சாம்பார் மராத்திய ரெசிபியா?

Sambhar Recipe

தினமும் சாம்பாரா என்று அலுத்துக் கொள்பவர்கள் கூட வெளியூர் பயணமாக தமிழ் நாட்டு எல்லையை தாண்டியதும் தான் தெரியும் ஒரு கரண்டி சாம்பார் இருந்தால் போதுமே என்று மனம் தவிக்கும். பின்ன பெரிய ஹோட்டலில் இருந்து சின்ன ஹோட்டல் வரை சாம்பார் கலரில் விதவிதமாக திரவத்தை பரிமாறுவார்கள். நல்ல தமிழ்நாடு ஹோட்டல் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்.

சாம்பார் வரலாறு

சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தின் கண்டுபிடிப்பு. தஞ்சை சரபோஜி மன்னரின் காலத்தில் கண்டறிந்த உணவு என்று ஒரு கருத்து நிலவுகிறது. தஞ்சை வாழ் மராத்தியர்கள் கொண்டு வந்த ரெசிபி என்பதை மறுத்து கூற நம்மிடம் சான்றுகள் உள்ளன.

சான்றுகள்

தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது உறுதியாகிறது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”

(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[2])
என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.

“கறியமுது பல சம்பாரம்”—- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

“நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக”—- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு,

மாராட்டியர்களின் ஆட்சியின் கீழ் தஞ்சை 1675 ல் தான் வந்தது. அதற்கு முன்பே கல்வெட்டில் சாம்பாருக்கான சான்றுகள் உள்ளது. தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.

சாம்பாரின் வகைகள்

பட்டியலிட இடம் பற்றாது இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாம்.

* கதம்ப சாம்பார் அல்லது கல்யாண சாம்பார்

* அரைத்துவிட்ட சாம்பார்

Vegetables for Sambar

* முருங்கைக்காய் – முள்ளங்கி – அவரைக்காய் – கத்தரிக்காய் – வெங்காயம் – கீரை – பருப்புடன் சேர்த்து சமைக்கும் காய்களுக்கேற்ப சாம்பாரின் சுவை இருக்கும்.

* இட்லி சாம்பார்

Sambar

தென்னிந்திய உணவுகள் என்று பொதுப்படுத்தினால் சாம்பார், ரசம், இட்லி, தோசை ஆகப்பொதுவானது. சின்ன சின்ன மாற்றங்கள் உடன் விதவிதமான ருசியும் மணமும் கொண்டது.

நமது தமிழக சாம்பாரும், கேரள சாம்பாரும் அதிக ருசியும், மணமும் கொண்டது. ஒவ்வொரு பெண்ணின் கைமணமும் சாம்பாரில் மணக்கும் என்பது அந்த காலம். ஒவ்வொரு பிராண்ட் சாம்பார் மசாலாவுக்கு ஏற்ப சாம்பார் மணக்கும் என்பது இந்த காலம்.


Sambar, also spelled sambhar/sambaar is a popular recipe in South India as it is originated in Tamil Nadu. Vegetables such as carrot, brinjal, pumpkin, , drumstick, bottle gourd, ash gourd, sambar cucumber, tomatoes, french beans when added to sambhar it gives unique delicious taste. Idli sambar/Tiffin sambar is suitable for all idli and dosa varieties. Indian spices like coriander seeds, cumin seeds, mustard seeds, black peppercorns, dry red chilies, fenugreek seeds, cinnamon are used to make sambar powder that helps to make sambar easily.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas