ஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி

நாகரீக போதையில் இருப்பவர்களுக்கு எப்போதுமே எதிலும் புதுமை, முதன்முதலில் தான் மட்டுமே புதிய வகை ஆடை, நகைகள் அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்களை போன்றவர்களின் தேடல், ரசனையை பூர்த்தி செய்ய ஆடை வடிவமைப்பாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள் அனைவரும் பாரிஸ் நகரை முற்றுகை இடுவதில்லை.

அதற்கு பதிலாக பழங்கால கோவில்கள், பழங்குடியின மக்கள் என்று அவர்களின் தேடல் நம் நினைத்திராத விதத்தில் உள்ளது. இவ்வாறு அறிமுகமானதே நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் பழங்குடி மக்களின் நகைகள்.

ஆப்கன் அதாவது ஆப்கானிஸ்தான் பழங்குடி மக்களின் கைவண்ணத்தில் உருவான நகைகள் இன்றைய பெண்களின் பெருவிருப்பம். நவநாகரீக உடைகளுக்கு இந்த ஆப்கன் நகைகள் பொருந்துவது தான் அழகிய முரண்.

ஆப்கன் குசி நகைகள் (afgan Kuchi jewels)

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைகளில் வசிக்கும் பாஸ்டூன் பழங்குடி மக்கள் (pashtoon tribes) அணியும் அணிகலன்கள் தான். குசி (Kuchi jewels) என்றால் பெர்ஷிய மொழியில் நகர்தல் என்று பொருள் தரும். பாஸ்டூன் பழங்குடி மக்களும் நாடோடிகள் தான்.

ஆப்கன் குசி நகைகள் பயன்பாடு

இந்த வகை நகைகள் ஆப்கானிஸ்தானில் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா மற்றும் சோவியத் நாடுகள் வரை பரவியுள்ளது. பழங்கால டிசைன்களை இன்றும் பெண்கள் விரும்புவது அதன் அழகை நமக்கு பறைசாற்றுகிறது.

குசி நகைகள் (making of Kuchi jewels)

இந்த வகை நகைகளை காசுகள், மணிகள், பெரிய கண்ணாடி துண்டுகள் கொண்டு செய்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கலை இது. இந்த நகைகளின் தாக்கம் இந்திய கலாச்சாரத்திலும் உள்ளது.

பழங்காலத்தில் 90% வெள்ளியில் தான் நகைகள் செய்தார்கள். இப்போது வெள்ளி மற்றும் நிக்கல், வெண்கலம் போன்ற உலோகங்களில் கூட செய்கிறார்கள். தினசரி உபயோகத்திற்கு, விழாக்களுக்கு என்று விதவிதமாக செய்கிறார்கள்.

பெல்லி டான்ஸ் பெல்ட் (belly dance hip belt)

Hip Belt

உலக பிரசித்தி பெற்ற பெல்லி நடனத்திற்க்கான அத்தனை அணிகலன்களும் ஆப்கன் குசி நகைகள் அடிப்படையில் செய்யப்பட்டது தான்.

எல்லாவிதமான நவீன ஆடைகளுக்கும் இந்த நகைகள் அழகாக இருக்கிறது என்பது தான் கூடுதல் அம்சம். வாங்கக்கூடிய விலையில் கைவேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் நகைகள் உலகெங்கும் பரவட்டும்!


“Kuchi”, an Afghan Persian word meaning ‘those who go on migrations’. Kuchi Jewels are traditional ethnic style of jewellery associated with Pashtoon tribes. Pashtuns also called ethnic Afghan tribes are predominantly an Eastern Iranian people, who are the largest ethnic group in Afghanistan and the second largest in Pakistan. Kuchi Jewelry is marked by signature features such as use of coins, bells and colorful hand cut glass to produce colorful combinations in form of chokers, necklaces, earrings and cuffs. Belly Dance Accessories are fully designed on the basis of Afghan Kuchi Jewels.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas