குழந்தைகளின் மனவளர்ச்சியை பாதிக்கும் விடியோகேம்ஸ்!!!

கபடி, கொக்கோ, கண்ணாமூச்சி, திருடன் போலிஸ் என்று தெருவெங்கும் அங்கிங்கு ஓடியாடிய
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் கம்பியூட்டர், மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுகள் ஆபத்தான விளையாட்டு! குழந்தைகளின் உடல் மற்றும் மன வளத்தை முற்றிலுமாக பாதிக்கும் விளையாட்டு.

இந்த கேம்ஸ்களால் பிள்ளைகள் ஒரு வித அடம்பிடிக்கும், முரட்டு சுபாவத்துடன் வளர்கின்றனர். தனது அன்றாட வாழ்வில் உள்ள முக்கிய கடமைகளை விட்டு விலகுகிறார்கள். இதன் விளைவாக படிப்பில் கவனம் குறைகிறது. சமூக நடத்தையில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. பிறருடன் கலந்து பேசாமல் எங்கும் தனித்திருத்தல். மாற்ற இயலாத சோம்பேறித்தனம். கீழ்ப்படியாமை என்று சங்கிலித் தொடர் போல வரும்.

வீடியோ கேம்ஸ் தம்ப் (video games thumb)

Gaming Blister

எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. பிள்ளைகள் கேட்டபோதெல்லாம் அவர்கள் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் .
அறிவதில்லை.

எப்போதெல்லாம் விளையாடுகிறார்கள்?

பஸ், ரயில் பயணம் மற்றும் பயணத்திற்க்கு காத்திருக்கவும் போது, படிக்க விருப்பம் இல்லாத போது, உறக்கம் வராத போது,  போரடிக்கும் போது. நண்பர்களிடம் நானும் விடியோ கேம்ஸ் விளையாடுவேன் என்று பெருமை பேச என பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன், கம்பியூட்டர் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே வீணாக்குகிறது.

பழிவாங்கும் உணர்வு

திருடனை பிடிப்பது, மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது, மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது. பெண்களை சீண்டுவது. போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே தன்னை ‘ஹீரோ’ வாக எண்ணும் வகையில் உள்ளது. நாளடைவில் வன்முறையும், முரட்டுத்தனமும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்குகிறது. கரைய கரைய கல்லும் கரையும் தானே!

இந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

* வீட்டில் நிலவும் தனிமை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை சூழல், மிதமிஞ்சிய பணமும், பெற்றோர்களின் செல்லம்.

* குழந்தைகளை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

* வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.

கேம்ஸ் அடிமைகளின் அறிகுறி என்ன?
தூக்கமின்மை
ஒற்றை தலைவலி
சோர்வு
கண் எரிச்சல்
பலகீனம்
செரிமான கோளாறுகள்
பள்ளி பாடங்களில் ஆர்வம் குறைதல்
கை, கால், முதுகு, கழுத்துவலி
மன அழுத்தம்
காரணமற்ற கோபம்
எரிச்சல்
தோற்றத்தில் அலட்சியம்
சுத்தமின்மை
விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
பள்ளி நண்பர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்துதல்
பணத் தேவைக்காக திருடுதல்
திடீரென்று உடல் எடை அதிகரித்தல் அல்லது மெலிந்து போகுதல்
உணவு மீது விருப்பமின்மை.

விடியோகேம்ஸ் போதையில் இருந்து எப்படி மீட்பது?

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே வாருங்கள்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

Activities

மெதுவாக வேறு நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், புத்தகம் சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன் என்று குழந்தைகளை ஊக்குவியுங்கள். மெல்ல மெல்ல குழந்தைக்கு இதன் தீமைகளை புரிய வையுங்கள்.


Playing Video games for long time can affect the brain and also cause changes in many regions of the brain. Studies says that playing video games not only changes how our brains perform but also their structure. Mental development issues, side effects are caused by such violent games. It has a negative effect on childhood health, behaviour, addiction to gaming, poor academic performance, damages eyesight, inability to sleep, cause headache, etc. Parents can recover children addicted to video gaming by involving them in other activities.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women