அழகு – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Fri, 02 Apr 2021 17:17:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 அழகு – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/ https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/#respond Fri, 02 Apr 2021 15:52:38 +0000 https://tamilnewslive.com/?p=6828   திரிபலா சூரணம் என்பது மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள் ,இது ஒரு காய கற்பம். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்து தயாரித்ததே திரிபலா சூரணம்.   கடுக்காய்    துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத,கப தன்மையைச் சீராக்கும் தன்மை இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். கடுக்காய் […]

The post தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? appeared first on Tamil News Live.

]]>
 

திரிபலா சூரணம் என்பது மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள் ,இது ஒரு காய கற்பம்.


நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்து தயாரித்ததே திரிபலா சூரணம்.

 

கடுக்காய்

 

 துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத,கப தன்மையைச் சீராக்கும் தன்மை இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். கடுக்காய் சுத்தி செய்து தான் மருந்தாக பயன்படுகிறது.

 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஒரு காயகல்பம் , என்றும் மங்கா இளமைத் தரும் அமிர்தம்.

வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது.

தான்றிக்காய்

 

தான்றிக்காய் மரத்தினை மகாவிருட்சம் என்பர், எல்லாவகை இருமல் களையும் , சளியையும் நீக்கவல்லது.

தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.

 

திரிபலா சூரணம் செய்முறை: 

 

கடுக்காய் ஒரு பங்கு,  நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காயவைக்கவும். காய்ந்த மூன்றையும் அரைத்துப்பயன்படுத்தவும்.எல்லா

கடைகளிலும் எளிதாக கிடைக்கும்.பொடி அல்லது மாத்திரை வடிவில் கிடைக்கிறது.

 

திரிபலா சாப்பிடும் முறை

 

*மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். 

 

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். 

 

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

 

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

 

*இரவில் பால் குடித்து விட்டு உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் பால் குடித்து ஒரு மணிநேரம் கழித்து திரிபலாவை எடுத்து கொள்ளவும்.

 

திரிபலா சூரணம் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து. ஒட்டுமொத்த உடலின் நலனுக்காக தினமும் இரவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பலன்களை பட்டியல் இட பக்கங்கள் போதாது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/feed/ 0 6828
வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/#respond Sun, 01 Jul 2018 07:54:45 +0000 https://tamilnewslive.com/?p=2603 பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள். மருக்கள் என்பது என்ன? தோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வரும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் […]

The post வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள்.

மருக்கள் என்பது என்ன?

Wart in Bodyதோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வரும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு.

மருக்களின் அளவு

ஒன்று முதல் நூற்றுக்கணக்கான மருக்கள் தோன்றும். பருவ வயதில் தான் உருவாக ஆரம்பிக்கிறது. திராட்சை போல் கிளைத்து வருவதும் உண்டு. பொதுவாக 2 mm அளவில் இருந்து 5 mm அளவுக்கு தான் இருக்கும் அசாதாரணமாக 5 cm வரை உருவாகிறது.

மருக்களை எப்படி நீக்குவது?

Laser Removalமருக்களை நீக்கினால் வேகமாக பரவும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால் அது உண்மை அன்று. அறுவை சிகிச்சை, லேசர் மூலம் சுட்டுப்பொசுக்குதல், அதற்கான இரத்த ஓட்டத்தை தடைச் செய்யும் போது ஊட்டம் இல்லாமல் சுருங்கி உதிர்ந்த விடும். திரவ நைட்ரஜன் மூலம் உறைய வைக்கும் போது அது உதிர்ந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால் தோல் மருத்துவர் மூலம் நீக்குதல் தான் சிறப்பு.

பெரும்பாலான மருக்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. நகைகள், ஆடைகள், சதை மடிப்பு எனும் போது கிடைக்கும் உராய்வு, அழுத்தத்தால் தான் பலநேரங்களில் வலி ஏற்படுகிறது.

புற்றுநோயாக மாறுவதற்க்கான சாத்தியம் மிகவும் குறைவு. அரிதாக மருக்கள் சிவந்து நிறம் மாறி அதில் இருந்து நீர் வடிந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் பயாப்சி எடுப்பது நல்லது.


Wart is a fleshy bump mucous membrane on the skin, caused by papillomavirus. Warts can be found anywhere on skin, from face to feet. Cutting off a wart cannot cure it. Flat warts and long skinny warts that look like tiny fingers usually appear on your face. Plantar warts are common that are large flat bumps on the bottoms of feet. There are some natural remedies and Laser treatment for wart removal.


The post வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/feed/ 0 2603
கண்ணைப்போல இமைமுடிகளை காப்போம்! https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/protect-eyelashes-same-eyes/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/protect-eyelashes-same-eyes/#respond Thu, 28 Jun 2018 07:52:21 +0000 https://tamilnewslive.com/?p=2476 பெண்களுக்கு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் உணர்வுகளை வெளிக்காட்டும் பெரிய கண்கள் அழகு என்றால், கண்களுக்கு அழகு சேர்ப்பது வில்லென வளைந்த புருவம் மற்றும் பளிச்சென்று தெரியும் அடர் இமை முடிகள் தான். கண் இமைகள் அழகிற்க்காக மட்டும் அல்ல, கண்களை தூசிகளில் இருந்து பாதுகாப்பதே முக்கிய பயன். எல்லொருக்கும் அழகான கண்களும், அடர்த்தியான இமைமுடிகளும் வாய்ப்பதில்லை. அதற்காக சோர்வு கொள்ள வேண்டாம். கண்பார்வை இல்லாதவர்களும் நம் முன்னே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் இமை முடிகள் […]

The post கண்ணைப்போல இமைமுடிகளை காப்போம்! appeared first on Tamil News Live.

]]>
Eyesபெண்களுக்கு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் உணர்வுகளை வெளிக்காட்டும் பெரிய கண்கள் அழகு என்றால், கண்களுக்கு அழகு சேர்ப்பது வில்லென வளைந்த புருவம் மற்றும் பளிச்சென்று தெரியும் அடர் இமை முடிகள் தான்.

கண் இமைகள் அழகிற்க்காக மட்டும் அல்ல, கண்களை தூசிகளில் இருந்து பாதுகாப்பதே முக்கிய பயன். எல்லொருக்கும் அழகான கண்களும், அடர்த்தியான இமைமுடிகளும் வாய்ப்பதில்லை. அதற்காக சோர்வு கொள்ள வேண்டாம். கண்பார்வை இல்லாதவர்களும் நம் முன்னே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் இமை முடிகள் பிரச்சினை பெரிதன்று. தீர்வு காண கூடிய சிறு பிரச்சினை தான்.

இமை முடிகளில் புரோட்டின்

இமை முடிகள் 90% கரோட்டின் மற்றும் மெலனின் எனும் புரோட்டினாலும், 10% நீராலும் ஆனது. சராசரியாக 75 லிருந்து 200 இமை முடிகள் வரை இருக்கும். கீழ் இமை, மேல் இமை எல்லாம் சேர்த்து தான். தினசரி இமை முடிகள் உதிர்வதும், புதிதாக வளர்வதும் சுழற்சி போல் நடந்து வருகிறது.

உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ள சரிவிகித உணவு மூலம் இமை முடிகள் அடர்த்தியாக வளரும். மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளவாறு மெனுவை மாற்றிக்கொள்ளுங்கள்.

இமை முடிகள் உதிர காரணங்கள்

* தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால் அல்லது அதிகமாக சுரப்பதாலும் இமை முடிகள் உதிரும்.

* சில மாத்திரைகள், புற்றுநோய் சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சக்தியை தாக்கும் நோய்களாலும் இமை முடிகள் உதிரும்.

* போதிய சத்துக்கள் இல்லாத உணவு. குறிப்பாக புரதப் பற்றாக்குறை

* எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற தோல் வியாதிகள்.

* மேக்கப் சாதனங்களால் வரும் அலர்ஜி

இமை முடிகள் பாதுகாப்பு

Wash Eyesஇமை முடிகள் உதிராமல் இருக்க வேண்டுமெனில் கண்களை கசக்க கூடாது. அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.சத்துள்ள ஆகாரம் மூலம் இயற்கையாக வளரும். தரமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தவும்.

தினசரி விளக்கெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கைக்கு செல்லும் முன் இமைகள், புருவங்கள் மீது தடவி வரவும். நாளடைவில் அடர்த்தியான இமைமுடிகள் வளரும். ஆரோக்கியமும் அழகும் ஒருங்கிணைந்தது.


Eyelashes meant to protect eyes. It helps to tell eyelids when they need to blink for protecting eyes from debris. It is estimated that losing 1-4 eyelashes per day is considered normal. Healthy Diet Foods rich in protein and vitamins helps eyelash hair grow. Foods such as fish, eggs, beans and yogurt. Soy protein helps to simulate eyelash growth. Apply Castor oil or Olive oil to lashes to make it grow streonger, thicker and faster.


The post கண்ணைப்போல இமைமுடிகளை காப்போம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/protect-eyelashes-same-eyes/feed/ 0 2476
கைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள் https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/attracting-handmade-kolhapuri-chappal/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/attracting-handmade-kolhapuri-chappal/#respond Thu, 28 Jun 2018 06:56:41 +0000 https://tamilnewslive.com/?p=2469 பல்வேறு விதமான கைவினை கலைஞர்கள் கொண்ட நாடு நமது பாரதம். ஆடை, அணிகலன்கள் அதன் தனித்துவமான டிசைனாலும், அழகாலும் உலகப்புகழ் பெற்றுள்ளது. நாகரீகமான ஆடை, அலங்காரம் எனும் போது பாதங்களை காக்கும் காலணிகள் இல்லாமலா? ஆடம்பரமான உடைக்கு, கலைநயமிக்க கோல்ஹாபுரி காலணிகள் இன்னும் அழகூட்டுபவை. கோல்ஹாபுரி காலணிகள் மஹாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபுரி என்னும் இடத்தில், காலணி வடிவமைப்பாளர்களால் கைகளிலே செய்யப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தோல் காலணிகள் தான் இந்த வகை காலணிகள். தாவர சாறுகள் கொண்டு […]

The post கைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள் appeared first on Tamil News Live.

