வீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி?

உலர்ந்த வெள்ளை வெளேரென்று இருக்கும் டிரை தேங்காய் பொடி இனிப்பு வகைகளில் நாம் தேங்காய் மணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்போம். தேங்காய் கிடைக்காத இடங்களில் இந்த உலர் தேங்காய் பொடி வரப்பிரசாதம் ஆனால் இதன் விலையோ அதிகம். தேங்காய் அதிகம் விளையும் நம் தமிழகத்தில் இனிப்புகள் செய்வதற்கு மட்டுமே டிரை தேங்காய் துருவல் பயன்படுகிறது. குறைந்த செலவில் நம் வீட்டிலே செய்து பார்க்கலாமா?

உலர் தேங்காய் துருவல்

நன்கு விளைந்த முற்றிய தேங்காயை துருவி அதன் ஈரப்பதத்தை தேவையான அளவுக்கு குறைத்து, இயந்திரங்களின் உதவியால் உலர வைக்கிறார்கள். அதன் மணமும், சுவையும் மாறாமல் அதேசமயம் நீண்ட நாள் பயன்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

குறைந்த செலவில், குறைந்த அளவில் நமக்கு தேவையான அளவு உலர் தேங்காய் துருவல்களை வீட்டில் செய்வது சிக்கன நடவடிக்கையில் வரும்.

Desiccated Coconut

நன்கு முற்றிய தேங்காயை உடைத்து கொள்ளவும். கொப்பரைத் தேங்காயாக இருந்தால் மிகவும் நல்லது. அதன் வெளிப்புறம் உள்ள ப்ரௌன் நிற தோலை கத்தியின் உதவியால் சீவி எடுத்தால், வெறும் வெள்ளை நிறபகுதி கிடைக்கும். அதனை மிக்ஸியில் அரைத்தால் வெள்ளை வெளேரென்று தேங்காய் துருவல் கிடைக்கும். இதனை அடிக்கனமான வாணலியில் மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும். ஈரம் போகும் வரை வறுக்கவும். மணமான உலர் தேங்காய் துருவல் தயார். ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் ஆறுமாதம் வரை கெடாமல் இருக்கும்.

உடலுக்கு நன்மை பயக்கும் தேங்காய்

தேங்காயில் உள்ள கொழுப்பானது அதாவது லாரிக் அமிலத்தில் (lauric acid) உடலுக்கு தேவையான HDL, கொலஸ்டிரால் உள்ளது. இந்த நல்ல கொலஸ்டிரால் இதய நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

தேங்காயில் உள்ள மாங்கனீசு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கு படுத்துகிறது. இரத்தம் உறைதலுக்கு மாங்கனீசு அவசியம். கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ள மாங்கனீசு அவசியம்.


Desiccated coconut are the dried, finely shredded flesh of the coconut that is unsweetened. Presence of Lauric acid in coconut reduces risk of heart disease which raise the good HDL cholesterol in blood. It is easy to digest and fights abdominal weight gain. Desiccated Coconut powder preparation at home is highly economical.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas