய் கலவையில் கொட்டவும்.கொத்தமல்லித்தூவி இறக்கவும்.

மணக்கும் வாழைக்காய் ரசம் தயார்!


There are lot of varieties in bananas. Ripe bananas can be eaten raw, whereas unripe bananas can be used to make recipes. Unripe bananas(Vazhaikkai) look green and waxy and they taste bitter. It contains about 40 percent starch. It take longer to digest due to low glycemic index. It contains enough nutrients such as Vitamin B6, Manganese, Magnesium, Folate, Vitamin C, Potassium, Dietary Fiber. Here we have a new flavored recipe called “Vazhakkai Rasam” made with simple steps.


The post புதுவித சுவையில் வாழைக்காய் ரசம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/vazhakkai-rasam-recipe/feed/ 0 2509
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்! https://tamilnewslive.com/cooking-tips/ash-gourd-cooling-property/ https://tamilnewslive.com/cooking-tips/ash-gourd-cooling-property/#respond Thu, 28 Jun 2018 11:29:50 +0000 https://tamilnewslive.com/?p=2498 திருஷ்டி கழிக்க பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வேண்டியது பூசணிக்காயை அல்ல, வெள்ளைப்பூசணியின் பயன்களைப் பார்த்து அதற்கு தான் திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பயன் உணராமல் வெறும் கல்யாண விருந்தில் அல்வாவிற்க்கு என்று மாற்றி விட்டோம். வெள்ளை பூசணியில் உள்ள சத்துக்கள் வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி ,கே, பி 6 யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , நியாசின், மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. […]

The post உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்! appeared first on Tamil News Live.

]]>
Venpoosanikkaiதிருஷ்டி கழிக்க பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வேண்டியது பூசணிக்காயை அல்ல, வெள்ளைப்பூசணியின் பயன்களைப் பார்த்து அதற்கு தான் திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பயன் உணராமல் வெறும் கல்யாண விருந்தில் அல்வாவிற்க்கு என்று மாற்றி விட்டோம்.

வெள்ளை பூசணியில் உள்ள சத்துக்கள்

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி ,கே, பி 6 யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , நியாசின், மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

வெண் பூசணியின் பயன்கள்

* வெண்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நல்லது.

* அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி நிவாரணம் தரும்.

* அதிக காரமான உணவுகள் மற்றும் நேராநேரத்திற்க்கு உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டியை குணமாக்க வெள்ளை பூசணி சாறு உதவும்.

* உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் அடிக்கடி வெண்பூசணிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

Venpoosani Pachadiதேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 200 கிராம்
தயிர் – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* பூசணிக்காயை தோல் நீக்கி மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

* இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெட்டிய வெண்பூசணி துண்டுகளை மிகக்குறைந்த அளவில் நீர் சேர்த்து அதனுடன் அளவாக உப்பு சேர்த்து வேகவிடவும்.

* வெந்த வெண்பூசணி துண்டுகள் சூடு ஆறியதும், அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து கலக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.

* உப்பு தேவையெனில் சேர்த்து உடனே பரிமாறவும்.

இந்த தயிர் பச்சடிக்கு சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என்று கிழங்குகளை ஃபிரை செய்து சாதத்துடன் சாப்பிட தேவாமிர்தம் தான்.

குறிப்பு :

1. இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.

2. வெண்பூசணிக்காயை துருவி பிழிந்தால் கிடைக்கும் சாறுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் குடிக்கலாம்.

3. மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மழை, பனிக்காலத்தில் சாறெடுத்து குடிப்பதை தவிர்க்கவும்.


Ash gourd(Venpoosani or Vellaipoosanikkai in Tamil)  is a good diet plan for diabetic patients and obese persons as it has high water content. It helps to keep the body cool. It has cooling property that relieves acidity and peptic ulcers. Seed of Ash Gourd promotes growth of tissue. Ash gourd stabilizes nerve cells and helps constipation. It is rich in Vitamin B, C, K, B6, Calcium, Potassium, Iron, Niacin, Manganese, Magnesium, fibre. When it is taken as juice mixed with honey, it purifies blood. It can be prepared as pachadi added along with yogurt.


The post உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/ash-gourd-cooling-property/feed/ 0 2498
கதம்ப சாம்பார் https://tamilnewslive.com/cooking-tips/kadamba-sambar/ https://tamilnewslive.com/cooking-tips/kadamba-sambar/#respond Thu, 28 Jun 2018 08:14:55 +0000 https://tamilnewslive.com/?p=2439 பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பாரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். இதனை ஏழுகறிக்குழம்பு என்றும் அழைப்பார்கள். விருப்பப்பட்ட அத்தனை நாட்டு காய்கறிகளும் சேர்த்து செய்வார்கள். பொங்கல் அறுவடையின் போது கிடைக்கும் பச்சை மொச்சை, பச்சை துவரை போட்டும் செய்யலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் – 1 கத்திரிக்காய் – 3 மாங்காய் – 1 கேரட் – 1 உருளைக்கிழங்கு […]

The post கதம்ப சாம்பார் appeared first on Tamil News Live.

]]>
Pongal Specialபொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பாரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். இதனை ஏழுகறிக்குழம்பு என்றும் அழைப்பார்கள். விருப்பப்பட்ட அத்தனை நாட்டு காய்கறிகளும் சேர்த்து செய்வார்கள். பொங்கல் அறுவடையின் போது கிடைக்கும் பச்சை மொச்சை, பச்சை துவரை போட்டும் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 1
கத்திரிக்காய் – 3
மாங்காய் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
அவரைக்காய் – 3
பீன்ஸ் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
துவரம் பருப்பு – 200 கிராம்
புளி கரைத்தது – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

Kadamba Sambar* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து வேகவிடவும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும். முதலிலே புளிச்சேர்த்தால் காய்கறி ஒரே சீராக வேகாது.

* சுவையான வெண்பொங்கலுக்கு தோதான கதம்ப சாம்பார் ரெடி!!!


Kadamba Sambar is one of the sambar varieties, served as a curry on marriage function and festive occasions. It is a great combination for venpongal and a special recipe for pongal festival. It is a mixed vegetable sambar recipe as vegetables like carrot, brinjal, drumstick, tomatoes, french beans are added to sambhar. This sambhar recipe can be made delicious by following the above procedure.


The post கதம்ப சாம்பார் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/kadamba-sambar/feed/ 0 2439
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு https://tamilnewslive.com/cooking-tips/paruppu-urundai-morkulambu-recipe/ https://tamilnewslive.com/cooking-tips/paruppu-urundai-morkulambu-recipe/#respond Thu, 28 Jun 2018 05:42:46 +0000 https://tamilnewslive.com/?p=2460 சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான குழம்பில் மோர்குழம்பும் தான். ருசியான மோர்க்குழம்பும், ஒரு துண்டு ஊறுகாய் இருந்தால் போதும், வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்து விடும். இதே மோர்க்குழம்பில் காய்க்கு பதிலாக பருப்பு உருண்டை, அதுவும் மோரில் ஊறிய பருப்பு உருண்டை ருசியோ ருசி தான். பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/2 கப் மிளகாய் வத்தல் – 4 உப்பு – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 4 […]

The post பருப்பு உருண்டை மோர்க்குழம்பு appeared first on Tamil News Live.

]]>
Paruppu Urundaiசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான குழம்பில் மோர்குழம்பும் தான். ருசியான மோர்க்குழம்பும், ஒரு துண்டு ஊறுகாய் இருந்தால் போதும், வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்து விடும். இதே மோர்க்குழம்பில் காய்க்கு பதிலாக பருப்பு உருண்டை, அதுவும் மோரில் ஊறிய பருப்பு உருண்டை ருசியோ ருசி தான்.

பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/2 கப்
மிளகாய் வத்தல் – 4
உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 4 சிட்டிகை
எண்ணெய் – 4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 இணுக்கு

மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் :

தயிர் – 2 கப் (கட்டி இல்லாமல் கடைந்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் – 3/4 கப்
பச்ச மிளகாய் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை

தாளிக்க :

கடுகு
உளுத்தம்பருப்பு
மிளகாய் வத்தல்
கருவேப்பிலை
பெருங்காயம் – 1 சிட்டிகை
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது

செய்முறை :

* பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

Paruppu Urundai* சிறிது நேரம் ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* இட்லி தட்டில் வைத்து மூடி ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக விடவும். அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* வேகவைத்த பின்னர் தனியாக எடுத்து ஆற விடவும்

* மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* தயிரில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.

* உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.

* ஆறவைத்த உருண்டைகளை மோர் குழம்பில் போட்டு ஒரு கொதி விடவும்.

* கரண்டியால் மெதுவாக உருண்டைகளை திருப்பிவிடவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவினால் ருசியான பருப்பு உருண்டை மோர் குழம்பு தயார்.


