குழந்தை எப்போது உட்கார ஆரம்பிக்கும்?

உங்கள் குழந்தையின் அழுகுரல் சத்தம் அதிகமாகவும், முகம் பார்த்து சிரிப்பது, கழுத்து நிற்பது எல்லாமே தாய்க்கு உணர்த்துவது என்னவென்றால், நான் வளர்கிறேன் மம்மி! தான். வளர்ச்சி படிநிலைகளில் குப்புறப்படுத்தல் அடுத்து உட்கார முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விடுவார் உங்கள் செல்லம்.

நான்கு மாதத்தில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள் உட்கார்ந்து விடும் குழந்தை. நீங்களாக தூண்டாதீர்கள். உடலின் இயக்கத்திற்க்கான நரம்புகளும், தசைகளும் வளர்ச்சியடைந்து வலுவடையும் போது குழந்தை தானாகவே மெல்ல மெல்ல அமர முயற்சிக்கும்.

வயிற்று பகுதி தசை வலுப்பெறும்

எப்போது உங்கள் குழந்தை வயிற்று பகுதியை உபயோகித்து அதாவது குப்புற படுக்க ஆரம்பித்தாலே , குழந்தையின் கழுத்து நரம்புகள் வலு அடைந்து விட்டது என்று அர்த்தம். வயிறு, கழுத்து, பின்முதுகு தசைகள் வலுவடைந்து வருகிறது என்று உணரலாம். மேல் முதுகு, கீழ் முதுகு தசைகள் வலுவடைந்து வந்தால் தான் குழந்தை குப்புற படுத்துக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்க்கும்.

குழந்தையை உட்கார பழக்குங்கள்!

Sitting

ஆறுமாதம் ஆரம்பித்தாலே குழந்தைக்கான வளர்ச்சிக்கான மைல் ஸ்டோனில் தலையை தூக்கி மெல்ல சில விநாடிகள் அமர முயற்சிக்கும். தலையணைகள் கொண்டு இடுப்புக்கு பின்னர் ஆதரவு (support) தரவும். தினசரி அமர வைத்து பழக்கும் போது இடுப்பு பகுதி வலுப்பெறும்.

தோள்களின் ஆதரவில் அமரும் நிலை (Tripod sit)

Sit Using Arms

கழுத்து நின்று உட்கார ஆரம்பிக்கும் போது, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தோள்களின் ஆதரவில் அமரும் நிலையைத்தான் டிரைபோட் (tripod sit) என்கிறார்கள்.

தவழ ஆரம்பித்தல்

Baby Crawling

உங்கள் குழந்தை நன்கு உட்கார பழகியதும் மெல்ல தவழ ஆரம்பிக்கும். இடுப்பை அசைக்க முடியும் என்பதால் குழந்தை முன்னும் பின்னும் என்று அறை முழுவதும் தவழ ஆரம்பித்து விடும்.

செய்யக்கூடாதவை
குழந்தை உட்கார ஆரம்பித்து விட்டார் என்று கார் சீட்டில், நாற்காலியில் தனியே அமர வைக்காதீர்கள்.


At the age of six months, your baby may start to sit up alone. Mostly babies learn to sit independently between the ages of 4 and 7 months. At this time, babies might have developed motor skills such as she should be able to hold her neck up, have some balance, and have trunk muscles. Usually around three to four months, once your baby can hold her head up on her own you can sit her in a supportive chair like a Bumbo seat. Most babies can sit well for several minutes without support by the time they’re 8 months old. Tripod sit means a position where baby use her arms on the floor in front for balance. Baby starts crawling between the ages of 7 months and 10 months.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course