குழந்தைகளை பாடாய்படுத்தும் நெஞ்சுசளி

சளிப்பிடித்ததோ அல்லது சனி பிடித்ததோ? எனும் அளவிற்கு பெரியவர்களையே “மூக்கால்”, அழவைக்கும் சளி, குழந்தைக்கு பிடித்தால்? குழந்தையோடு சேர்ந்து தாயும் படாதபாடு படுவார்.

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி(Bronchitis) அல்லது நிமோனியா(Pneumonia) போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

Nenju Sali

ஆங்கில மருத்துவத்தில் அருமையான மருந்துகள் உள்ளது அதேசமயம் அதன் பக்கவிளைவுகள் பற்றியும் யோசிக்க வேண்டும். லேசான சளி, காய்ச்சல் எனும் போது ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்று வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொண்டு சிகிச்சை எடுத்து கொள்ளலாம். பாட்டி வைத்தியம் போல சளிக்கு தீர்வு வைத்துள்ளது. குழந்தைகளை சிறு வயதிலேயே ஆங்கில மருந்துகளுக்கு பழக்கப்படுத்தாமல், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் போது ஆரோக்கியத்துடன் வலம் வருவார்கள்.

சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத வழிமுறைகளை பார்ப்போம். சளி, இருமல், காய்ச்சல் அதிகமாகி குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு, உணவு உட்கொள்ள சிரமப்பட்டு கொண்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* தூதுவளை பொடி

நாட்டு மருந்து கடைகளில் தூதுவளை பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து ஒரு டீஸ்பூன் அளவு பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். சளியின் தீவிரம் பொருத்து மூன்று வேளையும் கொடுக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகளால் வரும் சளியினை கூட தூதுவளை வெளியேற்றும். நுரையீரலை பலப்படுத்தும்.

* ஆடாதோடா சாறு

நெஞ்சு சளி கரைய ஆடாதோடா இலை, தேன் கலந்த மருந்து ஆடாதோடா இலைத் தளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்..

* கற்பூரவள்ளி சாறு

Karpooravalli Leaves

ஓமவல்லி எனும் கற்பூரவள்ளியை சாறு எடுத்து தேனுடன் கொடுக்கலாம். கற்பூரவல்லியை நீரில் கொதிக்க வைத்து ஆறிய நீரை குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.

Lemon Extract

* எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சம அளவில் எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்கவும்.

* நல்ல சூடான பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து இரவு உறங்கும் முன் குடிக்க கொடுக்கலாம். வளர்ந்த குழந்தை எனில் மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து கொடுக்கலாம்.

குழந்தையின் உடல்நிலையை பொறுத்து தான் எந்த வைத்தியம் தேவை என்பதை தாயால் தான் முடிவு செய்ய முடியும். நோயின் அறிகுறிகள், அதன் தீவிரம் பொருத்து மருத்துவ வசதி தேவையெனில் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது தான் சிறந்த அணுகுமுறை.


Excess mucous or phlegm may be a symptom of Bronchitis or Pneumonia. It can be accompanied by Coughing, wheezing, nasal bleeding, fatigue. Drinking tea or warm lemon water mixed with honey is a natural remedy to soothe a sore throat. Intake of hot milk mixed with palm sugar, turmeric powder, pepper before sleep helps to relieve the problem.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course