]]>
பல்வேறு விதமான கைவினை கலைஞர்கள் கொண்ட நாடு நமது பாரதம். ஆடை, அணிகலன்கள் அதன் தனித்துவமான டிசைனாலும், அழகாலும் உலகப்புகழ் பெற்றுள்ளது. நாகரீகமான ஆடை, அலங்காரம் எனும் போது பாதங்களை காக்கும் காலணிகள் இல்லாமலா? ஆடம்பரமான உடைக்கு, கலைநயமிக்க கோல்ஹாபுரி காலணிகள் இன்னும் அழகூட்டுபவை.

கோல்ஹாபுரி காலணிகள்

Making Chappalமஹாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபுரி என்னும் இடத்தில், காலணி வடிவமைப்பாளர்களால் கைகளிலே செய்யப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தோல் காலணிகள் தான் இந்த வகை காலணிகள். தாவர சாறுகள் கொண்டு பதப்படுத்தப்பட்ட தோலால் ஆன காலணிகள் இவை. விழாக்காலங்களுக்கும், தினசரி உபயோகத்திற்க்கும் என பயன்படுத்தப்படுகிறது.

காலணியின் வரலாறு

பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து இந்த வகை காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. எருமை மாட்டு தோலை தாவர சாறுகள் கொண்டு செய்யப் பட்ட சாயங்களால் பதப்படுத்தப் படுகிறது.

காலணிகள் தயாரிப்பு

ஒரு ஜோடி செருப்பை செய்து முடிக்க ஆறு வாரங்கள் ஆகிறது. முழுக்க முழுக்க கைகளால் செய்கின்றனர். எருமைமாட்டுத் தோலை, சேகரித்து இயற்கை முறையில் அதனை பதப்படுத்தி, வேண்டிய அளவுகளில் அந்த தோலில் இருந்து மோல்டுகளின் உதவியால் வெட்டுகிறார்கள்.

Kolhapuri Chappalsவடிவாக வெட்டப்பட்ட தோலைத்திருத்தி நுண்ணிய வேலைப்பாடுகளால் அழகூட்டுகிறார்கள். வார், ஹுல் என்று காலணிகளின் பாகங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, விலைக்கேற்ப மீண்டும் திருத்தி, அலங்கரிக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் என எல்லா அளவுகளிலும் கிடைக்கின்றது.

ஹிப்பிகளின் காலத்தில் அமெரிக்காவில் கோல்ஹாபுரி காலணிகள் மிக பிரபலமாக இருந்தது. எல்லா கைவினை தொழில்கள் போல இந்த தொழிலும் நசிந்து வருகிறது. இதன் நீடித்த உழைப்பு மற்றும் அழகுக்காக கோல்ஹாபுரி காலணிகளுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்.


Kolhapuri Chappals or Kolhapuris are originated from a southern district in the state of Maharashtra, Kolhapur and these chappals were first worn in the early 13th century. It is now a world famous handcrafted footwear made form leather. These chappals are a style of open-toed, T-strap sandal. These are used during festivals as well as day to day purpose. It is available as shoes, chappals, sandals for women, men and it is designed in different types to meet expectation.


The post கைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/attracting-handmade-kolhapuri-chappal/feed/ 0 2469
முத்து வாங்க போறீங்களா!!! https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/buying-pearl/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/buying-pearl/#respond Tue, 26 Jun 2018 15:56:16 +0000 https://tamilnewslive.com/?p=2399 அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று தான் முத்து. பெர்சிய வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்படுத்தினர். முத்துக்களின் தேவை அதிகரிப்பால் செயற்கை முத்துக்கள் உற்பத்தி செய்கின்றனர். முத்துக்கள் அதன் நிறம், வடிவம், தரம் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உங்கள் விருப்பம் மற்றும் வாங்கும் சக்திக்கு ஏற்ப முத்துவை தேர்ந்தெடுங்கள். முத்துக்களின் […]

The post முத்து வாங்க போறீங்களா!!! appeared first on Tamil News Live.

]]>
Pearlஅரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று தான் முத்து. பெர்சிய வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்படுத்தினர். முத்துக்களின் தேவை அதிகரிப்பால் செயற்கை முத்துக்கள் உற்பத்தி செய்கின்றனர்.

முத்துக்கள் அதன் நிறம், வடிவம், தரம் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உங்கள் விருப்பம் மற்றும் வாங்கும் சக்திக்கு ஏற்ப முத்துவை தேர்ந்தெடுங்கள்.

முத்துக்களின் நிறம்

இயற்கையாக அல்லது தேவையான நிறங்களில் முத்துக்களை செய்யும் தொழில் நுட்பம் உள்ளதால், வெண்மை, கறுப்பு, சாம்பல் நிறம், பச்சை, ப்ளு, பிங்க் நிறங்களில் கிடைக்கிறது.

முத்துக்களின் வகைகள்

நன்னீர், கடல்நீரில் தோன்றிய முத்துக்கள், முதுதுச்சிப்பியின் வகை, இவற்றை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைப்படுத்தப்படுகிறது.

