உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்!

Venpoosanikkai

திருஷ்டி கழிக்க பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வேண்டியது பூசணிக்காயை அல்ல, வெள்ளைப்பூசணியின் பயன்களைப் பார்த்து அதற்கு தான் திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பயன் உணராமல் வெறும் கல்யாண விருந்தில் அல்வாவிற்க்கு என்று மாற்றி விட்டோம்.

வெள்ளை பூசணியில் உள்ள சத்துக்கள்

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி ,கே, பி 6 யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , நியாசின், மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

வெண் பூசணியின் பயன்கள்

* வெண்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நல்லது.

* அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி நிவாரணம் தரும்.

* அதிக காரமான உணவுகள் மற்றும் நேராநேரத்திற்க்கு உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டியை குணமாக்க வெள்ளை பூசணி சாறு உதவும்.

* உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் அடிக்கடி வெண்பூசணிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

Venpoosani Pachadi

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 200 கிராம்
தயிர் – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* பூசணிக்காயை தோல் நீக்கி மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

* இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெட்டிய வெண்பூசணி துண்டுகளை மிகக்குறைந்த அளவில் நீர் சேர்த்து அதனுடன் அளவாக உப்பு சேர்த்து வேகவிடவும்.

* வெந்த வெண்பூசணி துண்டுகள் சூடு ஆறியதும், அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து கலக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.

* உப்பு தேவையெனில் சேர்த்து உடனே பரிமாறவும்.

இந்த தயிர் பச்சடிக்கு சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என்று கிழங்குகளை ஃபிரை செய்து சாதத்துடன் சாப்பிட தேவாமிர்தம் தான்.

குறிப்பு :

1. இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.

2. வெண்பூசணிக்காயை துருவி பிழிந்தால் கிடைக்கும் சாறுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் குடிக்கலாம்.

3. மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மழை, பனிக்காலத்தில் சாறெடுத்து குடிப்பதை தவிர்க்கவும்.


Ash gourd(Venpoosani or Vellaipoosanikkai in Tamil)  is a good diet plan for diabetic patients and obese persons as it has high water content. It helps to keep the body cool. It has cooling property that relieves acidity and peptic ulcers. Seed of Ash Gourd promotes growth of tissue. Ash gourd stabilizes nerve cells and helps constipation. It is rich in Vitamin B, C, K, B6, Calcium, Potassium, Iron, Niacin, Manganese, Magnesium, fibre. When it is taken as juice mixed with honey, it purifies blood. It can be prepared as pachadi added along with yogurt.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas