கண்ணைப்போல இமைமுடிகளை காப்போம்!

Eyes

பெண்களுக்கு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் உணர்வுகளை வெளிக்காட்டும் பெரிய கண்கள் அழகு என்றால், கண்களுக்கு அழகு சேர்ப்பது வில்லென வளைந்த புருவம் மற்றும் பளிச்சென்று தெரியும் அடர் இமை முடிகள் தான்.

கண் இமைகள் அழகிற்க்காக மட்டும் அல்ல, கண்களை தூசிகளில் இருந்து பாதுகாப்பதே முக்கிய பயன். எல்லொருக்கும் அழகான கண்களும், அடர்த்தியான இமைமுடிகளும் வாய்ப்பதில்லை. அதற்காக சோர்வு கொள்ள வேண்டாம். கண்பார்வை இல்லாதவர்களும் நம் முன்னே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் இமை முடிகள் பிரச்சினை பெரிதன்று. தீர்வு காண கூடிய சிறு பிரச்சினை தான்.

இமை முடிகளில் புரோட்டின்

இமை முடிகள் 90% கரோட்டின் மற்றும் மெலனின் எனும் புரோட்டினாலும், 10% நீராலும் ஆனது. சராசரியாக 75 லிருந்து 200 இமை முடிகள் வரை இருக்கும். கீழ் இமை, மேல் இமை எல்லாம் சேர்த்து தான். தினசரி இமை முடிகள் உதிர்வதும், புதிதாக வளர்வதும் சுழற்சி போல் நடந்து வருகிறது.

உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ள சரிவிகித உணவு மூலம் இமை முடிகள் அடர்த்தியாக வளரும். மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளவாறு மெனுவை மாற்றிக்கொள்ளுங்கள்.

இமை முடிகள் உதிர காரணங்கள்

* தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால் அல்லது அதிகமாக சுரப்பதாலும் இமை முடிகள் உதிரும்.

* சில மாத்திரைகள், புற்றுநோய் சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சக்தியை தாக்கும் நோய்களாலும் இமை முடிகள் உதிரும்.

* போதிய சத்துக்கள் இல்லாத உணவு. குறிப்பாக புரதப் பற்றாக்குறை

* எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற தோல் வியாதிகள்.

* மேக்கப் சாதனங்களால் வரும் அலர்ஜி

இமை முடிகள் பாதுகாப்பு

Wash Eyes

இமை முடிகள் உதிராமல் இருக்க வேண்டுமெனில் கண்களை கசக்க கூடாது. அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.சத்துள்ள ஆகாரம் மூலம் இயற்கையாக வளரும். தரமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தவும்.

தினசரி விளக்கெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கைக்கு செல்லும் முன் இமைகள், புருவங்கள் மீது தடவி வரவும். நாளடைவில் அடர்த்தியான இமைமுடிகள் வளரும். ஆரோக்கியமும் அழகும் ஒருங்கிணைந்தது.


Eyelashes meant to protect eyes. It helps to tell eyelids when they need to blink for protecting eyes from debris. It is estimated that losing 1-4 eyelashes per day is considered normal. Healthy Diet Foods rich in protein and vitamins helps eyelash hair grow. Foods such as fish, eggs, beans and yogurt. Soy protein helps to simulate eyelash growth. Apply Castor oil or Olive oil to lashes to make it grow streonger, thicker and faster.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas