பட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்!!!

Silk Fibre

இயற்கை இழைகளில் மென்மையும் அழகும் நிறைந்த இழை என்றால் பட்டுப்பூச்சியில் இருந்து கிடைக்கும் பட்டு நூல் தான். சீனர்களின் கண்டுபிடிப்பு ஆச்சே! அவர்கள் நாட்டு பெண்களின் சருமம் போல பளபளப்புடன் வலம் வரும் பட்டு இழைகள் தான் “queen of fibre”, பட்டின் அழகை விரும்பாதவர்கள் உண்டோ?

ஜவுளி துறையில் பட்டின் முக்கியத்துவம் நாம் அறிவோம். பட்டு இழைகளில் உள்ள “sericin”, என்ற வெளிப்புற அடுக்கை பிரத்யேக செய்முறைகள் கொண்டு நீக்குகிறார்கள்.

அதன் பின்னர் பட்டு இழைகளை அறுவைச் சிகிச்சையின் போது தைக்கும் நூலாக பயன்படுத்துகின்றனர்.
இயற்கை இழை என்பதால் மனித உடலில் பெரிதாக ஒவ்வாமை ஏற்படுத்துவது இல்லை. ஆகவே தான் பட்டு நூல் மனித சருமத்திற்கு நன்மை தான் செய்கிறது.

அழகை மெருகேற்றும் பட்டு

பட்டு புடவையை உடுத்தும் எந்த வயது பெண்ணும் கம்பீரமான அழகோடு வலம் வருவது உலகறிந்த உண்மை. அழகு குறைந்தாலே பதறும் பெண்களுக்கு தான் தெரியும், வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கம் எல்லாம் எந்த அளவுக்கு மன உளைச்சல் தருமென்று. இயற்கையை அதன் போக்கில் ஏற்று கொள்பவர்களுக்கு இந்த வயதான தோற்றம் கம்பீரமே!

பட்டு தலையணை உறை (silk pillow cover)

Silk Pillow

பட்டு தலையணை உறையின் விலை அதிகம் என்றாலும் அதன் பயன் கண்டு பணம் மிஞ்சியவர்கள் அஞ்ச மாட்டார்கள். பட்டு துணியால் ஆன தலையணை உறை முகத்தில் உள்ள சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும். எனவே தோல் சுருக்கம் ஏற்படாமல் பட்டுக்கன்னம் சாத்தியமாகிறது.

பட்டு கூந்தல்க்கு பட்டு தலையணை உறை

Silk Pillow Cover

மற்ற வகை துணிகளால் ஆன தலையணை உறையை விட, பட்டு தலையணை உறையில் கூந்தலுடன் ஆன உராய்வு குறைகிறது. ஆகவே கூந்தல் ஆரோக்கியமாக பளபளப்பாக மற்றும் மென்மையாக உள்ளது.

ஒவ்வாமை தவிர்!

பிற செயற்கை இழைகள் கொண்டு தயார் செய்த தலையணை உறைகளால், ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பட்டு இழைகள் இயற்கை இழைகள் என்பதால் அதில் எந்தவித வேதிப்பொருட்கள் கிடையாது ஆகவே பயன்படுத்துவோர்க்கு ஒரு தீங்கும் ஏற்படுத்துவதில்லை.


Silk – Queen of Fibres. Silk is known to cause less breakage of hair (which can cause split ends) because it is naturally a smoother surface. Silk pillowcases provide benefits to your skin and hair through reduced friction. When you wake up after sleeping on a silk pillowcase, your face will be better hydrated than if you slept on cotton. This is a great beauty tip for those with dry, flaky skin. It has been proven that silk prevents ageing. Silk contains a natural protein and 18 essential amino acids. Skin and hair heal themselves while sleeping on silk.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas