குழந்தைகள் – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 22 Mar 2021 14:52:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 குழந்தைகள் – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 பிறந்த குழந்தைகளுக்கு நிறங்கள் தெரியுமா? https://tamilnewslive.com/child-care/your-newborn-babys-growth-and-development-simple-activities-for-babies-0-to-6-months/ https://tamilnewslive.com/child-care/your-newborn-babys-growth-and-development-simple-activities-for-babies-0-to-6-months/#respond Mon, 22 Mar 2021 14:52:05 +0000 https://tamilnewslive.com/?p=5558 குழந்தைகள் பிறந்த உடனேயே அழத் தொடங்கி விடும் ஆனால் குழந்தைகள் கண்களில் இருந்து கண்ணீர் வராது ஏன் தெரியுமா? குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுது கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை எனவே தான் பிறந்த குழந்தைகள் அழும் பொழுது கண்ணீர் வருவது இல்லை. மூன்று மாதங்கள் கழித்தே கண்ணீர் சுரப்பிகள் வளர ஆரம்பிக்கும்.      பிறந்த குழந்தையின் தலையில் மற்றும் உடலில் மென்மையான முடிகள் அதிகமாக இருக்கும் சில நாட்களில் அவை உதிர்ந்து விடும். பிறந்த குழந்தை தன் […]

The post பிறந்த குழந்தைகளுக்கு நிறங்கள் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
குழந்தைகள் பிறந்த உடனேயே அழத் தொடங்கி விடும் ஆனால் குழந்தைகள் கண்களில் இருந்து கண்ணீர் வராது ஏன் தெரியுமா?

குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுது கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை எனவே தான் பிறந்த குழந்தைகள் அழும் பொழுது கண்ணீர் வருவது இல்லை. மூன்று மாதங்கள் கழித்தே கண்ணீர் சுரப்பிகள் வளர ஆரம்பிக்கும். 

 

 

பிறந்த குழந்தையின் தலையில் மற்றும் உடலில் மென்மையான முடிகள் அதிகமாக இருக்கும் சில நாட்களில் அவை உதிர்ந்து விடும். பிறந்த குழந்தை தன் தாயிடம் போனதும் அழுகையை நிறுத்தி விடும் ஏனென்றால்  கருவில் இருக்கும் பொழுதே தனது தாயின் குரல் மற்றும் ஸ்பரிசத்தை நன்கு அறிந்திருக்கும்.தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வு தரும்.

 பிறந்த குழந்தையால் நீண்ட தூரம் பார்க்க முடியாது?

 

 

பிறந்த குழந்தையால் இருபது அடி தூரம் மட்டுமே பார்க்க முடியும்.பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டுமே தெரியும் வளர வளர அனைத்து நிறங்களையும் இனம் பிரித்தறியும். பிறந்த குழந்தையால் மனிதர்களை நன்கு பார்க்க முடியுமாம் எனவே தான் யாருடைய முகத்தையாவது பார்த்தவுடன் புன்னகைக்கிறது குழந்தை. பொம்மைகளை விட மனித முகத்தை பார்க்கத்தான் குழந்தைகள் விரும்பும்.

பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் ?

சாதாரண மனிதர்களுக்கு மொத்தம் 206 எலும்புகள் இருக்கும் ஆனால் பிறந்த குழந்தைகளின் உடலில் முதன்முதலில்  270 எலும்புகள் உருவாகி இருக்கும். வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பில் உள்ள எலும்புகள் இணைந்து  206 எலும்புகளாகின்றன.

குழந்தைக்கு ஏன் கழுத்து நிற்பதில்லை?

பிறந்த குழந்தையின் கழுத்து தசைகள் மென்மையாக இருக்கும். ஆகவே தான் குழந்தையின் கழுத்தில் ஒரு கையை தாங்கலாக கொடுத்து தூங்குவார்கள். மூன்று மாதங்களில் கழுத்து தசைகள் வலுவடையும்.

 பிறந்த குழந்தையின் மலம் ஏன் பச்சை நிறத்தில் உள்ளது?

தாயின் வயிற்றில் குழந்தை வளரும் போது கழிவுகள் எல்லாம் குழந்தையின் மலக்குடலில் சேர்ந்து இருக்கும்.இதனை மெகோனியம் என்பர். குழந்தை பிறந்த உடன் அந்த கழிவுகள் முழுவதும் வெளியேறும்.

 

The post பிறந்த குழந்தைகளுக்கு நிறங்கள் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/your-newborn-babys-growth-and-development-simple-activities-for-babies-0-to-6-months/feed/ 0 5558
குழந்தைகளை பாடாய்படுத்தும் நெஞ்சுசளி https://tamilnewslive.com/child-care/phlegm-children/ https://tamilnewslive.com/child-care/phlegm-children/#respond Sat, 30 Jun 2018 05:57:04 +0000 https://tamilnewslive.com/?p=2542 சளிப்பிடித்ததோ அல்லது சனி பிடித்ததோ? எனும் அளவிற்கு பெரியவர்களையே “மூக்கால்”, அழவைக்கும் சளி, குழந்தைக்கு பிடித்தால்? குழந்தையோடு சேர்ந்து தாயும் படாதபாடு படுவார். சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி(Bronchitis) அல்லது நிமோனியா(Pneumonia) போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், […]

The post குழந்தைகளை பாடாய்படுத்தும் நெஞ்சுசளி appeared first on Tamil News Live.

]]>
சளிப்பிடித்ததோ அல்லது சனி பிடித்ததோ? எனும் அளவிற்கு பெரியவர்களையே “மூக்கால்”, அழவைக்கும் சளி, குழந்தைக்கு பிடித்தால்? குழந்தையோடு சேர்ந்து தாயும் படாதபாடு படுவார்.

