பல்வேறு விதமான கைவினை கலைஞர்கள் கொண்ட நாடு நமது பாரதம். ஆடை, அணிகலன்கள் அதன் தனித்துவமான டிசைனாலும், அழகாலும் உலகப்புகழ் பெற்றுள்ளது. நாகரீகமான ஆடை, அலங்காரம் எனும் போது பாதங்களை காக்கும் காலணிகள் இல்லாமலா? ஆடம்பரமான உடைக்கு, கலைநயமிக்க கோல்ஹாபுரி காலணிகள் இன்னும் அழகூட்டுபவை.
கோல்ஹாபுரி காலணிகள்
காலணியின் வரலாறு
பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து இந்த வகை காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. எருமை மாட்டு தோலை தாவர சாறுகள் கொண்டு செய்யப் பட்ட சாயங்களால் பதப்படுத்தப் படுகிறது.
காலணிகள் தயாரிப்பு
ஒரு ஜோடி செருப்பை செய்து முடிக்க ஆறு வாரங்கள் ஆகிறது. முழுக்க முழுக்க கைகளால் செய்கின்றனர். எருமைமாட்டுத் தோலை, சேகரித்து இயற்கை முறையில் அதனை பதப்படுத்தி, வேண்டிய அளவுகளில் அந்த தோலில் இருந்து மோல்டுகளின் உதவியால் வெட்டுகிறார்கள்.
ஹிப்பிகளின் காலத்தில் அமெரிக்காவில் கோல்ஹாபுரி காலணிகள் மிக பிரபலமாக இருந்தது. எல்லா கைவினை தொழில்கள் போல இந்த தொழிலும் நசிந்து வருகிறது. இதன் நீடித்த உழைப்பு மற்றும் அழகுக்காக கோல்ஹாபுரி காலணிகளுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்.
Kolhapuri Chappals or Kolhapuris are originated from a southern district in the state of Maharashtra, Kolhapur and these chappals were first worn in the early 13th century. It is now a world famous handcrafted footwear made form leather. These chappals are a style of open-toed, T-strap sandal. These are used during festivals as well as day to day purpose. It is available as shoes, chappals, sandals for women, men and it is designed in different types to meet expectation.