மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு

Pirandai

பிரண்டையில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அஜீரணத்தை போக்கி, செரிமானத்தை தூண்டும். எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றுக்கு உணவே மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

தேவையானவை :

பிரண்டை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10 பல்
பூண்டு – 10 பல்
புளி
நல்லெண்ணெய்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க :

கறிவேப்பிலை
கடுகு
வெந்தயம்
வெல்லம்

Pirandai Curry

செய்முறை :

* இளம் பிரண்டையை கிள்ளிக் கொள்ளவும்.

* இளம்பிரண்டை ஒரு கப். ஒரு இஞ்ச் நீளத்துக்கு கட் பண்ணி கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு நல்லா பத்து நிமிடம் நிறம்மாறி வதங்கும் வரை வதக்கவும். சரியாக வதக்க வில்லை என்றால் உண்ணும் போது வாய் நமைச்சல் எடுக்கும்.

* சின்னவெங்காயம், பூண்டு பத்து பல் எடுத்து உரித்துக் கொள்ளவும்.

* வெங்காயம் சிறியது என்றால் அப்படியே முழுசா போட்டுக்கவும் .

* வாணலியில் நல்லெண்ணெய் (நிறைய விட்டால்தான் நன்றாக இருக்கும்) விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும்.

* கறிவேப்பிலை ஒரு வரமிளகாய். வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* குழம்பு மிளகாய் பொடி, மல்லிதாதூள் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறவும்.

* கரைத்த புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* வதக்கிய பிரண்டையை சேர்த்து வேகவிடவும்.

* ருசி பார்த்து தேவையெனில் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.

* எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு, இறக்கும்போது கொஞ்சமா வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடலாம்.

மண் சட்டியில் செய்யும் போது சுவை கூடும். மாதம் ஒரு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.


Pirandai has vast medicinal benefits. This medicinal plant is used in Ayurvedic as well as modern drug development. It treats diabetes, obesity, stomach disorders, menstrual pains, osteoporosis, bone fractures, malaria, asthma, peptic ulcer, cancer, metabolic syndrome and heart related risks. It also serves as a blood purifier It is largely found in India and Sri Lanka. It can prepared as Pirandai Kuzhambu recipe to gain its benefits.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas