கதம்ப சாம்பார்

Pongal Special

பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பாரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். இதனை ஏழுகறிக்குழம்பு என்றும் அழைப்பார்கள். விருப்பப்பட்ட அத்தனை நாட்டு காய்கறிகளும் சேர்த்து செய்வார்கள். பொங்கல் அறுவடையின் போது கிடைக்கும் பச்சை மொச்சை, பச்சை துவரை போட்டும் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 1
கத்திரிக்காய் – 3
மாங்காய் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
அவரைக்காய் – 3
பீன்ஸ் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
துவரம் பருப்பு – 200 கிராம்
புளி கரைத்தது – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

Kadamba Sambar

* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து வேகவிடவும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும். முதலிலே புளிச்சேர்த்தால் காய்கறி ஒரே சீராக வேகாது.

* சுவையான வெண்பொங்கலுக்கு தோதான கதம்ப சாம்பார் ரெடி!!!


Kadamba Sambar is one of the sambar varieties, served as a curry on marriage function and festive occasions. It is a great combination for venpongal and a special recipe for pongal festival. It is a mixed vegetable sambar recipe as vegetables like carrot, brinjal, drumstick, tomatoes, french beans are added to sambhar. This sambhar recipe can be made delicious by following the above procedure.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas