குழந்தைகளுக்கான எளிமையான உணவு!

Baby food

குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இருந்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது தான் தாய்க்கு பெரும் குழப்பமும், டென்ஷனும் தரும். என்ன கொடுப்பது, எதை, எப்படி கொடுப்பது என்று ஆயிரம் குழப்பங்கள் ஒரு பக்கம், ஆயிரம் ஆலோசனைகள் ஒரு பக்கம் என்று குழம்பி விடுவது உண்டு.

வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனை கூறினால் நிச்சயம் காது கொடுத்து கேளுங்கள். அதில் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வரும் விஷயங்களை தாராளமாக கடைபிடியுங்கள். எந்த உணவு செய்து கொடுத்தாலும் சுகாதாரம் என்ற விஷயத்தை மட்டும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

செரிலாக், பாரெக்ஸ், நெஸ்டம் போன்ற குழந்தைகள் உணவை அவசியம் குழந்தைகளுக்கு பழக்கி வைப்பது நல்லது ஏனென்றால் வெளியூர் பயணங்கள், அசாதாரண சூழலில் உடனடியாக தயார் செய்து குழந்தையின் பசியாற்ற ஏதுவாக இருக்கும்.

வீட்டு உணவு ஏன் நல்லது?

ரெடிமேட் குழந்தைகள் உணவு
மார்க்கெட்டில் கிடைக்கும் ரெடிமேட் குழந்தைகள் உணவு அதிக விலை. விலையின் பொருட்டு தாய் தயங்கி தயங்கி குழந்தைக்கு ஊட்டும் சூழல் உள்ள குடும்பங்களும் நம்மிடையே உள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம் கைகளால் நமது பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்கும் போது வரும் திருப்தி தனி தான். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய முறையில், விரைவாக தயாரிக்கும் வகையில் ரெசிபிகள் நம்மிடையே உண்டு.

மசித்த காய்கறிகள், கேரட், உருளைக்கிழங்கு, வேகவைத்த பருப்பு வகைகள், இட்லி என்று ஒரே ருசியில் கொடுக்காமல், வித்தியாசமான சுவையில் புதிது புதிதாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது குழந்தை விரும்பி சாப்பிடும்.

குழந்தை உணவு மென்மையாக, விழுங்குவதற்க்கு எளிதாக, சத்துள்ளதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கோதுமை கூழ் சிறந்த உணவு.

கோதுமை கூழ்

Solid food

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம்/கருப்பட்டி
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை
நெய்
தண்ணீர்

செய்முறை :
* கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். கருகி விடாமல் மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும்.

* வறுத்த மாவை ஒரு தம்ளர் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

* வெல்லம் / கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

* அடுப்பில் பாத்திரத்தை (sauce pan) வைத்து, கரைத்த கோதுமை மாவு கரைசலை ஊற்றி மெல்லிய தீயில், கரண்டி கொண்டு கை விடாமல் கிளறவும்.

* மாவுக்கரைசல் வெந்து கொப்பளித்து வரும் போது வெல்லம் பாகு / கருப்பட்டி பாகு / சர்க்கரை சேர்த்து இறுகி வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து, இரண்டு சொட்டு நெய் விட்டு இறக்கவும்.

* ஆறியதும் குழந்தைக்கு ஊட்டலாம்.

கோதுமை ஒவ்வாமை (symptoms of wheat intolerance)

வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கோதுமையை நிறுத்தி விடவும். அரிதாகவே சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

பகல் நேரத்தில் புதிய உணவை அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தையிடம் உணவிற்கு பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


Wheat Porridge / Godhumai Koozh is a nutritious solid recipe for babies made using wheat flour. It can be started at the age of 5 to 6 months of baby. The health benefits of wheat include good supply of carbohydrates for energy, good source of vitamins, minerals and chlorophyll, acts as a good natural laxative, easily digestible and is good for oral health. It may be allergic to few babies that causes stomach pain, constipation, vomiting, diarrhea, etc. In such cases, avoid using wheat for those babies.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top