புதுவித சுவையில் வாழைக்காய் ரசம்

விலை மலிவும், எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் காய்களில் வாழைக்காயும் ஒன்று. பெரும்பாலும் வாழைக்காயை வறுவல், புட்டு, பொரியல் செய்தும், கூட்டு, அவியல், சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள்.

மொந்தன், நேந்திரன் நாட்டு ரக வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்றபடி கிடைக்கும் ரகங்களை சமைப்பவர்கள் உண்டு.

வாழைக்காய் சாப்பிடுவதால், வாயுத் தொல்லை ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்கள் இருப்பதுடன், நார்ச்சத்தும் உள்ளது. ஃபோலிக் அமிலம் இயற்கையாக folate ஆக வாழைக்காயில் உள்ளது.

Accompaniment

வழக்கமான வாழைக்காய் செயல்முறைகளில் இருந்து வித்தியாசமான சுவையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யும் வாழைக்காய் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

Preparation time – 15 minutes
Cooking time – 20 minutes
Category – soup/ veg

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 1
சின்ன வெங்காயம் – 5-6
பூண்டு – 3-4 பல்
சீரகம்
வெந்தயம்
கடுகு
பெருங்காயம்
தக்காளி – 1
புளி
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – கையளவு
கொத்தமல்லி
உப்பு

செய்முறை :

Unripe Banana Slices

* வாழைக்காயை தோல் சீவி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயம் , பூண்டு இரண்டையும் நசுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெட்டிய வாழைக்காய், தக்காளி, நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* வாழைக்காய் அரைவேக்காடு வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

தாளிக்க

வாணலியில் நெய்/ எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, காரம் தேவையெனில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இதனை வெந்த வாழைக்காய் கலவையில் கொட்டவும்.கொத்தமல்லித்தூவி இறக்கவும்.

மணக்கும் வாழைக்காய் ரசம் தயார்!


There are lot of varieties in bananas. Ripe bananas can be eaten raw, whereas unripe bananas can be used to make recipes. Unripe bananas(Vazhaikkai) look green and waxy and they taste bitter. It contains about 40 percent starch. It take longer to digest due to low glycemic index. It contains enough nutrients such as Vitamin B6, Manganese, Magnesium, Folate, Vitamin C, Potassium, Dietary Fiber. Here we have a new flavored recipe called “Vazhakkai Rasam” made with simple steps.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas