1 வயது வரை குழந்தைகளுக்கான உணவு அறிமுகப்படுத்தும் வழிமுறைகள்!

Children's Food

குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் அதிகம் கவனம் செலுத்துவது, குழந்தையின் உணவு முறையில் தான். முதல் ஒரு ஆண்டு காலம் என்பது நாம் அறிமுகப்படுத்தும் உணவு மற்றும் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிறந்தது முதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தையின் உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

0-4 மாதம் வரை :

தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். அதிலும் முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் எனும் கொலஸ்ட்ரம் (colostrum) குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.

குறைந்தது நான்கு மாதங்களுக்காவது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை :

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் தாய்ப்பால் அளவு குறைந்தாலோ அல்லது குழந்தைக்கு வேறு உணவில் நாட்டம் தெரிந்தாலோ மெல்ல மெல்ல புதிய உணவுகளை அறிமுகம் செய்யவும்.

Baby Eating

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், போன்றவற்றை
நன்கு மசித்து கொடுக்க வேண்டும். கீரை சூப், வடித்த கஞ்சி கொடுத்து பார்க்கலாம். பால் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி உணவு கொடுக்கவும்.

6-8 மாதம் வரை :

இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக் இணை உணவாக கொடுக்கலாம் ‌.

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று கவனிக்கவேண்டும். ஆகவே அறிமுகப்படுத்தும் உணவை மதிய வேளையில் கொடுக்கவும்.

எந்த உணவால் என்பதை கவனித்து மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம். சில வார இடைவெளியில் மறுபடியும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

8-10 மாதம் வரை :

Kanji

இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, ராகி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை கஞ்சியாக மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். இட்லி, பாலில் ஊறவைத்து சப்பாத்தி கொடுத்து பழக்கலாம்.

10-12 மாதம்:
இப்போது அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். சுத்தம், சுகாதாரம் மற்றும் ருசியான, சத்தான உணவு என்ற அடிப்படையில் குழந்தைக்கான உணவை தேர்வு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Babies get enough nutrients from breastmilk and it provides immunity. It has to be followed atleast for 0-4 months of age. It’s important to feed baby a variety of healthy foods at the proper time. Pureed vegetables(potatoes), apple, banana can be given as solid foods for 4-6 months. Pureed chicken, semi liquid cereal, fish, boiled egg white can be given for 6-8 months. For babies upto 8-10 months barley, wheat, ragi can be given as it is contains iron content. Rice foods can be introduced from 10-12 months. Introduce these healthy foods and promote your baby health.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com