முத்தின் அளவு

முத்துக்கள் வாங்கும் போது அதன் அளவும் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எனில் 7 மில்லிமீட்டர் அல்லது அதைவிட பெரியதாக வாங்க வேண்டும். இளம்பெண்களுக்கு மேற்கண்ட அளவை விட சிறியதாக வாங்க வேண்டும்.

செயற்கை முத்துக்கள் கண்ணாடி அல்லது பிளாஸ்டிகால் விலை மலிவாக கிடைக்கும். முத்து சிப்பியில் செயற்கை முறையில் உருவாக்கிய முத்துக்கள் கிடைக்கும். முத்துக்களின் மென்மையான தன்மையை கொண்டு போலி முத்துக்கள் அடையாளம் கண்டு பிரிக்கப்படுகிறது.

முத்து நகைகள் பராமரிப்பு

Peal Jewelநம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை முத்துக்களை பாதிக்கும் என்பதால் அடிக்கடி முத்து நகைகளை அணிவதை தவிர்க்கவும்.

ஃபெர்ப்யூம், ஹேர் ஸ்பிரே, பவுடர் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் முத்துக்களை பாதிக்கும் என்பதால் முத்து நகையை அணியும் போது காஸ்மெட்டிக்ஸ் (cosmetics) தவிருங்கள்.

வெளியே அணிந்து சென்ற முத்து நகையை வீட்டுக்கு வந்ததும் சுத்தமான, மென்மையான(soft cloth) காட்டன் துணியை கொண்டு துடைத்து அதற்கென உள்ள பெட்டியில் வைக்கவும். பிற நகைகளோடு வைத்தால் முத்தில் உராய்வு ஏற்படும்.


Pearl is a Gemstone produced within the soft tissue of a living shelled mollusk or another animal. Four types of pearl are: Freshwater Pearls which are Fashion-Forward Pearls, Akoya Pearls which are Classic Pearls, grown off the coast of Japan, Tahitian Pearls which are the Dark, Exotic Pearls, South Sea Pearls which are the Rolls Royce of Pearls. South Sea pearls are the third most popular pearl type and the most expensive. Pearls may be Grey, Purple, Black, White, Pink, Blue, Yellow, Green, Orange, Brown in color.


The post முத்து வாங்க போறீங்களா!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/buying-pearl/feed/ 0 2399
மருதாணி அரைப்போமா? https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/grind-maruthani/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/grind-maruthani/#respond Tue, 26 Jun 2018 14:11:10 +0000 https://tamilnewslive.com/?p=2382 மருதோன்றி என்பது இந்தியாவின் அழகுக்கலைகளில் ஒன்று. இந்தியாவைப் போன்றே பெர்ஷியா (இரான்), அரேபிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. திருமணம் மற்றும் பண்டிகைக்கு பெண்கள் தம் கைகளுக்கு மருதாணி இட்டு அழகுப்படுத்திக் கொள்வது வழக்கம். மருதாணி சிவப்பு வெண்டைப்பிஞ்சு போன்ற பெண்களின் விரல்களுக்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. முகலாய வாடை வீசும் வடக்கத்திய மெஹந்தி டிசைன்கள் தான் இன்றைய டிரெண்ட் என்றாலும், இருபது வருடங்களுக்கு முன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மருதாணி மரத்தில் இருந்து இலைகளை பறித்து, […]

The post மருதாணி அரைப்போமா? appeared first on Tamil News Live.

]]>
மருதோன்றி என்பது இந்தியாவின் அழகுக்கலைகளில் ஒன்று. இந்தியாவைப் போன்றே பெர்ஷியா (இரான்), அரேபிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. திருமணம் மற்றும் பண்டிகைக்கு பெண்கள் தம் கைகளுக்கு மருதாணி இட்டு அழகுப்படுத்திக் கொள்வது வழக்கம்.

மருதாணி சிவப்பு வெண்டைப்பிஞ்சு போன்ற பெண்களின் விரல்களுக்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. முகலாய வாடை வீசும் வடக்கத்திய மெஹந்தி டிசைன்கள் தான் இன்றைய டிரெண்ட் என்றாலும், இருபது வருடங்களுக்கு முன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மருதாணி மரத்தில் இருந்து இலைகளை பறித்து, அதை அம்மியில் அரைத்து ஐந்தாறு வாலிப பெண்களும் அவர்களுடன் பொடிப்பட்டாளங்களும் சேர்ந்த அரட்டை அடித்துக்கொண்டே விரல்களுக்கு தொப்பி மாட்டும் நிலாக்காலங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த நாள் நினைவுகளாக இருக்கும்.

அடுத்து வரும் விசேஷத்தைப்பொறுத்தே அவர்களது கேலிப்பேச்சுகளும், வெடிச்சிரிப்புகளும், வளையல் சத்தங்களும், இதனைக் கேட்டு மகிழ்ந்த முற்றங்களும், மொட்டை மாடிகளும் இன்று ஏங்கிக் கொண்டு இருக்குமோ என்னவோ?

தீபாவளி முந்திய இரவு

ஐப்பசி அடை மழைக்குளிர், ஆங்காங்கே வெடிக்கும் பட்டாசு சத்தம், அதனால் வரும் புகை, அடுக்களையில் இருந்து வரும் பலகார வாடை, சுடச்சுட ருசிப்பார்க்கும் அனுபவம், இதில் கும்பலாக அமர்ந்து மருதாணி இடும் வைபவம்.

வீட்டுக்குள்ளே மினி ஹாஸ்டல் நடத்தும் அளவுக்கு மக்கள் செல்வம் பெருகி இருந்த காலம் என்பதால் கலகலப்புக்கு பஞ்சமா? இதில் உறவுகளின் வாரிசுகளின் ஐக்கியம் வேறு. இத்தன்னை கொண்டாட்டங்களும் இன்றைய பிள்ளைகளுக்கு கொடுக்க தவறிய குற்றவுணர்வு இல்லாத ஒன்றைப் பிள்ளைகளின் பெற்றோர் அரிது தான்.

மருதாணி அரைக்கும் படலம்

பறித்த மருதாணிகளை ஈர்க்கு நீக்கி, இலைகளை மட்டும் எடுத்து யூகலிப்டஸ் எண்ணெய், தேயிலை, அமிர்தாஞ்சன் என்று யார்யார் டிப்ஸ் கொடுத்தாலும் அதைக்கேட்டு மைப்போல அரைக்கும் பூவையர், அம்மிக்கல்லை சரியாக கழுவாமல் அம்மாவிடம் “அன்புமொழிகள்”, கேட்ட நாட்கள் திரும்பி வாரா! சொல் பொறுக்காத இன்றைய பிள்ளைகளை நினைத்தால் தோன்றும், “அப்ப நமக்கெல்லாம் எருமத்தோலா? இல்லை பொறுமைச்சாலிகளா?”, என்று சந்தேகம் அடிக்கடி தோன்றும்.

மருதாணி சிவப்பு

காலையில் எழுந்து மருதாணி கைகளை கழுவி யாருக்கு அதிகம் சிவந்துள்ளது எனப்பார்க்கும் போட்டி. பித்தம் அதிகம் உள்ள உடல்வாகுக்கு கருஞ்சிவப்பு, சிலருக்கு இளஞ்சிவப்பு, இன்னும் சிலருக்கு செம்பருத்தி சிவப்பு என்று ஒரே மருதாணி கலவை ஆனால் ரிசல்ட் வேற வேற .

மருதாணி நன்கு சிவந்தால் வரப்போகும் மாப்பிள்ளை ரொம்ப ஆசையாக இருப்பார் என்ற கேலிப் பேச்சில் வெட்கிச்சிவக்கும் தாவணிப்பறவைகள். இப்போது அந்த இளங்கிளிகளின் முகத்தில் அப்பியிருக்கும் மருதாணி சிவப்பு.

தொழில்நுட்பங்கள் ஆக்ரமிக்காத காலம் என்பதால் அன்றைய அரை மணி நேர நிகழ்வு பற்றி இன்று நினைத்தால் கூட இனிக்கிறது. அன்றைய மருதாணி நினைவுகள் கூட சிவக்கிறது.


Marudhani/Henna Paste is made using the leaves of henna plant. Grind leaves using mixer or grindstone by adding water to make paste. It is applied on hands before celebrations or festive occasions. There are some traditional maruthani patterns/designs followed till now. Health benefits of henna include its ability to relieve headaches, detoxify the body, improve nails, protect the skin, boost hair health, cool the body, reduce inflammation, and speed healing.


The post மருதாணி அரைப்போமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/grind-maruthani/feed/ 0 2382
ஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி https://tamilnewslive.com/women/flashing-afghan-kuchi-jewellery/ https://tamilnewslive.com/women/flashing-afghan-kuchi-jewellery/#respond Tue, 26 Jun 2018 13:16:46 +0000 https://tamilnewslive.com/?p=2373 நாகரீக போதையில் இருப்பவர்களுக்கு எப்போதுமே எதிலும் புதுமை, முதன்முதலில் தான் மட்டுமே புதிய வகை ஆடை, நகைகள் அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்களை போன்றவர்களின் தேடல், ரசனையை பூர்த்தி செய்ய ஆடை வடிவமைப்பாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள் அனைவரும் பாரிஸ் நகரை முற்றுகை இடுவதில்லை. அதற்கு பதிலாக பழங்கால கோவில்கள், பழங்குடியின மக்கள் என்று அவர்களின் தேடல் நம் நினைத்திராத விதத்தில் உள்ளது. இவ்வாறு அறிமுகமானதே நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் பழங்குடி மக்களின் நகைகள். […]

The post ஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி appeared first on Tamil News Live.

]]>
நாகரீக போதையில் இருப்பவர்களுக்கு எப்போதுமே எதிலும் புதுமை, முதன்முதலில் தான் மட்டுமே புதிய வகை ஆடை, நகைகள் அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்களை போன்றவர்களின் தேடல், ரசனையை பூர்த்தி செய்ய ஆடை வடிவமைப்பாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள் அனைவரும் பாரிஸ் நகரை முற்றுகை இடுவதில்லை.

அதற்கு பதிலாக பழங்கால கோவில்கள், பழங்குடியின மக்கள் என்று அவர்களின் தேடல் நம் நினைத்திராத விதத்தில் உள்ளது. இவ்வாறு அறிமுகமானதே நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் பழங்குடி மக்களின் நகைகள்.

ஆப்கன் அதாவது ஆப்கானிஸ்தான் பழங்குடி மக்களின் கைவண்ணத்தில் உருவான நகைகள் இன்றைய பெண்களின் பெருவிருப்பம். நவநாகரீக உடைகளுக்கு இந்த ஆப்கன் நகைகள் பொருந்துவது தான் அழகிய முரண்.

ஆப்கன் குசி நகைகள் (afgan Kuchi jewels)

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைகளில் வசிக்கும் பாஸ்டூன் பழங்குடி மக்கள் (pashtoon tribes) அணியும் அணிகலன்கள் தான். குசி (Kuchi jewels) என்றால் பெர்ஷிய மொழியில் நகர்தல் என்று பொருள் தரும். பாஸ்டூன் பழங்குடி மக்களும் நாடோடிகள் தான்.

ஆப்கன் குசி நகைகள் பயன்பாடு

இந்த வகை நகைகள் ஆப்கானிஸ்தானில் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா மற்றும் சோவியத் நாடுகள் வரை பரவியுள்ளது. பழங்கால டிசைன்களை இன்றும் பெண்கள் விரும்புவது அதன் அழகை நமக்கு பறைசாற்றுகிறது.

குசி நகைகள் (making of Kuchi jewels)

இந்த வகை நகைகளை காசுகள், மணிகள், பெரிய கண்ணாடி துண்டுகள் கொண்டு செய்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கலை இது. இந்த நகைகளின் தாக்கம் இந்திய கலாச்சாரத்திலும் உள்ளது.

பழங்காலத்தில் 90% வெள்ளியில் தான் நகைகள் செய்தார்கள். இப்போது வெள்ளி மற்றும் நிக்கல், வெண்கலம் போன்ற உலோகங்களில் கூட செய்கிறார்கள். தினசரி உபயோகத்திற்கு, விழாக்களுக்கு என்று விதவிதமாக செய்கிறார்கள்.

பெல்லி டான்ஸ் பெல்ட் (belly dance hip belt)

Hip Belt உலக பிரசித்தி பெற்ற பெல்லி நடனத்திற்க்கான அத்தனை அணிகலன்களும் ஆப்கன் குசி நகைகள் அடிப்படையில் செய்யப்பட்டது தான்.

எல்லாவிதமான நவீன ஆடைகளுக்கும் இந்த நகைகள் அழகாக இருக்கிறது என்பது தான் கூடுதல் அம்சம். வாங்கக்கூடிய விலையில் கைவேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் நகைகள் உலகெங்கும் பரவட்டும்!


“Kuchi”, an Afghan Persian word meaning ‘those who go on migrations’. Kuchi Jewels are traditional ethnic style of jewellery associated with Pashtoon tribes. Pashtuns also called ethnic Afghan tribes are predominantly an Eastern Iranian people, who are the largest ethnic group in Afghanistan and the second largest in Pakistan. Kuchi Jewelry is marked by signature features such as use of coins, bells and colorful hand cut glass to produce colorful combinations in form of chokers, necklaces, earrings and cuffs. Belly Dance Accessories are fully designed on the basis of Afghan Kuchi Jewels.


The post ஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/women/flashing-afghan-kuchi-jewellery/feed/ 0 2373
உடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! https://tamilnewslive.com/health-tips/sweet-potato-weight-loss/ https://tamilnewslive.com/health-tips/sweet-potato-weight-loss/#respond Tue, 26 Jun 2018 11:44:07 +0000 https://tamilnewslive.com/?p=2366 தென் தமிழகத்தில் அறுவடை காலங்களில் நெல்லுக்கு பதிலாக வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிடைக்கும். பழைய காலத்தின் பண்டமாற்று முறையை நினைவுப்படுத்தும் நிகழ்வு தான். கிராமங்களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அறுவடை காலம் என்றாலே கொண்டாட்டம் தான். மலிவாக கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு உடற்பருமனை குறைப்பதில் கில்லாடி என்பது தான் ஆச்சரியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து தான் உடல் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற […]

The post உடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on Tamil News Live.

]]>
Sarkari Vallikizhanguதென் தமிழகத்தில் அறுவடை காலங்களில் நெல்லுக்கு பதிலாக வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிடைக்கும். பழைய காலத்தின் பண்டமாற்று முறையை நினைவுப்படுத்தும் நிகழ்வு தான். கிராமங்களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அறுவடை காலம் என்றாலே கொண்டாட்டம் தான்.

மலிவாக கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு உடற்பருமனை குறைப்பதில் கில்லாடி என்பது தான் ஆச்சரியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து தான் உடல் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தோல் கொண்டவைகள்.

நார்ச்சத்து

Sweet Potatoசர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பிரத்யேக நார்ச்சத்து (dietary fibre). ஆனது எடையைக் குறைக்கிறது. அதாவது ஒருவர் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொண்டதும் அதில் உள்ள நார்ச்சத்தின் தயவால் வயிறு நிரம்பி விடுகிறது. அதனால் உணவு உட்கொள்ளும் அளவு குறைகிறது. அதுவும் இல்லாமல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்து கொள்வதால், அடிக்கடி உண்பது என்பது குறைகிறது, இதனால் உடல் தேவைக்கு அதிகமாக கலோரிகள் சேமிப்பது குறைகிறது.

கலோரி மதிப்பு குறைவு

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கலோரி மதிப்பு மிகவும் குறைவு. ஒரு கிலோ கொழுப்பின் கலோரி அளவு கிட்டத்தட்ட 3500. இதனைக் குறைக்க தினசரி 500 கலோரி மதிப்பு அளவை உடல் செலவு செய்தாக வேண்டும்.

ஒரு வேளை உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு எடுத்து கொண்டால் அதன் குறைந்த கலோரி மதிப்பு 100 கலோரி அளவு என்பதால் எடை கூடாது. அதுவே ஒரு வேளை உணவாக உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டால், அதன் கலோரி மதிப்பு 400-500 என்பதால் செலவழிக்க படாத உணவின் சக்தி உடலில் சேமிக்க படுகிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது. ஆகவே உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

நீர்ச்சத்து (High water content)

Fitnessசர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள அதிகப்படியான நீர்சத்தானது எடைக் குறைக்க உதவும். நீண்டகாலம் அல்லது குறைந்த கால நிர்ணயம் என்றாலும் கூட நல்ல பலன் அளிக்கிறது. இதன் மிதமிஞ்சிய நீர்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வு தருவதால், உணவு உட்கொள்ளும் அளவு குறைகிறது .

இதில் உள்ள விட்டமின் சி, கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் அதிக அளவில் மெதுவாக வெளியாகும் கார்போஹைட்ரேட் உள்ளது(slow release carbohydrates). நல்ல மணமும் சுவையும் உள்ள கிழங்கு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு, வெறுப்பு தராத சிறந்த உணவு.


Sweet potatoes have a relatively low calorie content. The high amount of dietary fiber, the low calorie content, and the high amount of water all work together to make sweet potatoes a great food for lose weight. As fiber is slow digesting, it highly helps people who are obese. Sweet potatoes make a good slow-release carb. They are excellent source of vitamin A in the form of beta-carotene, Vitamin C, B1, B2, B6, Calcium, Potassium, Manganese, Phosphorus.


The post உடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health-tips/sweet-potato-weight-loss/feed/ 0 2366
பட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்!!! https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/sleeping-silk-prevents-ageing/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/sleeping-silk-prevents-ageing/#respond Mon, 25 Jun 2018 16:21:11 +0000 https://tamilnewslive.com/?p=2325 இயற்கை இழைகளில் மென்மையும் அழகும் நிறைந்த இழை என்றால் பட்டுப்பூச்சியில் இருந்து கிடைக்கும் பட்டு நூல் தான். சீனர்களின் கண்டுபிடிப்பு ஆச்சே! அவர்கள் நாட்டு பெண்களின் சருமம் போல பளபளப்புடன் வலம் வரும் பட்டு இழைகள் தான் “queen of fibre”, பட்டின் அழகை விரும்பாதவர்கள் உண்டோ? ஜவுளி துறையில் பட்டின் முக்கியத்துவம் நாம் அறிவோம். பட்டு இழைகளில் உள்ள “sericin”, என்ற வெளிப்புற அடுக்கை பிரத்யேக செய்முறைகள் கொண்டு நீக்குகிறார்கள். அதன் பின்னர் பட்டு இழைகளை […]

The post பட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்!!! appeared first on Tamil News Live.

]]>
Silk Fibreஇயற்கை இழைகளில் மென்மையும் அழகும் நிறைந்த இழை என்றால் பட்டுப்பூச்சியில் இருந்து கிடைக்கும் பட்டு நூல் தான். சீனர்களின் கண்டுபிடிப்பு ஆச்சே! அவர்கள் நாட்டு பெண்களின் சருமம் போல பளபளப்புடன் வலம் வரும் பட்டு இழைகள் தான் “queen of fibre”, பட்டின் அழகை விரும்பாதவர்கள் உண்டோ?

ஜவுளி துறையில் பட்டின் முக்கியத்துவம் நாம் அறிவோம். பட்டு இழைகளில் உள்ள “sericin”, என்ற வெளிப்புற அடுக்கை பிரத்யேக செய்முறைகள் கொண்டு நீக்குகிறார்கள்.

அதன் பின்னர் பட்டு இழைகளை அறுவைச் சிகிச்சையின் போது தைக்கும் நூலாக பயன்படுத்துகின்றனர்.
இயற்கை இழை என்பதால் மனித உடலில் பெரிதாக ஒவ்வாமை ஏற்படுத்துவது இல்லை. ஆகவே தான் பட்டு நூல் மனித சருமத்திற்கு நன்மை தான் செய்கிறது.

