பிறந்த குழந்தைகளுக்கு நிறங்கள் தெரியுமா?

குழந்தைகள் பிறந்த உடனேயே அழத் தொடங்கி விடும் ஆனால் குழந்தைகள் கண்களில் இருந்து கண்ணீர் வராது ஏன் தெரியுமா?

குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுது கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை எனவே தான் பிறந்த குழந்தைகள் அழும் பொழுது கண்ணீர் வருவது இல்லை. மூன்று மாதங்கள் கழித்தே கண்ணீர் சுரப்பிகள் வளர ஆரம்பிக்கும். 

 

 

பிறந்த குழந்தையின் தலையில் மற்றும் உடலில் மென்மையான முடிகள் அதிகமாக இருக்கும் சில நாட்களில் அவை உதிர்ந்து விடும். பிறந்த குழந்தை தன் தாயிடம் போனதும் அழுகையை நிறுத்தி விடும் ஏனென்றால்  கருவில் இருக்கும் பொழுதே தனது தாயின் குரல் மற்றும் ஸ்பரிசத்தை நன்கு அறிந்திருக்கும்.தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வு தரும்.

 பிறந்த குழந்தையால் நீண்ட தூரம் பார்க்க முடியாது?

 

 

பிறந்த குழந்தையால் இருபது அடி தூரம் மட்டுமே பார்க்க முடியும்.பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டுமே தெரியும் வளர வளர அனைத்து நிறங்களையும் இனம் பிரித்தறியும். பிறந்த குழந்தையால் மனிதர்களை நன்கு பார்க்க முடியுமாம் எனவே தான் யாருடைய முகத்தையாவது பார்த்தவுடன் புன்னகைக்கிறது குழந்தை. பொம்மைகளை விட மனித முகத்தை பார்க்கத்தான் குழந்தைகள் விரும்பும்.

பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் ?

சாதாரண மனிதர்களுக்கு மொத்தம் 206 எலும்புகள் இருக்கும் ஆனால் பிறந்த குழந்தைகளின் உடலில் முதன்முதலில்  270 எலும்புகள் உருவாகி இருக்கும். வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பில் உள்ள எலும்புகள் இணைந்து  206 எலும்புகளாகின்றன.

குழந்தைக்கு ஏன் கழுத்து நிற்பதில்லை?

பிறந்த குழந்தையின் கழுத்து தசைகள் மென்மையாக இருக்கும். ஆகவே தான் குழந்தையின் கழுத்தில் ஒரு கையை தாங்கலாக கொடுத்து தூங்குவார்கள். மூன்று மாதங்களில் கழுத்து தசைகள் வலுவடையும்.

 பிறந்த குழந்தையின் மலம் ஏன் பச்சை நிறத்தில் உள்ளது?

தாயின் வயிற்றில் குழந்தை வளரும் போது கழிவுகள் எல்லாம் குழந்தையின் மலக்குடலில் சேர்ந்து இருக்கும்.இதனை மெகோனியம் என்பர். குழந்தை பிறந்த உடன் அந்த கழிவுகள் முழுவதும் வெளியேறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course