நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான பீர்க்கங்காய் சட்னி

Peerkangai

விலை மலிவான நாட்டுக்காய்களில் ஒன்றான பீர்க்கங்காய் பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது. 100 கிராம் பீர்க்கங்காய் வெறும் 18 கலோரி தான். நீரிழிவு நோயாளிகள், எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோபிளேவின், துத்தநாகம், இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.

இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு ஊட்டம் தரும். இத்தன்னை நன்மைதரும் பீர்க்கங்காயில் ஒரு சட்னி செய்வோமே!

பீர்க்கங்காய் சட்னி

Ridge Gourd Chutney

பீர்க்கங்காய் கொண்டு சட்னி இதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் – 1 தோல் சீவி நறுக்கியது
சின்ன வெங்காயம் – கைப்பிடி அளவு
தக்காளி – 1
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 3
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1மேசைக்கரண்டி

தாளிப்பதற்கு :

கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை – 2 இணுக்கு
எண்ணெய்

செய்முறை :

1. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, நன்கு வதக்கவும்.

2. வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

3. பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

4. ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகர பதத்தில் அரைக்கவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றவும்.

இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!

குறிப்பு :

1. இளம் பீர்க்கங்காய் தான் சுவையாக இருக்கும்.
2. நறுக்கும் போது சிறு துண்டை சுவைத்து பார்ககவும்.கசந்தால் பயன்படுத்த வேண்டாம்.
3. தோலை மிகவும் அழுத்தமாக சீவி எடுக்க வேண்டாம். இளம் காய் என்றால் தோலுடன் சாப்பிடுவது நலம்.


Ridge Gourd “Peerkangai in Tamil” has the capacity to purify blood. It contains Vitamin C, B, Zinc, Iron, Fibre, Manganese, Magnesium, Calcium and Phosphorus, Beta-Carotene. It helps keep away colds, gives good mood and vitality, strengthens our immune system, helps to treat anemia, helps to maintain strength of bones. We have a recipe called “Peerkangai Chutney” that helps diabetic patients to maintain sugar level in blood and urine. The recipe also helps weight loss.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas