பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

Paruppu Urundai

சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான குழம்பில் மோர்குழம்பும் தான். ருசியான மோர்க்குழம்பும், ஒரு துண்டு ஊறுகாய் இருந்தால் போதும், வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்து விடும். இதே மோர்க்குழம்பில் காய்க்கு பதிலாக பருப்பு உருண்டை, அதுவும் மோரில் ஊறிய பருப்பு உருண்டை ருசியோ ருசி தான்.

பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/2 கப்
மிளகாய் வத்தல் – 4
உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 4 சிட்டிகை
எண்ணெய் – 4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 இணுக்கு

மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் :

தயிர் – 2 கப் (கட்டி இல்லாமல் கடைந்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் – 3/4 கப்
பச்ச மிளகாய் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை

தாளிக்க :

கடுகு
உளுத்தம்பருப்பு
மிளகாய் வத்தல்
கருவேப்பிலை
பெருங்காயம் – 1 சிட்டிகை
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது

செய்முறை :

* பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

Paruppu Urundai

* சிறிது நேரம் ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* இட்லி தட்டில் வைத்து மூடி ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக விடவும். அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* வேகவைத்த பின்னர் தனியாக எடுத்து ஆற விடவும்

* மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* தயிரில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.

* உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.

* ஆறவைத்த உருண்டைகளை மோர் குழம்பில் போட்டு ஒரு கொதி விடவும்.

* கரண்டியால் மெதுவாக உருண்டைகளை திருப்பிவிடவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவினால் ருசியான பருப்பு உருண்டை மோர் குழம்பு தயார்.


Paruppu Urundai Mor Kuzhambu is a popular delicious recipe in TamilNadu. It is also called Bonda More Kuzhambu. The recipe made with dal and butter milk is served as a curry for lunch. Easy steps to make paruppu urundai and more kuzhambu are give above. Follow the steps to prepare this yummy recipe.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas