கொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு சட்னி!

கொங்கு நாடு எனப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி வரை உள்ள பகுதிகளில், சமையலுக்கு பயறு வகைகள், சிறுதானியங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். சமையல் செய்முறைகளில் தேங்காய் குறைவாக தான் இருக்கும். எளிதாக செய்ய கூடிய ரெசிபிகள் நிறைய உண்டு.

“கொளுத்தவனுக்கு கொள்ளு”, என்பது போல, ஞாயிறன்று அசைவம் என்றால், திங்கள் கிழமை கண்டிப்பாக கொள்ளு ஏதோ ஒரு வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அதாவது முதல் நாள் அசைவம் உண்டு, கொழுப்பு உடலில் சேமித்து இருந்தால் மறுநாள் கொள்ளு உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. உடலில் உள்ள கொழுப்பு கரையும் என்ற நம்பிக்கை உண்டு. வாரம் ஒரு முறையாவது கொள்ளு சேர்த்துக் கொள்வார்கள். எலும்புகளுக்கு உறுதியும் நரம்புகளுக்கு வலுவும் தருவதால் கொள்ளு வகைகளை உணவுகளை நிறைய சேர்த்து கொள்ளவும்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையும் மணமும் நிரம்பிய கொள்ளு சட்னி, அற்புதமான காம்பினேஷன்.

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
வரமிளகாய் – ருசிக்கேற்ப
புளி – சிறிது
கறிவேப்பிலை
கடுகு
உப்பு

செய்முறை :

* கொள்ளை வாசனை வரும் வரை மெல்லிய தீயில் கருக விடாமல் வறுத்து எடுக்கவும்.

* தேங்காய் துருவல், வரமிளகாய், உப்பு, புளி உடன் வறுத்த கொள்ளு சேர்த்து சட்னி பதத்திற்கு மிக்ஸியில் அரைக்கவும்.

வழக்கமாக சட்னியை தாளிப்பது போல கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சூடான இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். கொள்ளுப்பருப்பு கடைந்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த முறையில் நன்கு சாப்பிடுவார்கள்.


Horse Gram called as Kollu Paruppu is a popular South Indian Pulse. People belong to Kongu Nadu use high amount of Pulses and Millets. It covers district of Coimbatore, Erode, upto Pollachi. Horse Gram is rich in nutrients. It contains calcium, phosphorous, iron and protein. It is low in calories and has high protein and fiber content. Follow the steps given to prepare tasty Horse Gram Chutney.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas