குழந்தைக்கு அவசியம் சுய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவையா?

தன் சுகாதாரம் (personal hygiene) என்பது தன் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துவது தான். தன் உடலை சுத்தமாக பேணும் போது உறுதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் இடுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல தன் உடலை சுத்தப்படுத்த பழக்கப்படுத்த வேண்டும். காலைக்கடன்களில் ஆரம்பித்து பொதுவெளியில் சுகாதாரமான நடவடிக்கைகள் வரை பழக்கவேண்டும்.

தினசரி குளியல்

Bathing Habit

காக்கா குளியலாக இல்லாமல் முறைப்படி குளிக்க கற்றுக் கொடுங்கள். காது மடல்கள், மூக்கு, கால் விரல்கள் இடையே மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள்.

பிறப்புறுப்புகளை சுத்தம் செய்வதன் அவசியத்தை சிறு வயதிலேயே புரிய வையுங்கள்.

தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது.

குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டுக் குளிக்கவைக்கவும்.

ஓரளவு வளர்ந்த பத்து வயது பிள்ளைகள் எனில் உள்ளாடைகளை குளித்தவுடன் துவைத்து காயப்போட பழக்குங்கள்.

கைகள் கழுவுதல்

சாப்பிடுவதற்க்கு முன்பு, உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், ரூபாய் நோட்டுகளை எண்ணினாலோ கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

கைகளை கழுவும் போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள்.

சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

நக இடுக்குகள் தான் கிருமிகள் குடியிருக்க ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

பல் துலக்குதல்

Oral Hygiene

சாக்லேட்டுகளின் புண்ணியத்தில் சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெரும் பணி. பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். தினமும் ஒரு முறையாவது விரல்களால் பல் விலக்க வைக்கவும்.

விழுப்புண்கள் சுத்தம்

புண்ணின் வெளித்தோல் காய்ந்து இருந்தால் பிய்க்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் டெட்டால் போன்ற ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு அறிவுறுத்துங்கள். மருத்துவரை ஆலோசித்து டெட்டனஸ் வாக்சின் தடுப்பு ஊசி குழந்தைக்கு போட்டு விடுங்கள்.

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்

தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்.


Personal hygiene is essential for children to promote good health. It is the duty of parent to teach children about oral hygiene, hand and foot hygiene, nail hygiene, toileting hygiene, bathing habit, etc. Maintaining these hygienic practices helps children to keep their body free from dirt and prevents infection from bacteria and viruses.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course