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி(Bronchitis) அல்லது நிமோனியா(Pneumonia) போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

Nenju Saliஆங்கில மருத்துவத்தில் அருமையான மருந்துகள் உள்ளது அதேசமயம் அதன் பக்கவிளைவுகள் பற்றியும் யோசிக்க வேண்டும். லேசான சளி, காய்ச்சல் எனும் போது ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்று வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொண்டு சிகிச்சை எடுத்து கொள்ளலாம். பாட்டி வைத்தியம் போல சளிக்கு தீர்வு வைத்துள்ளது. குழந்தைகளை சிறு வயதிலேயே ஆங்கில மருந்துகளுக்கு பழக்கப்படுத்தாமல், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் போது ஆரோக்கியத்துடன் வலம் வருவார்கள்.

சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத வழிமுறைகளை பார்ப்போம். சளி, இருமல், காய்ச்சல் அதிகமாகி குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு, உணவு உட்கொள்ள சிரமப்பட்டு கொண்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* தூதுவளை பொடி

நாட்டு மருந்து கடைகளில் தூதுவளை பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து ஒரு டீஸ்பூன் அளவு பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். சளியின் தீவிரம் பொருத்து மூன்று வேளையும் கொடுக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகளால் வரும் சளியினை கூட தூதுவளை வெளியேற்றும். நுரையீரலை பலப்படுத்தும்.

* ஆடாதோடா சாறு

நெஞ்சு சளி கரைய ஆடாதோடா இலை, தேன் கலந்த மருந்து ஆடாதோடா இலைத் தளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்..

* கற்பூரவள்ளி சாறு

Karpooravalli Leavesஓமவல்லி எனும் கற்பூரவள்ளியை சாறு எடுத்து தேனுடன் கொடுக்கலாம். கற்பூரவல்லியை நீரில் கொதிக்க வைத்து ஆறிய நீரை குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.

Lemon Extract* எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சம அளவில் எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்கவும்.

* நல்ல சூடான பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து இரவு உறங்கும் முன் குடிக்க கொடுக்கலாம். வளர்ந்த குழந்தை எனில் மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து கொடுக்கலாம்.

குழந்தையின் உடல்நிலையை பொறுத்து தான் எந்த வைத்தியம் தேவை என்பதை தாயால் தான் முடிவு செய்ய முடியும். நோயின் அறிகுறிகள், அதன் தீவிரம் பொருத்து மருத்துவ வசதி தேவையெனில் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது தான் சிறந்த அணுகுமுறை.


Excess mucous or phlegm may be a symptom of Bronchitis or Pneumonia. It can be accompanied by Coughing, wheezing, nasal bleeding, fatigue. Drinking tea or warm lemon water mixed with honey is a natural remedy to soothe a sore throat. Intake of hot milk mixed with palm sugar, turmeric powder, pepper before sleep helps to relieve the problem.


The post குழந்தைகளை பாடாய்படுத்தும் நெஞ்சுசளி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/phlegm-children/feed/ 0 2542
குழந்தைக்கு அவசியம் சுய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவையா? https://tamilnewslive.com/child-care/personal-hygiene-awareness-children/ https://tamilnewslive.com/child-care/personal-hygiene-awareness-children/#respond Thu, 28 Jun 2018 15:24:43 +0000 https://tamilnewslive.com/?p=2495 தன் சுகாதாரம் (personal hygiene) என்பது தன் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துவது தான். தன் உடலை சுத்தமாக பேணும் போது உறுதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் இடுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல தன் உடலை சுத்தப்படுத்த பழக்கப்படுத்த வேண்டும். காலைக்கடன்களில் ஆரம்பித்து பொதுவெளியில் சுகாதாரமான நடவடிக்கைகள் வரை பழக்கவேண்டும். தினசரி குளியல் காக்கா குளியலாக இல்லாமல் முறைப்படி குளிக்க கற்றுக் கொடுங்கள். காது மடல்கள், மூக்கு, கால் விரல்கள் இடையே மற்றும் உடல் முழுவதும் […]

The post குழந்தைக்கு அவசியம் சுய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவையா? appeared first on Tamil News Live.

]]>
தன் சுகாதாரம் (personal hygiene) என்பது தன் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துவது தான். தன் உடலை சுத்தமாக பேணும் போது உறுதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் இடுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல தன் உடலை சுத்தப்படுத்த பழக்கப்படுத்த வேண்டும். காலைக்கடன்களில் ஆரம்பித்து பொதுவெளியில் சுகாதாரமான நடவடிக்கைகள் வரை பழக்கவேண்டும்.

தினசரி குளியல்

Bathing Habitகாக்கா குளியலாக இல்லாமல் முறைப்படி குளிக்க கற்றுக் கொடுங்கள். காது மடல்கள், மூக்கு, கால் விரல்கள் இடையே மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள்.

பிறப்புறுப்புகளை சுத்தம் செய்வதன் அவசியத்தை சிறு வயதிலேயே புரிய வையுங்கள்.

தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது.

குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டுக் குளிக்கவைக்கவும்.

ஓரளவு வளர்ந்த பத்து வயது பிள்ளைகள் எனில் உள்ளாடைகளை குளித்தவுடன் துவைத்து காயப்போட பழக்குங்கள்.

கைகள் கழுவுதல்

சாப்பிடுவதற்க்கு முன்பு, உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், ரூபாய் நோட்டுகளை எண்ணினாலோ கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

கைகளை கழுவும் போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள்.

சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

நக இடுக்குகள் தான் கிருமிகள் குடியிருக்க ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

பல் துலக்குதல்

Oral Hygieneசாக்லேட்டுகளின் புண்ணியத்தில் சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெரும் பணி. பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். தினமும் ஒரு முறையாவது விரல்களால் பல் விலக்க வைக்கவும்.

விழுப்புண்கள் சுத்தம்

புண்ணின் வெளித்தோல் காய்ந்து இருந்தால் பிய்க்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் டெட்டால் போன்ற ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு அறிவுறுத்துங்கள். மருத்துவரை ஆலோசித்து டெட்டனஸ் வாக்சின் தடுப்பு ஊசி குழந்தைக்கு போட்டு விடுங்கள்.