Paruppu Urundai Mor Kuzhambu is a popular delicious recipe in TamilNadu. It is also called Bonda More Kuzhambu. The recipe made with dal and butter milk is served as a curry for lunch. Easy steps to make paruppu urundai and more kuzhambu are give above. Follow the steps to prepare this yummy recipe.


The post பருப்பு உருண்டை மோர்க்குழம்பு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/paruppu-urundai-morkulambu-recipe/feed/ 0 2460
வித்யாசமான சுவையில் முட்டை அவியல்!! https://tamilnewslive.com/cooking-tips/different-delicious-egg-aviyal-recipe/ https://tamilnewslive.com/cooking-tips/different-delicious-egg-aviyal-recipe/#respond Tue, 26 Jun 2018 15:01:36 +0000 https://tamilnewslive.com/?p=2390 அனைத்து வயது பெண்களும் மாதம் ஒரு முறையாவது உளுந்து சோறு செய்து சாப்பிடுவது நல்லது ஏனெனில் உளுந்து சோறு இடுப்பு எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால சமையல் பட்டியலில் இடம்பெற்ற உளுந்து சோறுக்கு நாட்டுக்கோழி குழம்பு, முட்டைக்குழம்பு வரிசையில் முட்டை அவியலும் சிறந்த காம்பினேஷன். மீன் அவியல், பலாக்காய் அவியல், கீரை அவியல், பாகற்காய் அவியல் வரிசையில் முட்டை அவியலும் ருசியான உணவு தான். முட்டை அவியல் Cooking time – 20 minutes Preparation time […]

The post வித்யாசமான சுவையில் முட்டை அவியல்!! appeared first on Tamil News Live.

]]>
அனைத்து வயது பெண்களும் மாதம் ஒரு முறையாவது உளுந்து சோறு செய்து சாப்பிடுவது நல்லது ஏனெனில் உளுந்து சோறு இடுப்பு எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால சமையல் பட்டியலில் இடம்பெற்ற உளுந்து சோறுக்கு நாட்டுக்கோழி குழம்பு, முட்டைக்குழம்பு வரிசையில் முட்டை அவியலும் சிறந்த காம்பினேஷன்.

மீன் அவியல், பலாக்காய் அவியல், கீரை அவியல், பாகற்காய் அவியல் வரிசையில் முட்டை அவியலும் ருசியான உணவு தான்.

முட்டை அவியல்

Muttai AviyalCooking time – 20 minutes
Preparation time – 15 minutes
Category – non-veg/side dish

தேவையான பொருட்கள் :
முட்டை – 3-5 எண்ணிக்கை
தேங்காய் துருவல் – 1/2 மூடி
சீரகம் – 1 ஸ்பூன்
வரமிளகாய் – ருசிக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை
கடுகு, எண்ணெய் – தாளிக்க
மஞ்சள் தூள்
உப்பு
பூண்டு – 2 பல் (விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்)

செய்முறை :

Muttai * முட்டைகளை வேகவைத்து ஓடு நீக்கி வைக்கவும்.

* தேங்காய் துருவல், சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம் இரண்டு, (பூண்டு மணம் விரும்புபவர்கள்), மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொற கொறவென்று அனைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

* நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

* அதனுடன் அரைத்த அவியல் மசாலா விழுதை சேர்த்து வதக்கி மசாலா வேகத்தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.

* பாதி வெந்து வரும் போது இரண்டாக கீறிய வேக வைத்த முட்டையை மசாலாவில் போட்டு வேக விடவும்.

* நீர் வற்றி அவியல் பதத்திற்கு வரும் போது இறக்கவும்.


Egg Aviyal / Mutta Aviyal is a delicious recipe mainly eaten as side dish which is popular in Southern Tamilnadu and Kerala. The usual aviyal includes all the vegetables but this one has only boiled eggs, drumstick can also be added along with eggs. Boiled eggs are sliced into two and put into fried onion with masala. Follow the easy steps to prepare delicious Egg Aviyal.