அழகை மெருகேற்றும் பட்டு

பட்டு புடவையை உடுத்தும் எந்த வயது பெண்ணும் கம்பீரமான அழகோடு வலம் வருவது உலகறிந்த உண்மை. அழகு குறைந்தாலே பதறும் பெண்களுக்கு தான் தெரியும், வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கம் எல்லாம் எந்த அளவுக்கு மன உளைச்சல் தருமென்று. இயற்கையை அதன் போக்கில் ஏற்று கொள்பவர்களுக்கு இந்த வயதான தோற்றம் கம்பீரமே!

பட்டு தலையணை உறை (silk pillow cover)

Silk Pillowபட்டு தலையணை உறையின் விலை அதிகம் என்றாலும் அதன் பயன் கண்டு பணம் மிஞ்சியவர்கள் அஞ்ச மாட்டார்கள். பட்டு துணியால் ஆன தலையணை உறை முகத்தில் உள்ள சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும். எனவே தோல் சுருக்கம் ஏற்படாமல் பட்டுக்கன்னம் சாத்தியமாகிறது.

பட்டு கூந்தல்க்கு பட்டு தலையணை உறை

Silk Pillow Coverமற்ற வகை துணிகளால் ஆன தலையணை உறையை விட, பட்டு தலையணை உறையில் கூந்தலுடன் ஆன உராய்வு குறைகிறது. ஆகவே கூந்தல் ஆரோக்கியமாக பளபளப்பாக மற்றும் மென்மையாக உள்ளது.

ஒவ்வாமை தவிர்!

பிற செயற்கை இழைகள் கொண்டு தயார் செய்த தலையணை உறைகளால், ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பட்டு இழைகள் இயற்கை இழைகள் என்பதால் அதில் எந்தவித வேதிப்பொருட்கள் கிடையாது ஆகவே பயன்படுத்துவோர்க்கு ஒரு தீங்கும் ஏற்படுத்துவதில்லை.


Silk – Queen of Fibres. Silk is known to cause less breakage of hair (which can cause split ends) because it is naturally a smoother surface. Silk pillowcases provide benefits to your skin and hair through reduced friction. When you wake up after sleeping on a silk pillowcase, your face will be better hydrated than if you slept on cotton. This is a great beauty tip for those with dry, flaky skin. It has been proven that silk prevents ageing. Silk contains a natural protein and 18 essential amino acids. Skin and hair heal themselves while sleeping on silk.


The post பட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/sleeping-silk-prevents-ageing/feed/ 0 2325
மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி? https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/#respond Mon, 25 Jun 2018 14:38:00 +0000 https://tamilnewslive.com/?p=2309 மழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான். மழையில் கரையும் மனிதர்கள் அவர்கள். மழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது […]

The post மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
மழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான்.
மழையில் கரையும் மனிதர்கள் அவர்கள்.

மழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தனிக்கதை.

மழைக்காலம் பெண்களுக்கு இரட்டைச் சுமை, தன்னையும் காத்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். இந்த அழகிய மழை பெண்களின் அழகிய கூந்தலை எப்படி பாதிக்கிறது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதை அலசுவோம்!

முடி உதிர்தல்

Hair careசர்வசாதாரணமாக தலைக்கு குளிக்கும் போது ஐம்பது முதல் நூறு முடி வரை உதிரும் என்றால், மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடி 200 வரை உதிரும். இதற்கு தீர்வு தலை முடியினை ஈரம் இல்லாமல், உலர்வாகவே வைக்கவும்.

கூந்தலுக்கான வேதிப்பொருட்களை தவிருங்கள்! (avoid hairstyle products)

காற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை (hair colouring, gel…etc) தவிருங்கள். இவை கூந்தலை மேலும் எண்ணெய் பிசுக்கு போலாக்கும். இதனால் முடி உதிர்வதோடு மட்டுமின்றி பொடுகு வேறு ஏற்படும்.

புரோட்டின் உள்ள உணவை உண்ணுங்கள்!

Protein Contentகூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.

மிதமான ஷாம்புவை பயன்படுத்தவும்! (use mild shampoo)

மழையில் நனையும் சூழல் வாய்த்தால், தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்! (Use hair conditioner properly )

கூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை  பயன்படுத்துங்கள். இயன்ற பொழுதெல்லாம் கறிவேப்பிலை சாறு அருந்துங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்காலம் என்றாலும் கூட நிறைய தண்ணீர் குடிக்கவும்.

மழை மனிதர்க்கு இன்றியமையாதது என்றால் முடி மங்கையர்க்கு அழகிய சொத்து. மழையை போற்றி, முடியை காப்பாற்றுவோம். சில நிமிடங்களின் மெனக்கெடல்கள் நமது சிகையலங்காரத்தை மெருகேற்றும்  என்பதில் ஐயமில்லை.

Main reason for hair fall during monsoon is excess humidity in the air. Use of chemical based products mainly during this season will make hair very greasy. Besides feeling icky and causing hair fall, it can also damage scalp and cause dandruff too. Select protein rich foods to eat such as egg, fish, cereals, dry fruits, carrot, spinach, milk. Protein is the important source for hair growth as it strengthen hair follicles, which in turn prevents hair fall. Use mild shampoos and conditioner properly to prevent hair fall or hair loss.


The post மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/feed/ 0 2309