வித்யாசமான சுவையில் முட்டை அவியல்!!

அனைத்து வயது பெண்களும் மாதம் ஒரு முறையாவது உளுந்து சோறு செய்து சாப்பிடுவது நல்லது ஏனெனில் உளுந்து சோறு இடுப்பு எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால சமையல் பட்டியலில் இடம்பெற்ற உளுந்து சோறுக்கு நாட்டுக்கோழி குழம்பு, முட்டைக்குழம்பு வரிசையில் முட்டை அவியலும் சிறந்த காம்பினேஷன்.

மீன் அவியல், பலாக்காய் அவியல், கீரை அவியல், பாகற்காய் அவியல் வரிசையில் முட்டை அவியலும் ருசியான உணவு தான்.

முட்டை அவியல்

Muttai Aviyal

Cooking time – 20 minutes
Preparation time – 15 minutes
Category – non-veg/side dish

தேவையான பொருட்கள் :
முட்டை – 3-5 எண்ணிக்கை
தேங்காய் துருவல் – 1/2 மூடி
சீரகம் – 1 ஸ்பூன்
வரமிளகாய் – ருசிக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை
கடுகு, எண்ணெய் – தாளிக்க
மஞ்சள் தூள்
உப்பு
பூண்டு – 2 பல் (விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்)

செய்முறை :

Muttai

* முட்டைகளை வேகவைத்து ஓடு நீக்கி வைக்கவும்.

* தேங்காய் துருவல், சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம் இரண்டு, (பூண்டு மணம் விரும்புபவர்கள்), மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொற கொறவென்று அனைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

* நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

* அதனுடன் அரைத்த அவியல் மசாலா விழுதை சேர்த்து வதக்கி மசாலா வேகத்தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.

* பாதி வெந்து வரும் போது இரண்டாக கீறிய வேக வைத்த முட்டையை மசாலாவில் போட்டு வேக விடவும்.

* நீர் வற்றி அவியல் பதத்திற்கு வரும் போது இறக்கவும்.


Egg Aviyal / Mutta Aviyal is a delicious recipe mainly eaten as side dish which is popular in Southern Tamilnadu and Kerala. The usual aviyal includes all the vegetables but this one has only boiled eggs, drumstick can also be added along with eggs. Boiled eggs are sliced into two and put into fried onion with masala. Follow the easy steps to prepare delicious Egg Aviyal.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top