குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன?

Child Rearing

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் தியாகத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை தந்தையின் அன்பும், அக்கறையும். “குழந்தை பருவம் என்பது தந்தையின் பாதுகாப்பில் தான் இருக்கவேண்டும்”, என்கிறார் சிறந்த உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட். உடல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு தந்தையின் அரவணைப்பும் வழிக்காட்டுதலுமே வழிவகுக்கும்.

தந்தை எனும் வழிகாட்டி

விரல் பிடித்து நடைபயில பயிற்சி அளிக்கும் தந்தை, வாழ்க்கைக்கும் வழிகாட்டி ஆகிறார். குழந்தையின் வெளியுலக தொடர்பில் இருந்து வரும் ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகளுக்கு தாயை விட பொறுமையாக பதிலளிப்பது தந்தை தான். தாயின் பணிச்சுமையை பொறுத்தே அவளது பொறுமையும் இருக்கும். விளையாட்டுகள் மூலம் வாழ்க்கையை, உலகை புரிய வைக்கிறார் தந்தை. சமூகத்தில் மகனது பங்கு, சமூகத்திற்க்கு மகனது பங்கு இரண்டையும் குழந்தையின் வயதிற்கு ஏற்ப சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம் புரிய வைப்பது தந்தையே.

சிறந்த தந்தை எவர்?

சிறந்த மனிதனால் தான் சிறந்த தந்தையாக முடியும். தந்தையின் நற்குணங்கள், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள், வாழ்வியல் ரசனைகள், சமூகத்தினை பற்றிய கண்ணோட்டங்களே குழந்தைக்கு கடத்தப்படுகிறது. ஆகவே தந்தையின் கடந்த காலமே மகனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

தந்தைக்கு தேவையான குணநலன்கள்

* திறந்த மனதுடையவராக இருக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியில் வரும் ஏற்ற தாழ்வுகளை ஒரேமாதிரி கையாள வேண்டும்.

* எந்தவொரு கருத்தியலையும் அதாவது சாதி, மத, அரசியல் வெறித்தனத்தை குழந்தைகளுக்கு திணிக்ககூடாது.

* குழந்தைக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் ஆகவே மது, மாது, போதை பழக்கங்கள் இல்லாதவராக, சொல்லிலும் செயலிலும் நேர்மை உடையவராக இருக்க வேண்டும்.

Father and Child

* குழந்தைகளுக்கு என்று நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக நீங்கள் சேர்த்து வைக்கும் வங்கி கணக்கை விட, அவர்களுக்காக அவர்களுடன் நீங்கள் செலவழிக்கும் நேரமே சிறந்த முதலீடு.

* குழந்தைக்கு தந்தை மீது நம்பிக்கையும் அன்பும் இருப்பது போல குழந்தை மீதான தந்தையின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும்.

எந்த ஒரு ஆணாலும் ஒரு பெண்ணை தாயாக்க முடியும். அவனுக்கு பெயர் தந்தை அல்ல, ஒரு குழந்தையின் பக்கபலமாக இருந்து இந்த உலகிற்கு சிறந்த பண்பாளனை, அறிவாளியை உருவாக்கித்தருபவரே தந்தை ஆவார்.

சிறந்த தந்தை நூறு ஆசிரியருக்கு சமம்.


The goal of a father’s involvement is to nurture his child’s intellectual, emotional, physical, social and spiritual development. While it is essential for mothers and their babies to develop a deep connection, it is also important for fathers to spend quality time bonding with their babies. An increasing amount of research suggests a strong correlation between early father-infant bonds and the happiness of the entire family. A father’s influence on a daughter’s self-image. A dad’s involvement in his daughter’s life is a crucial ingredient in the development of a young woman’s self-esteem.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course