The post வித்யாசமான சுவையில் முட்டை அவியல்!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/different-delicious-egg-aviyal-recipe/feed/ 0 2390
சாம்பார் மராத்திய ரெசிபியா? https://tamilnewslive.com/cooking-tips/sambar-recipe/ https://tamilnewslive.com/cooking-tips/sambar-recipe/#respond Tue, 26 Jun 2018 10:53:20 +0000 https://tamilnewslive.com/?p=2355 தினமும் சாம்பாரா என்று அலுத்துக் கொள்பவர்கள் கூட வெளியூர் பயணமாக தமிழ் நாட்டு எல்லையை தாண்டியதும் தான் தெரியும் ஒரு கரண்டி சாம்பார் இருந்தால் போதுமே என்று மனம் தவிக்கும். பின்ன பெரிய ஹோட்டலில் இருந்து சின்ன ஹோட்டல் வரை சாம்பார் கலரில் விதவிதமாக திரவத்தை பரிமாறுவார்கள். நல்ல தமிழ்நாடு ஹோட்டல் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம். சாம்பார் வரலாறு சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தின் கண்டுபிடிப்பு. தஞ்சை சரபோஜி மன்னரின் […]

The post சாம்பார் மராத்திய ரெசிபியா? appeared first on Tamil News Live.

]]>
Sambhar Recipeதினமும் சாம்பாரா என்று அலுத்துக் கொள்பவர்கள் கூட வெளியூர் பயணமாக தமிழ் நாட்டு எல்லையை தாண்டியதும் தான் தெரியும் ஒரு கரண்டி சாம்பார் இருந்தால் போதுமே என்று மனம் தவிக்கும். பின்ன பெரிய ஹோட்டலில் இருந்து சின்ன ஹோட்டல் வரை சாம்பார் கலரில் விதவிதமாக திரவத்தை பரிமாறுவார்கள். நல்ல தமிழ்நாடு ஹோட்டல் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்.

சாம்பார் வரலாறு

சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தின் கண்டுபிடிப்பு. தஞ்சை சரபோஜி மன்னரின் காலத்தில் கண்டறிந்த உணவு என்று ஒரு கருத்து நிலவுகிறது. தஞ்சை வாழ் மராத்தியர்கள் கொண்டு வந்த ரெசிபி என்பதை மறுத்து கூற நம்மிடம் சான்றுகள் உள்ளன.

சான்றுகள்

தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது உறுதியாகிறது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”

(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[2])
என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.

“கறியமுது பல சம்பாரம்”—- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

“நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக”—- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு,

மாராட்டியர்களின் ஆட்சியின் கீழ் தஞ்சை 1675 ல் தான் வந்தது. அதற்கு முன்பே கல்வெட்டில் சாம்பாருக்கான சான்றுகள் உள்ளது. தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.

சாம்பாரின் வகைகள்

பட்டியலிட இடம் பற்றாது இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாம்.

* கதம்ப சாம்பார் அல்லது கல்யாண சாம்பார்

* அரைத்துவிட்ட சாம்பார்

Vegetables for Sambar* முருங்கைக்காய் – முள்ளங்கி – அவரைக்காய் – கத்தரிக்காய் – வெங்காயம் – கீரை – பருப்புடன் சேர்த்து சமைக்கும் காய்களுக்கேற்ப சாம்பாரின் சுவை இருக்கும்.

* இட்லி சாம்பார்

Sambarதென்னிந்திய உணவுகள் என்று பொதுப்படுத்தினால் சாம்பார், ரசம், இட்லி, தோசை ஆகப்பொதுவானது. சின்ன சின்ன மாற்றங்கள் உடன் விதவிதமான ருசியும் மணமும் கொண்டது.

நமது தமிழக சாம்பாரும், கேரள சாம்பாரும் அதிக ருசியும், மணமும் கொண்டது. ஒவ்வொரு பெண்ணின் கைமணமும் சாம்பாரில் மணக்கும் என்பது அந்த காலம். ஒவ்வொரு பிராண்ட் சாம்பார் மசாலாவுக்கு ஏற்ப சாம்பார் மணக்கும் என்பது இந்த காலம்.


Sambar, also spelled sambhar/sambaar is a popular recipe in South India as it is originated in Tamil Nadu. Vegetables such as carrot, brinjal, pumpkin, , drumstick, bottle gourd, ash gourd, sambar cucumber, tomatoes, french beans when added to sambhar it gives unique delicious taste. Idli sambar/Tiffin sambar is suitable for all idli and dosa varieties. Indian spices like coriander seeds, cumin seeds, mustard seeds, black peppercorns, dry red chilies, fenugreek seeds, cinnamon are used to make sambar powder that helps to make sambar easily.


The post சாம்பார் மராத்திய ரெசிபியா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking-tips/sambar-recipe/feed/ 0 2355