தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது?

Exam Result

தேர்வு முடிவுகள் தரும் மன அழுத்தம் என்பது பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, பெற்றோருக்கும் நரம்பு தெறிக்கும் அளவுக்கு இரத்த அழுத்தம் உண்டாக்கும் விஷயம் தான். படிப்பு, வேலை என எங்கும் போட்டிகள் நிலவும் இந்த காலத்தில் வாங்கிய மதிப்பெண்களை விட, இழந்த மதிப்பெண்கள் தான் வருந்த வைக்கிறது. உதாரணமாக பத்துக்கு எட்டு மார்க்கு வாங்கியதற்க்கு மகிழாமல் பத்துக்கு ஒன்பது வாங்காமல் போய்விட்டாயே என்று ஆதங்கப்படுபவர்களே அதிகம்.

பெற்றோர்களே எதிர்பார்ப்பை தவிருங்கள்!

நம் பிள்ளைகள் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் இருப்பது தவறு என்பது எந்த அளவுக்கு நியாமோ அதே அளவிற்கு நியாயம் குருவி தலையில் பனங்காயை வைப்பது போல, அதீத கற்பனைகளை வளர்த்துவதும் தவறு தான்.

எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்றால், அடுத்த என்ன செய்வது என்ற திட்டத்துடன் பெற்றோரும், அதேசமயம் பிள்ளையின் மனநிலையும் எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள ஏதுவாக தயார் படுத்தவும்.

பரந்து விரிந்த உலகம், இதில் வாழுவதற்க்கு எல்லொருக்கும் வாய்ப்பு உள்ளது. மூன்று மணி நேர தேர்வு நிர்ணயிப்பதில்லை மனிதனின் அறிவை. அவனது கற்றுக்கொள்ளும் ஆற்றலும், நேர்மையான வழியில் திறமையுடன் கூடிய உழைப்பு தான் வாழ்க்கைக்கு தேவை.

குத்திக்காட்டி பேசாதீர்கள் பெற்றோர்களே!

இவ்வளவு செலவு செய்து அதற்குரிய பலன் இல்லையே என்று வியாபாரம் பேசாதீர்கள். அடுத்த வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். முடிந்தவற்றிற்க்கு முகாரி பாடிக்கொண்டு இருக்காதீர்கள். அடுத்த என்ன என்ற முன்னோக்கிய சிந்தனைகள் தான் தேவை. மதிப்பெண்களுக்குள் பிள்ளையின் மதிப்பையும், பாசத்தையும் அளிக்காதீர்கள்.

அளவிலாத அன்பையும், ஆதரவையும் அளியுங்கள்

Parent Care

தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அதிகமோ, குறைவோ. நிதானமான உங்கள் செயல்பாடுகளும், உங்கள் வார்த்தைகள் மட்டுமே பிள்ளைகளுக்கு தேவை. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடிய நாப்பதுகளில் இருக்கும் உங்களது மனநிலையை பதினைந்து ப்ளஸ் வயதில் இருக்கும் வளரும் குழந்தையிடம் எதிர்ப்பார்க்காதீர்கள். சமூகத்தின் அங்கமான உறவுகள், நட்புகளின் பண்பற்ற பேச்சுகளை பொருட்படுத்தாமல் செல்லப்பழகுங்கள்.

தவமாக பெற்று வளர்த்த பிள்ளைகளை வார்த்தைகளால் நோகடித்து எமனுக்கு பலி கொடுத்து விடாதீர்கள். புத்திரசோகம் என்பது உயிரோடு எரியும் வலி.ஆகவே பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களை சுய அலசல் செய்ய வையுங்கள். எதிர்காலத்தை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு சில நிமிடங்கள் போரடிக்காதவாறு சொல்லிக்கொண்டே இருங்கள்.

சோ கால்டு அந்த நான்கு பேருக்கு, உங்கள் நேர போக்கிற்கு அடுத்த வீட்டு பிள்ளைகளின் கதைகளை பேசி பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள். மதிப்பெண்கள் நோண்டி கேட்காதீர்கள், இலவச ஆலோசனை அள்ளி வழங்கி அவர்களை நோகடிக்காதீர்கள்.

உயர்ந்த லட்சியங்கள் அவசியம் தேவை, இலக்கிலாத பயணம் வீண் அதேசமயம் விபத்து ஏற்பட்டால் பயணத்தை நிறுத்தி விடுகிறோமா இல்லையே சிக்கல்களை களைந்து மீண்டும் ஒரு பயணத்தை தொடருவோம் தானே?

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் தேர்வு தான், தேர்வுகளும் முடிவுகளும் தான் வழிநடத்துகிறது. கைக்கொடுத்து பிள்ளைகளை ஏணிப்படியில் ஏற்றிவிடுவோம்! அவர்களுக்கான கனவுகளை அடையட்டும்!


Exam result day and time can be stressful for both children and their parents. The character of each child will differ on how they view exam results time. Some will be beside themselves with anxiety. Meanwhile others will be confident and assured whatever the outcome. Do not compare your child to their classmates, friends or neighbors. Parents can talk to them about how they are feeling and help children by listening and respecting their decision to take them in a good path.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top