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்

தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்.


Personal hygiene is essential for children to promote good health. It is the duty of parent to teach children about oral hygiene, hand and foot hygiene, nail hygiene, toileting hygiene, bathing habit, etc. Maintaining these hygienic practices helps children to keep their body free from dirt and prevents infection from bacteria and viruses.


The post குழந்தைக்கு அவசியம் சுய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவையா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/personal-hygiene-awareness-children/feed/ 0 2495
தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது? https://tamilnewslive.com/relationships/how-guide-children-after-results/ https://tamilnewslive.com/relationships/how-guide-children-after-results/#respond Thu, 28 Jun 2018 05:01:06 +0000 https://tamilnewslive.com/?p=2452 தேர்வு முடிவுகள் தரும் மன அழுத்தம் என்பது பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, பெற்றோருக்கும் நரம்பு தெறிக்கும் அளவுக்கு இரத்த அழுத்தம் உண்டாக்கும் விஷயம் தான். படிப்பு, வேலை என எங்கும் போட்டிகள் நிலவும் இந்த காலத்தில் வாங்கிய மதிப்பெண்களை விட, இழந்த மதிப்பெண்கள் தான் வருந்த வைக்கிறது. உதாரணமாக பத்துக்கு எட்டு மார்க்கு வாங்கியதற்க்கு மகிழாமல் பத்துக்கு ஒன்பது வாங்காமல் போய்விட்டாயே என்று ஆதங்கப்படுபவர்களே அதிகம். பெற்றோர்களே எதிர்பார்ப்பை தவிருங்கள்! நம் பிள்ளைகள் மீது நாம் நம்பிக்கை […]

The post தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது? appeared first on Tamil News Live.

]]>
Exam Resultதேர்வு முடிவுகள் தரும் மன அழுத்தம் என்பது பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, பெற்றோருக்கும் நரம்பு தெறிக்கும் அளவுக்கு இரத்த அழுத்தம் உண்டாக்கும் விஷயம் தான். படிப்பு, வேலை என எங்கும் போட்டிகள் நிலவும் இந்த காலத்தில் வாங்கிய மதிப்பெண்களை விட, இழந்த மதிப்பெண்கள் தான் வருந்த வைக்கிறது. உதாரணமாக பத்துக்கு எட்டு மார்க்கு வாங்கியதற்க்கு மகிழாமல் பத்துக்கு ஒன்பது வாங்காமல் போய்விட்டாயே என்று ஆதங்கப்படுபவர்களே அதிகம்.

பெற்றோர்களே எதிர்பார்ப்பை தவிருங்கள்!

நம் பிள்ளைகள் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் இருப்பது தவறு என்பது எந்த அளவுக்கு நியாமோ அதே அளவிற்கு நியாயம் குருவி தலையில் பனங்காயை வைப்பது போல, அதீத கற்பனைகளை வளர்த்துவதும் தவறு தான்.

எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்றால், அடுத்த என்ன செய்வது என்ற திட்டத்துடன் பெற்றோரும், அதேசமயம் பிள்ளையின் மனநிலையும் எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள ஏதுவாக தயார் படுத்தவும்.

பரந்து விரிந்த உலகம், இதில் வாழுவதற்க்கு எல்லொருக்கும் வாய்ப்பு உள்ளது. மூன்று மணி நேர தேர்வு நிர்ணயிப்பதில்லை மனிதனின் அறிவை. அவனது கற்றுக்கொள்ளும் ஆற்றலும், நேர்மையான வழியில் திறமையுடன் கூடிய உழைப்பு தான் வாழ்க்கைக்கு தேவை.

குத்திக்காட்டி பேசாதீர்கள் பெற்றோர்களே!

இவ்வளவு செலவு செய்து அதற்குரிய பலன் இல்லையே என்று வியாபாரம் பேசாதீர்கள். அடுத்த வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். முடிந்தவற்றிற்க்கு முகாரி பாடிக்கொண்டு இருக்காதீர்கள். அடுத்த என்ன என்ற முன்னோக்கிய சிந்தனைகள் தான் தேவை. மதிப்பெண்களுக்குள் பிள்ளையின் மதிப்பையும், பாசத்தையும் அளிக்காதீர்கள்.

அளவிலாத அன்பையும், ஆதரவையும் அளியுங்கள்

Parent Careதேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அதிகமோ, குறைவோ. நிதானமான உங்கள் செயல்பாடுகளும், உங்கள் வார்த்தைகள் மட்டுமே பிள்ளைகளுக்கு தேவை. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடிய நாப்பதுகளில் இருக்கும் உங்களது மனநிலையை பதினைந்து ப்ளஸ் வயதில் இருக்கும் வளரும் குழந்தையிடம் எதிர்ப்பார்க்காதீர்கள். சமூகத்தின் அங்கமான உறவுகள், நட்புகளின் பண்பற்ற பேச்சுகளை பொருட்படுத்தாமல் செல்லப்பழகுங்கள்.

தவமாக பெற்று வளர்த்த பிள்ளைகளை வார்த்தைகளால் நோகடித்து எமனுக்கு பலி கொடுத்து விடாதீர்கள். புத்திரசோகம் என்பது உயிரோடு எரியும் வலி.ஆகவே பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களை சுய அலசல் செய்ய வையுங்கள். எதிர்காலத்தை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு சில நிமிடங்கள் போரடிக்காதவாறு சொல்லிக்கொண்டே இருங்கள்.

சோ கால்டு அந்த நான்கு பேருக்கு, உங்கள் நேர போக்கிற்கு அடுத்த வீட்டு பிள்ளைகளின் கதைகளை பேசி பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள். மதிப்பெண்கள் நோண்டி கேட்காதீர்கள், இலவச ஆலோசனை அள்ளி வழங்கி அவர்களை நோகடிக்காதீர்கள்.

உயர்ந்த லட்சியங்கள் அவசியம் தேவை, இலக்கிலாத பயணம் வீண் அதேசமயம் விபத்து ஏற்பட்டால் பயணத்தை நிறுத்தி விடுகிறோமா இல்லையே சிக்கல்களை களைந்து மீண்டும் ஒரு பயணத்தை தொடருவோம் தானே?

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் தேர்வு தான், தேர்வுகளும் முடிவுகளும் தான் வழிநடத்துகிறது. கைக்கொடுத்து பிள்ளைகளை ஏணிப்படியில் ஏற்றிவிடுவோம்! அவர்களுக்கான கனவுகளை அடையட்டும்!


Exam result day and time can be stressful for both children and their parents. The character of each child will differ on how they view exam results time. Some will be beside themselves with anxiety. Meanwhile others will be confident and assured whatever the outcome. Do not compare your child to their classmates, friends or neighbors. Parents can talk to them about how they are feeling and help children by listening and respecting their decision to take them in a good path.


The post தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/relationships/how-guide-children-after-results/feed/ 0 2452
குழந்தைகளின் மனவளர்ச்சியை பாதிக்கும் விடியோகேம்ஸ்!!! https://tamilnewslive.com/child-care/video-games-affect-mental-growth-children/ https://tamilnewslive.com/child-care/video-games-affect-mental-growth-children/#respond Tue, 26 Jun 2018 08:07:45 +0000 https://tamilnewslive.com/?p=2337 கபடி, கொக்கோ, கண்ணாமூச்சி, திருடன் போலிஸ் என்று தெருவெங்கும் அங்கிங்கு ஓடியாடிய விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் கம்பியூட்டர், மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுகள் ஆபத்தான விளையாட்டு! குழந்தைகளின் உடல் மற்றும் மன வளத்தை முற்றிலுமாக பாதிக்கும் விளையாட்டு. இந்த கேம்ஸ்களால் பிள்ளைகள் ஒரு வித அடம்பிடிக்கும், முரட்டு சுபாவத்துடன் வளர்கின்றனர். தனது அன்றாட வாழ்வில் உள்ள முக்கிய கடமைகளை விட்டு விலகுகிறார்கள். இதன் விளைவாக படிப்பில் கவனம் குறைகிறது. சமூக நடத்தையில் கூட நிறைய மாற்றங்கள் […]

The post குழந்தைகளின் மனவளர்ச்சியை பாதிக்கும் விடியோகேம்ஸ்!!! appeared first on Tamil News Live.

]]>
கபடி, கொக்கோ, கண்ணாமூச்சி, திருடன் போலிஸ் என்று தெருவெங்கும் அங்கிங்கு ஓடியாடிய
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் கம்பியூட்டர், மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுகள் ஆபத்தான விளையாட்டு! குழந்தைகளின் உடல் மற்றும் மன வளத்தை முற்றிலுமாக பாதிக்கும் விளையாட்டு.

இந்த கேம்ஸ்களால் பிள்ளைகள் ஒரு வித அடம்பிடிக்கும், முரட்டு சுபாவத்துடன் வளர்கின்றனர். தனது அன்றாட வாழ்வில் உள்ள முக்கிய கடமைகளை விட்டு விலகுகிறார்கள். இதன் விளைவாக படிப்பில் கவனம் குறைகிறது. சமூக நடத்தையில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. பிறருடன் கலந்து பேசாமல் எங்கும் தனித்திருத்தல். மாற்ற இயலாத சோம்பேறித்தனம். கீழ்ப்படியாமை என்று சங்கிலித் தொடர் போல வரும்.

வீடியோ கேம்ஸ் தம்ப் (video games thumb)

Gaming Blisterஎப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. பிள்ளைகள் கேட்டபோதெல்லாம் அவர்கள் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் .
அறிவதில்லை.

எப்போதெல்லாம் விளையாடுகிறார்கள்?

பஸ், ரயில் பயணம் மற்றும் பயணத்திற்க்கு காத்திருக்கவும் போது, படிக்க விருப்பம் இல்லாத போது, உறக்கம் வராத போது,  போரடிக்கும் போது. நண்பர்களிடம் நானும் விடியோ கேம்ஸ் விளையாடுவேன் என்று பெருமை பேச என பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன், கம்பியூட்டர் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே வீணாக்குகிறது.

பழிவாங்கும் உணர்வு

திருடனை பிடிப்பது, மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது, மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது. பெண்களை சீண்டுவது. போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே தன்னை ‘ஹீரோ’ வாக எண்ணும் வகையில் உள்ளது. நாளடைவில் வன்முறையும், முரட்டுத்தனமும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்குகிறது. கரைய கரைய கல்லும் கரையும் தானே!

இந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

* வீட்டில் நிலவும் தனிமை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை சூழல், மிதமிஞ்சிய பணமும், பெற்றோர்களின் செல்லம்.

* குழந்தைகளை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

* வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.

கேம்ஸ் அடிமைகளின் அறிகுறி என்ன?
தூக்கமின்மை
ஒற்றை தலைவலி
சோர்வு
கண் எரிச்சல்
பலகீனம்
செரிமான கோளாறுகள்
பள்ளி பாடங்களில் ஆர்வம் குறைதல்
கை, கால், முதுகு, கழுத்துவலி
மன அழுத்தம்
காரணமற்ற கோபம்
எரிச்சல்
தோற்றத்தில் அலட்சியம்
சுத்தமின்மை
விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
பள்ளி நண்பர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்துதல்
பணத் தேவைக்காக திருடுதல்
திடீரென்று உடல் எடை அதிகரித்தல் அல்லது மெலிந்து போகுதல்
உணவு மீது விருப்பமின்மை.

விடியோகேம்ஸ் போதையில் இருந்து எப்படி மீட்பது?

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே வாருங்கள்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

Activitiesமெதுவாக வேறு நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், புத்தகம் சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன் என்று குழந்தைகளை ஊக்குவியுங்கள். மெல்ல மெல்ல குழந்தைக்கு இதன் தீமைகளை புரிய வையுங்கள்.


