குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு

கைக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆகவே தான் கைக்குழந்தைகளை சுகாதாரமான சூழலில் உணவு, உறக்கம் என்று கவனத்துடன் பேணி காக்க வேண்டி உள்ளது. எத்தகைய தொற்று என்றாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பது நலம். நோய் தொற்று ஏற்பட்டால் அதனை தடுப்பது, உணவு, மருந்து என எப்படி கவனிப்பது என்று ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

Diarrhea in children

பெரும்பாலான குழந்தைகள் ஒருமுறையாவது வயிற்றுப் போக்குக்கு ஆளாகின்றனர். வழக்கத்திற்க்கு மாறாக அடிக்கடி அல்லது பால் குடித்தவுடன் நீர்க்க குழந்தை மலம் கழித்தால் தாய் உடனே கவனிக்க வேண்டும்.

வயிற்று போக்கிற்க்கான காரணங்கள்

* பாலூட்டும் தாய் அல்லது குழந்தையின் உணவில் மாற்றம்.

* தாய் அல்லது குழந்தை ஆன்டி பயாடிக் – antibiotic மருந்துகளை எடுத்திருந்தால் கூட வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* வைரல் மற்றும் பாரசைட் தொற்று – bacterial and viral infection (பால் பாட்டில், நிப்பிள், கை சூப்புதல், தவழும் குழந்தை கீழே கிடந்தவற்றை எடுத்து உண்ணுதல், உணவு ஒவ்வாமை இவற்றால் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும்.)

நீர்ச்சத்து குறைதல் (Diarrhea Causes Dehydration)

பிறந்த குழந்தை முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கால் எளிதில் சோர்வுற்று உடலில் உள்ள நீர்ச்சத்தை இழப்பார்கள். ஆதலால் இளம் தாய்மார்கள் குழந்தையிடம் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கவனத்துடன் இருக்கவும்.

* வறண்ட கண்கள் மற்றும் குழந்தை அழும் போது கண்ணீர் இன்றியோ அல்லது மிகவும் சொற்ப அளவே கண்ணீர் சுரத்தல்.

* குழந்தையின் டயாபரில் ஈரமே இல்லாதிருத்தல்.

* வறண்ட உதடுகள் மற்றும் சருமம்.

* சோர்வுற்ற கண்கள்.

* தலை உச்சியில் குழி விழுதல்.

வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உணவு

* குழந்தைக்கு நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீர், மோர், பழஜீஸ். பாட்டிலில் அடைக்கப்பட்ட பழஜூஸ் மற்றும் பாலினை தவிர்ப்பது நல்லது.

* தாய்ப்பால் குடிக்கும் குழந்தை எனில் திரும்ப திரும்ப பாலூட்டவேண்டும். குழந்தை விரைவில் குணமடைய தாய்ப்பால் நன்று. தாய்ப்பால் வயிற்றுப்போக்கை தடுக்கும்.

* எலக்ட்ரோலைட்ஸ் (electrolyte solution) கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்தால் அவசியம் கொடுக்கவும்.

* மருத்துவர் ஆலோசனை இன்றி நீங்களாகவே வயிற்றுப் போக்கு மருந்துகளை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

Solution

* மருத்துவர் ORS – oral rehydration solution தயாரித்து கொடுக்க சொன்னால் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். ஒருபங்கு உப்பு இரண்டு பங்கு சக்கரையை ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க கொடுக்கலாம்.

Diaper Rash

Nappy Rash

டயாபர் மூலம் குழந்தையின் சருமத்தில் உராய்வு, அலர்ஜி ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.


Infection from viruses like rotavirus, bacteria like salmonella and rarely, parasites like giardia. Viruses are the most common cause of a child’s diarrhea. Along with loose or watery stools, symptoms of a viral gastroenteritis infection includes vomiting, stomachache, headache, and fever. Signs of dehydration often begin with loss of the normal stretchiness of the skin, dryness in skin and eyes. When sick children have diarrhea or are vomiting, they can lose large amounts of salts and water from their bodies can become dehydrated very quickly. Diaper Rash/Nappy Rash is a problem in skin inflammation. Children with frequent bowel movements or diarrhea are more prone to diaper rash.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course