மலிவாக கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு உடற்பருமனை குறைப்பதில் கில்லாடி என்பது தான் ஆச்சரியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து தான் உடல் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இரண்டு வகை உண்டு. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தோல் கொண்டவைகள்.
நார்ச்சத்து
கலோரி மதிப்பு குறைவு
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கலோரி மதிப்பு மிகவும் குறைவு. ஒரு கிலோ கொழுப்பின் கலோரி அளவு கிட்டத்தட்ட 3500. இதனைக் குறைக்க தினசரி 500 கலோரி மதிப்பு அளவை உடல் செலவு செய்தாக வேண்டும்.
ஒரு வேளை உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு எடுத்து கொண்டால் அதன் குறைந்த கலோரி மதிப்பு 100 கலோரி அளவு என்பதால் எடை கூடாது. அதுவே ஒரு வேளை உணவாக உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டால், அதன் கலோரி மதிப்பு 400-500 என்பதால் செலவழிக்க படாத உணவின் சக்தி உடலில் சேமிக்க படுகிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது. ஆகவே உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து (High water content)
இதில் உள்ள விட்டமின் சி, கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் அதிக அளவில் மெதுவாக வெளியாகும் கார்போஹைட்ரேட் உள்ளது(slow release carbohydrates). நல்ல மணமும் சுவையும் உள்ள கிழங்கு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு, வெறுப்பு தராத சிறந்த உணவு.
Sweet potatoes have a relatively low calorie content. The high amount of dietary fiber, the low calorie content, and the high amount of water all work together to make sweet potatoes a great food for lose weight. As fiber is slow digesting, it highly helps people who are obese. Sweet potatoes make a good slow-release carb. They are excellent source of vitamin A in the form of beta-carotene, Vitamin C, B1, B2, B6, Calcium, Potassium, Manganese, Phosphorus.