Playing Video games for long time can affect the brain and also cause changes in many regions of the brain. Studies says that playing video games not only changes how our brains perform but also their structure. Mental development issues, side effects are caused by such violent games. It has a negative effect on childhood health, behaviour, addiction to gaming, poor academic performance, damages eyesight, inability to sleep, cause headache, etc. Parents can recover children addicted to video gaming by involving them in other activities.


The post குழந்தைகளின் மனவளர்ச்சியை பாதிக்கும் விடியோகேம்ஸ்!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/video-games-affect-mental-growth-children/feed/ 0 2337
குழந்தை எப்போது உட்கார ஆரம்பிக்கும்? https://tamilnewslive.com/child-care/when-baby-starts-sitting/ https://tamilnewslive.com/child-care/when-baby-starts-sitting/#respond Mon, 25 Jun 2018 15:27:41 +0000 https://tamilnewslive.com/?p=2318 உங்கள் குழந்தையின் அழுகுரல் சத்தம் அதிகமாகவும், முகம் பார்த்து சிரிப்பது, கழுத்து நிற்பது எல்லாமே தாய்க்கு உணர்த்துவது என்னவென்றால், நான் வளர்கிறேன் மம்மி! தான். வளர்ச்சி படிநிலைகளில் குப்புறப்படுத்தல் அடுத்து உட்கார முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விடுவார் உங்கள் செல்லம். நான்கு மாதத்தில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள் உட்கார்ந்து விடும் குழந்தை. நீங்களாக தூண்டாதீர்கள். உடலின் இயக்கத்திற்க்கான நரம்புகளும், தசைகளும் வளர்ச்சியடைந்து வலுவடையும் போது குழந்தை தானாகவே மெல்ல மெல்ல அமர முயற்சிக்கும். […]

The post குழந்தை எப்போது உட்கார ஆரம்பிக்கும்? appeared first on Tamil News Live.

]]>
உங்கள் குழந்தையின் அழுகுரல் சத்தம் அதிகமாகவும், முகம் பார்த்து சிரிப்பது, கழுத்து நிற்பது எல்லாமே தாய்க்கு உணர்த்துவது என்னவென்றால், நான் வளர்கிறேன் மம்மி! தான். வளர்ச்சி படிநிலைகளில் குப்புறப்படுத்தல் அடுத்து உட்கார முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விடுவார் உங்கள் செல்லம்.

நான்கு மாதத்தில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள் உட்கார்ந்து விடும் குழந்தை. நீங்களாக தூண்டாதீர்கள். உடலின் இயக்கத்திற்க்கான நரம்புகளும், தசைகளும் வளர்ச்சியடைந்து வலுவடையும் போது குழந்தை தானாகவே மெல்ல மெல்ல அமர முயற்சிக்கும்.

வயிற்று பகுதி தசை வலுப்பெறும்

எப்போது உங்கள் குழந்தை வயிற்று பகுதியை உபயோகித்து அதாவது குப்புற படுக்க ஆரம்பித்தாலே , குழந்தையின் கழுத்து நரம்புகள் வலு அடைந்து விட்டது என்று அர்த்தம். வயிறு, கழுத்து, பின்முதுகு தசைகள் வலுவடைந்து வருகிறது என்று உணரலாம். மேல் முதுகு, கீழ் முதுகு தசைகள் வலுவடைந்து வந்தால் தான் குழந்தை குப்புற படுத்துக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்க்கும்.

குழந்தையை உட்கார பழக்குங்கள்!

Sittingஆறுமாதம் ஆரம்பித்தாலே குழந்தைக்கான வளர்ச்சிக்கான மைல் ஸ்டோனில் தலையை தூக்கி மெல்ல சில விநாடிகள் அமர முயற்சிக்கும். தலையணைகள் கொண்டு இடுப்புக்கு பின்னர் ஆதரவு (support) தரவும். தினசரி அமர வைத்து பழக்கும் போது இடுப்பு பகுதி வலுப்பெறும்.

தோள்களின் ஆதரவில் அமரும் நிலை (Tripod sit)

Sit Using Armsகழுத்து நின்று உட்கார ஆரம்பிக்கும் போது, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தோள்களின் ஆதரவில் அமரும் நிலையைத்தான் டிரைபோட் (tripod sit) என்கிறார்கள்.

தவழ ஆரம்பித்தல்

Baby Crawlingஉங்கள் குழந்தை நன்கு உட்கார பழகியதும் மெல்ல தவழ ஆரம்பிக்கும். இடுப்பை அசைக்க முடியும் என்பதால் குழந்தை முன்னும் பின்னும் என்று அறை முழுவதும் தவழ ஆரம்பித்து விடும்.

செய்யக்கூடாதவை
குழந்தை உட்கார ஆரம்பித்து விட்டார் என்று கார் சீட்டில், நாற்காலியில் தனியே அமர வைக்காதீர்கள்.


At the age of six months, your baby may start to sit up alone. Mostly babies learn to sit independently between the ages of 4 and 7 months. At this time, babies might have developed motor skills such as she should be able to hold her neck up, have some balance, and have trunk muscles. Usually around three to four months, once your baby can hold her head up on her own you can sit her in a supportive chair like a Bumbo seat. Most babies can sit well for several minutes without support by the time they’re 8 months old. Tripod sit means a position where baby use her arms on the floor in front for balance. Baby starts crawling between the ages of 7 months and 10 months.


The post குழந்தை எப்போது உட்கார ஆரம்பிக்கும்? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/when-baby-starts-sitting/feed/ 0 2318
குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு https://tamilnewslive.com/child-care/diarrhea-affects-children/ https://tamilnewslive.com/child-care/diarrhea-affects-children/#respond Mon, 25 Jun 2018 13:54:03 +0000 https://tamilnewslive.com/?p=2301 கைக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆகவே தான் கைக்குழந்தைகளை சுகாதாரமான சூழலில் உணவு, உறக்கம் என்று கவனத்துடன் பேணி காக்க வேண்டி உள்ளது. எத்தகைய தொற்று என்றாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பது நலம். நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தடுப்பது, உணவு, மருந்து என எப்படி கவனிப்பது என்று ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வயிற்றுப்போக்கு பெரும்பாலான […]

The post குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு appeared first on Tamil News Live.

]]>
கைக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆகவே தான் கைக்குழந்தைகளை சுகாதாரமான சூழலில் உணவு, உறக்கம் என்று கவனத்துடன் பேணி காக்க வேண்டி உள்ளது. எத்தகைய தொற்று என்றாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பது நலம். நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தடுப்பது, உணவு, மருந்து என எப்படி கவனிப்பது என்று ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

Diarrhea in children பெரும்பாலான குழந்தைகள் ஒருமுறையாவது வயிற்றுப் போக்குக்கு ஆளாகின்றனர். வழக்கத்திற்க்கு மாறாக அடிக்கடி அல்லது பால் குடித்தவுடன் நீர்க்க குழந்தை மலம் கழித்தால் தாய் உடனே கவனிக்க வேண்டும்.

வயிற்று போக்கிற்க்கான காரணங்கள்

* பாலூட்டும் தாய் அல்லது குழந்தையின் உணவில் மாற்றம்.

* தாய் அல்லது குழந்தை ஆன்டி பயாடிக் – antibiotic மருந்துகளை எடுத்திருந்தால் கூட வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* வைரல் மற்றும் பாரசைட் தொற்று – bacterial and viral infection (பால் பாட்டில், நிப்பிள், கை சூப்புதல், தவழும் குழந்தை கீழே கிடந்தவற்றை எடுத்து உண்ணுதல், உணவு ஒவ்வாமை இவற்றால் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும்.)

நீர்ச்சத்து குறைதல் (Diarrhea Causes Dehydration)

பிறந்த குழந்தை முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கால் எளிதில் சோர்வுற்று உடலில் உள்ள நீர்ச்சத்தை இழப்பார்கள். ஆதலால் இளம் தாய்மார்கள் குழந்தையிடம் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கவனத்துடன் இருக்கவும்.

* வறண்ட கண்கள் மற்றும் குழந்தை அழும் போது கண்ணீர் இன்றியோ அல்லது மிகவும் சொற்ப அளவே கண்ணீர் சுரத்தல்.

* குழந்தையின் டயாபரில் ஈரமே இல்லாதிருத்தல்.

* வறண்ட உதடுகள் மற்றும் சருமம்.

* சோர்வுற்ற கண்கள்.

* தலை உச்சியில் குழி விழுதல்.

வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உணவு

* குழந்தைக்கு நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீர், மோர், பழஜீஸ். பாட்டிலில் அடைக்கப்பட்ட பழஜூஸ் மற்றும் பாலினை தவிர்ப்பது நல்லது.

* தாய்ப்பால் குடிக்கும் குழந்தை எனில் திரும்ப திரும்ப பாலூட்டவேண்டும். குழந்தை விரைவில் குணமடைய தாய்ப்பால் நன்று. தாய்ப்பால் வயிற்றுப்போக்கை தடுக்கும்.

* எலக்ட்ரோலைட்ஸ் (electrolyte solution) கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்தால் அவசியம் கொடுக்கவும்.

* மருத்துவர் ஆலோசனை இன்றி நீங்களாகவே வயிற்றுப் போக்கு மருந்துகளை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

Solution* மருத்துவர் ORS – oral rehydration solution தயாரித்து கொடுக்க சொன்னால் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். ஒருபங்கு உப்பு இரண்டு பங்கு சக்கரையை ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க கொடுக்கலாம்.

Diaper Rash

Nappy Rashடயாபர் மூலம் குழந்தையின் சருமத்தில் உராய்வு, அலர்ஜி ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.


Infection from viruses like rotavirus, bacteria like salmonella and rarely, parasites like giardia. Viruses are the most common cause of a child’s diarrhea. Along with loose or watery stools, symptoms of a viral gastroenteritis infection includes vomiting, stomachache, headache, and fever. Signs of dehydration often begin with loss of the normal stretchiness of the skin, dryness in skin and eyes. When sick children have diarrhea or are vomiting, they can lose large amounts of salts and water from their bodies can become dehydrated very quickly. Diaper Rash/Nappy Rash is a problem in skin inflammation. Children with frequent bowel movements or diarrhea are more prone to diaper rash.


The post குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/diarrhea-affects-children/feed/ 0 2301
1 வயது வரை குழந்தைகளுக்கான உணவு அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்! https://tamilnewslive.com/child-care/food-introducing-instructions-children-upto-1-year/ https://tamilnewslive.com/child-care/food-introducing-instructions-children-upto-1-year/#respond Mon, 25 Jun 2018 12:19:53 +0000 https://tamilnewslive.com/?p=2286 குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் அதிகம் கவனம் செலுத்துவது, குழந்தையின் உணவு முறையில் தான். முதல் ஒரு ஆண்டு காலம் என்பது நாம் அறிமுகப்படுத்தும் உணவு மற்றும் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள். பிறந்தது முதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தையின் உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 0-4 மாதம் வரை : […]

The post 1 வயது வரை குழந்தைகளுக்கான உணவு அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்! appeared first on Tamil News Live.

]]>
Children's Foodகுழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் அதிகம் கவனம் செலுத்துவது, குழந்தையின் உணவு முறையில் தான். முதல் ஒரு ஆண்டு காலம் என்பது நாம் அறிமுகப்படுத்தும் உணவு மற்றும் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிறந்தது முதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தையின் உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

0-4 மாதம் வரை :

தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். அதிலும் முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் எனும் கொலஸ்ட்ரம் (colostrum) குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.

குறைந்தது நான்கு மாதங்களுக்காவது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை :

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் தாய்ப்பால் அளவு குறைந்தாலோ அல்லது குழந்தைக்கு வேறு உணவில் நாட்டம் தெரிந்தாலோ மெல்ல மெல்ல புதிய உணவுகளை அறிமுகம் செய்யவும்.

Baby Eatingவேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், போன்றவற்றை
நன்கு மசித்து கொடுக்க வேண்டும். கீரை சூப், வடித்த கஞ்சி கொடுத்து பார்க்கலாம். பால் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி உணவு கொடுக்கவும்.

6-8 மாதம் வரை :

இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக் இணை உணவாக கொடுக்கலாம் ‌.

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று கவனிக்கவேண்டும். ஆகவே அறிமுகப்படுத்தும் உணவை மதிய வேளையில் கொடுக்கவும்.

எந்த உணவால் என்பதை கவனித்து மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம். சில வார இடைவெளியில் மறுபடியும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

8-10 மாதம் வரை :

Kanjiஇரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, ராகி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை கஞ்சியாக மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். இட்லி, பாலில் ஊறவைத்து சப்பாத்தி கொடுத்து பழக்கலாம்.

10-12 மாதம்:
இப்போது அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். சுத்தம், சுகாதாரம் மற்றும் ருசியான, சத்தான உணவு என்ற அடிப்படையில் குழந்தைக்கான உணவை தேர்வு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Babies get enough nutrients from breastmilk and it provides immunity. It has to be followed atleast for 0-4 months of age. It’s important to feed baby a variety of healthy foods at the proper time. Pureed vegetables(potatoes), apple, banana can be given as solid foods for 4-6 months. Pureed chicken, semi liquid cereal, fish, boiled egg white can be given for 6-8 months. For babies upto 8-10 months barley, wheat, ragi can be given as it is contains iron content. Rice foods can be introduced from 10-12 months. Introduce these healthy foods and promote your baby health.


The post 1 வயது வரை குழந்தைகளுக்கான உணவு அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/food-introducing-instructions-children-upto-1-year/feed/ 0 2286
குழந்தைகளுக்கான எளிமையான உணவு! https://tamilnewslive.com/child-care/simple-baby-food/ https://tamilnewslive.com/child-care/simple-baby-food/#respond Mon, 25 Jun 2018 08:08:49 +0000 https://tamilnewslive.com/?p=2274 குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இருந்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது தான் தாய்க்கு பெரும் குழப்பமும், டென்ஷனும் தரும். என்ன கொடுப்பது, எதை, எப்படி கொடுப்பது என்று ஆயிரம் குழப்பங்கள் ஒரு பக்கம், ஆயிரம் ஆலோசனைகள் ஒரு பக்கம் என்று குழம்பி விடுவது உண்டு. வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனை கூறினால் நிச்சயம் காது கொடுத்து கேளுங்கள். அதில் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வரும் விஷயங்களை தாராளமாக கடைபிடியுங்கள். எந்த உணவு செய்து […]

The post குழந்தைகளுக்கான எளிமையான உணவு! appeared first on Tamil News Live.

]]>
Baby foodகுழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இருந்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது தான் தாய்க்கு பெரும் குழப்பமும், டென்ஷனும் தரும். என்ன கொடுப்பது, எதை, எப்படி கொடுப்பது என்று ஆயிரம் குழப்பங்கள் ஒரு பக்கம், ஆயிரம் ஆலோசனைகள் ஒரு பக்கம் என்று குழம்பி விடுவது உண்டு.

வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனை கூறினால் நிச்சயம் காது கொடுத்து கேளுங்கள். அதில் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வரும் விஷயங்களை தாராளமாக கடைபிடியுங்கள். எந்த உணவு செய்து கொடுத்தாலும் சுகாதாரம் என்ற விஷயத்தை மட்டும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

செரிலாக், பாரெக்ஸ், நெஸ்டம் போன்ற குழந்தைகள் உணவை அவசியம் குழந்தைகளுக்கு பழக்கி வைப்பது நல்லது ஏனென்றால் வெளியூர் பயணங்கள், அசாதாரண சூழலில் உடனடியாக தயார் செய்து குழந்தையின் பசியாற்ற ஏதுவாக இருக்கும்.

வீட்டு உணவு ஏன் நல்லது?

ரெடிமேட் குழந்தைகள் உணவு
மார்க்கெட்டில் கிடைக்கும் ரெடிமேட் குழந்தைகள் உணவு அதிக விலை. விலையின் பொருட்டு தாய் தயங்கி தயங்கி குழந்தைக்கு ஊட்டும் சூழல் உள்ள குடும்பங்களும் நம்மிடையே உள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம் கைகளால் நமது பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்கும் போது வரும் திருப்தி தனி தான். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய முறையில், விரைவாக தயாரிக்கும் வகையில் ரெசிபிகள் நம்மிடையே உண்டு.

மசித்த காய்கறிகள், கேரட், உருளைக்கிழங்கு, வேகவைத்த பருப்பு வகைகள், இட்லி என்று ஒரே ருசியில் கொடுக்காமல், வித்தியாசமான சுவையில் புதிது புதிதாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது குழந்தை விரும்பி சாப்பிடும்.

குழந்தை உணவு மென்மையாக, விழுங்குவதற்க்கு எளிதாக, சத்துள்ளதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கோதுமை கூழ் சிறந்த உணவு.

கோதுமை கூழ்

Solid foodதேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம்/கருப்பட்டி
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை
நெய்
தண்ணீர்

செய்முறை :
* கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். கருகி விடாமல் மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும்.

* வறுத்த மாவை ஒரு தம்ளர் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

* வெல்லம் / கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

* அடுப்பில் பாத்திரத்தை (sauce pan) வைத்து, கரைத்த கோதுமை மாவு கரைசலை ஊற்றி மெல்லிய தீயில், கரண்டி கொண்டு கை விடாமல் கிளறவும்.

* மாவுக்கரைசல் வெந்து கொப்பளித்து வரும் போது வெல்லம் பாகு / கருப்பட்டி பாகு / சர்க்கரை சேர்த்து இறுகி வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து, இரண்டு சொட்டு நெய் விட்டு இறக்கவும்.

* ஆறியதும் குழந்தைக்கு ஊட்டலாம்.

கோதுமை ஒவ்வாமை (symptoms of wheat intolerance)

வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கோதுமையை நிறுத்தி விடவும். அரிதாகவே சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

பகல் நேரத்தில் புதிய உணவை அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தையிடம் உணவிற்கு பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


Wheat Porridge / Godhumai Koozh is a nutritious solid recipe for babies made using wheat flour. It can be started at the age of 5 to 6 months of baby. The health benefits of wheat include good supply of carbohydrates for energy, good source of vitamins, minerals and chlorophyll, acts as a good natural laxative, easily digestible and is good for oral health. It may be allergic to few babies that causes stomach pain, constipation, vomiting, diarrhea, etc. In such cases, avoid using wheat for those babies.


The post குழந்தைகளுக்கான எளிமையான உணவு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/child-care/simple-baby-food/feed/ 0 2274
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன? https://tamilnewslive.com/relationships/fathers-role-child-rearing/ https://tamilnewslive.com/relationships/fathers-role-child-rearing/#respond Sat, 23 Jun 2018 09:54:47 +0000 https://tamilnewslive.com/?p=2201 பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் தியாகத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை தந்தையின் அன்பும், அக்கறையும். “குழந்தை பருவம் என்பது தந்தையின் பாதுகாப்பில் தான் இருக்கவேண்டும்”, என்கிறார் சிறந்த உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட். உடல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு தந்தையின் அரவணைப்பும் வழிக்காட்டுதலுமே வழிவகுக்கும். தந்தை எனும் வழிகாட்டி விரல் பிடித்து நடைபயில பயிற்சி அளிக்கும் தந்தை, வாழ்க்கைக்கும் வழிகாட்டி ஆகிறார். குழந்தையின் வெளியுலக தொடர்பில் இருந்து வரும் ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகளுக்கு தாயை விட […]

The post குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன? appeared first on Tamil News Live.

]]>
Child Rearingபத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் தியாகத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை தந்தையின் அன்பும், அக்கறையும். “குழந்தை பருவம் என்பது தந்தையின் பாதுகாப்பில் தான் இருக்கவேண்டும்”, என்கிறார் சிறந்த உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட். உடல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு தந்தையின் அரவணைப்பும் வழிக்காட்டுதலுமே வழிவகுக்கும்.

தந்தை எனும் வழிகாட்டி

விரல் பிடித்து நடைபயில பயிற்சி அளிக்கும் தந்தை, வாழ்க்கைக்கும் வழிகாட்டி ஆகிறார். குழந்தையின் வெளியுலக தொடர்பில் இருந்து வரும் ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகளுக்கு தாயை விட பொறுமையாக பதிலளிப்பது தந்தை தான். தாயின் பணிச்சுமையை பொறுத்தே அவளது பொறுமையும் இருக்கும். விளையாட்டுகள் மூலம் வாழ்க்கையை, உலகை புரிய வைக்கிறார் தந்தை. சமூகத்தில் மகனது பங்கு, சமூகத்திற்க்கு மகனது பங்கு இரண்டையும் குழந்தையின் வயதிற்கு ஏற்ப சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம் புரிய வைப்பது தந்தையே.

சிறந்த தந்தை எவர்?

சிறந்த மனிதனால் தான் சிறந்த தந்தையாக முடியும். தந்தையின் நற்குணங்கள், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள், வாழ்வியல் ரசனைகள், சமூகத்தினை பற்றிய கண்ணோட்டங்களே குழந்தைக்கு கடத்தப்படுகிறது. ஆகவே தந்தையின் கடந்த காலமே மகனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

தந்தைக்கு தேவையான குணநலன்கள்

* திறந்த மனதுடையவராக இருக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியில் வரும் ஏற்ற தாழ்வுகளை ஒரேமாதிரி கையாள வேண்டும்.

* எந்தவொரு கருத்தியலையும் அதாவது சாதி, மத, அரசியல் வெறித்தனத்தை குழந்தைகளுக்கு திணிக்ககூடாது.

* குழந்தைக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் ஆகவே மது, மாது, போதை பழக்கங்கள் இல்லாதவராக, சொல்லிலும் செயலிலும் நேர்மை உடையவராக இருக்க வேண்டும்.

Father and Child* குழந்தைகளுக்கு என்று நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக நீங்கள் சேர்த்து வைக்கும் வங்கி கணக்கை விட, அவர்களுக்காக அவர்களுடன் நீங்கள் செலவழிக்கும் நேரமே சிறந்த முதலீடு.

* குழந்தைக்கு தந்தை மீது நம்பிக்கையும் அன்பும் இருப்பது போல குழந்தை மீதான தந்தையின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும்.

எந்த ஒரு ஆணாலும் ஒரு பெண்ணை தாயாக்க முடியும். அவனுக்கு பெயர் தந்தை அல்ல, ஒரு குழந்தையின் பக்கபலமாக இருந்து இந்த உலகிற்கு சிறந்த பண்பாளனை, அறிவாளியை உருவாக்கித்தருபவரே தந்தை ஆவார்.

சிறந்த தந்தை நூறு ஆசிரியருக்கு சமம்.


The goal of a father’s involvement is to nurture his child’s intellectual, emotional, physical, social and spiritual development. While it is essential for mothers and their babies to develop a deep connection, it is also important for fathers to spend quality time bonding with their babies. An increasing amount of research suggests a strong correlation between early father-infant bonds and the happiness of the entire family. A father’s influence on a daughter’s self-image. A dad’s involvement in his daughter’s life is a crucial ingredient in the development of a young woman’s self-esteem.


The post குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/relationships/fathers-role-child-rearing/feed/ 0 2201